செவ்வாய், 9 ஜனவரி, 2018

திருமண வாழ்க்கையில் சுபயோகங்களை நல்கும் 2,7ம் வீடுகளின் வலிமை !



 திருமண வாழ்க்கையில் பொருத்தமான கணவன் அமைவதும், மனைவி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்றால் அது மிகையில்லை, பொதுவாக இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்கும் ஆணோ அல்லது பெண்ணோ தனது சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும் தெளிவாக தெரிந்து இருப்பது இனிமையான இல்லற வாழ்க்கையை நடத்தி செல்ல உறுதுணை புரியும், தமது ஜாதக வலிமையை உணர்ந்து, தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக உணர்ந்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதில் கணவன் மனைவி இருவருக்கும் சமமான பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது, பெரும்பாலும் தமது சுய ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் தனது வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கையும், எதிர்ப்பு மனநிலையையும் கொண்டு இருப்பது என்பது, தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தந்துவிடும், உதாரணமாக கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதக நிலையை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மனைவி ஜாதகம் :


லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை கணவனுடன் இணைபிரியாமல் வாழ்வதே பெண்களுக்கு பாதுகாப்பானது, இதை ஆணாதிக்கம் என்று விமர்ச்சிக்கும் அன்பர்கள் ஜோதிடதீபத்தின் மீதி விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறது, ஏனெனில் இந்த கலியுகத்தில் குடும்பம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனியாக இயங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களது இடத்தில் இருந்து உற்று நோக்கினால் நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிய வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகிக்கு தனது நெருங்கிய உறவு வழியில் இருந்து நல்ல மனம் கொண்ட ஓர் அன்பர் தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார் ( இந்த பெண்ணின் சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக கூறியும் ) அவரின் பெருந்தன்மையை உணராத இந்த பெண் செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்திற்கு உரியது,  பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக ஜாதகிக்கு நல்ல யோகம் மிக்க வாழ்க்கை துணை கிடைத்த போதிலும்,  தனது ஜாதக வலிமை பற்றிய விபரம் அறியாமல் தான் செய்யும் காரியங்கள் சரியென பிடிவாதம் செய்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், இனிமையான பேச்சு திறன் இன்மை, வாக்குவாதம், தனது வாக்கின் வழியில் இருந்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்கும் தன்மை, வருமானம் இன்மை, அதீத விரைய செலவுகள், தேவையற்ற செலவினங்கள், பெரியவர்களை மதித்து நடக்காத தன்மை, உதாசீனப்படுத்தும் குணம், நிதி மேலாண்மை அற்ற தன்மை என கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவது தனது கணவனுக்கு தேவையற்ற வீண் செலவினங்களை தரும் அமைப்பையும், அதிக மனஉளைச்சலையும் தரும்.

6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் நிலையை தரும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி மனநிம்மதியை இழந்து போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையை தரும் , வயிறு சார்ந்த தொந்தரவுகள் ஜாதகிக்கு கடுமையான பாதிப்பை தரும், எதிர்வாதம்  செய்யும் குணம் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவது தனது மனநிம்மதியை ஜாதகியே கெடுத்துக்கொண்டு இன்னலுறும் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் அனைத்தும் முரண்பட்ட தன்மையுடன் காணப்படும் என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன யோகம் அற்றவர், தாம்பத்திய வாழ்க்கையில் மனஅழுத்தத்தை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் மனம் ஓர் நிலையில் இல்லாமல் அலைபாயும் தன்மையுடன் காணப்படும், தெளிவில்லாத முடிவுகளால், ஜாதகியின் எதிர்காலத்தை ஜாதகியே பாதிப்பிற்கு ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்துவார், பொறுமையை கையாளும் வல்லமை இராது, சுய அறிவும் ஜாதகிக்கு  பலன் தர வாய்ப்பில்லை, அனைவராலும் தொல்லை தொந்தரவு, உடல் நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என ஜாதகியின் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தரும், கணவன் மனைவி அன்னியோனிய  வாழ்க்கை வெகுவாக பாதிக்கும்.

9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் தடை, மூர்க்கத்தனமான செயல்பாடுகள், பெரியோரை அவமதிக்கும் குணம், கீழ்த்தரமான செயல்பாடுகள், மனநிம்மதி இன்மை, வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை தரும் தன்மை, விபத்துகளில் கடுமையான பாதிப்பு  என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகி நற்ப்பெயர் எடுப்பது வெகு சிரமம், சிறிதும் இறைஅருள் கிடைக்காது, பித்ரு சாபம் ஜாதகியின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பெற்றோருக்கும் ஜாதகிக்கும் கடுமையான பாதிப்புகளை தரும், ஜாதகியின் குணம் மற்றவர்கள் போற்றும் வண்ணம் இருக்காது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, புறம்பேசுதல் என ஜாதகியின் குணம் அடிப்படையிலே சிறப்பாக அமையாது, மேலும் ஜாதகியினால் தந்தைக்கும், தந்தையால் ஜாதகிக்கு துரதிர்ஷ்டங்கள் உண்டாகும், ஜாதகியின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக அவரது  தந்தையே அமைவார், ஜாதகியினால் அவரது தந்தைக்கு கடும் பொருளாதார  நெருக்கடிகள் உண்டாகும், ஜாதகியினால் அவரது தந்தை பரதேஷ ஜீவனத்தை மேற்கொண்டு கவுரவம் இழப்பார், சுக ஸ்தானம் வலுவிழப்பது ஜாதகிக்கு அடிப்படை குணாதிசயமே சிறப்பாக அமையாது, அனைவருடன் எதிர்ப்பு மனநிலையையும், மோதல் போக்கையும் கடைபிடிக்கும் சூழ்நிலையை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ஜீவனம் என்பதே சரியாக அமையாது என்பதுடன் மிக கடுமையான கவுரவ குறைவை தரும், ஸ்திரமான மனநிலை இல்லாத  காரணத்தால் மனநிம்மதி கெடும், தனது தாயார் வழியில் இருந்து யாதொரு சுப பலன்களையும் ஜாதகியால் அனுபவிக்க இயலாது, வீண் பகட்டும், வெட்டி கவ்ரவமும் ஜாதகிக்கு பெருத்த அவமானங்களை தரும், ஜாதகியின் இல்லற வாழ்க்கை பாதிப்பிற்கு ஜாதகியின் தாயாரே அடிப்படை காரணமாக இருப்பர் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை, தனது ஜாதகம் ஓர் வலிமையற்ற ஜாதகம் என்பதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கூட ஜாதகிக்கு இருக்காது என்பது வேதனைக்குரியது.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் தொடர்புகள் எதுவெனில் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதேயாகும், எனவே ஜாதகியின் வாழ்க்கையில் நடைபெறும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக அவர்களது பெற்றோரே இருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகியாலும் அவர்களது பெற்றோர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது உகந்ததல்ல, மேலும் சுக்கிரன் திசையில் கேது புத்தியும் 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்  9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், எனவே ஜாதகி தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை குறைவை கருத்தில் கொண்டு தனக்கு அமைந்த வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதே சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும், மேலும் ஜாதகி தனது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனது கணவர் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத்தரும், மேலும் தனது  கணவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக நடத்தி செல்ல இயலும், 5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குழந்தை வழியில் இருந்து கவுரவம் அந்தஸ்து, யோக வாழ்க்கை என சிறப்பான நன்மைகளை பெற முடியும், ஜாதகிக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் 5,7ம் பாவக ஆதிபத்தியம் பெற்ற தனது குழந்தை மற்றும் கணவன் வழியில் இருந்து மட்டுமே சுபயோக வாழ்க்கையை பெற இயலும் என்பதை  கருத்தில் கொள்வது நலம் தரும்.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் யோக நிலையில் இருப்பது ஜாதகியின் களத்திர ஸ்தான வலிமை வழங்கும் ஓர் நல்ல  வாய்ப்பு என்பதை உணர்வது அவசியமாகிறது, ஜாதகியின் கணவர் ஜாதக  வலிமையை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஓர் வலிமை பெற்ற யோக ஜாதகம் எதுவென்றால் மேற்கண்ட ஜாதகத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 8ம் பாவகத்தை  தவிர ( இருப்பினும் பூரண ஆயுள் உண்டு ) மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, கலியுகத்தில் ஒருவர் யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்க வலிமை பெற வேண்டிய ராசி எதுவென்றால்  அது கடக ராசியென்று உறுதியாக சொல்லலாம் ( கடக ராசி ஜாதகருக்கு  எந்த பாவகமாக வேண்டுமானாலும் அமையலாம் ) மேற்கண்ட ஜாதகருக்கு கடகம் லாப ஸ்தானமாக அமைந்து 100% விகித வலிமையை பெறுவது ஜாதகரின் சுபயோக அமைப்பை மிக தெளிவாக கூறுகிறது, ஜாதகரின்  1,5,7,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, மேலும் 2,3,6,9,10,12ம் வீடுகள் அனைத்தும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறையருளின் பரிபூர்ண கருணையை பெற்ற சிறந்த மனிதர் என்பதை தெளிவு படுத்துகிறது, 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பெருந்தன்மையான குணத்தையும், ஒழுக்கம் நிறைந்த நன்னடத்தையும் பெற்றவர் என்பதையும் மிக தெளிவாக கூறுகிறது, எனவே இதை போன்ற ஓர் யோக ஜாதகம் அமைவதே அரிதிலும் அரிது, இதை உணராமல் ஜாதகி தனது செயலே சரியென்று வாதம் செய்தால் இழப்புகள் அனைத்தும் ஜாதகிக்கே என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலும் நிறைய தம்பதியர் மேற்கண்ட ஜாதகி போல் தவறான அணுகுமுறையை பின்பற்றி தனது இல்லற வாழ்க்கைக்கு தானே தீமையை தேடிக்கொண்டு  இன்னலுறுகின்றனர், நமது ஜாதகம் வலுவின்றி காணப்பட்டால் நம்மை சார்ந்தவர்களின் ஜாதகம் எது வலிமையுடன் உள்ளதோ அவர்களுடன் இணக்கமுடன் இருந்து நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம் ஆகும், குறிப்பாக கணவன் மனைவி உறவுகளில் உள்ளவர்கள், இதை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகிறது, வலிமை பெற்ற ஜாதகத்தை பெற்ற கணவனையோ, மனைவியையோ பெற்றவர்கள் அவர்களின்  அரவணைப்பில் யோக வாழ்க்கை சுவீகரிப்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது .

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பே தனது சுய ஜாதக வலிமையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே இல்லற வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், திருமணத்திற்கு பிறகு சரி செய்வது என்பது இயலாத காரியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக