ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குவது சுய ஜாதகம், சுய ஜாதகத்தை இயக்குவது ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பாவகங்களின் வலிமை அல்லது வலிமை அற்ற நிலை நிர்ணயம் செய்யப்படுகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை மிக எளிதாக பெறுவார், லக்கினம் பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை சற்று கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், லக்கினம் பாதிப்படைவது என்பது 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு லக்கினம் வலிமையற்ற தன்மையை பெறுவதற்கு காரணமாக அமையும்.
ஜென்ம லக்கினம் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானதல்ல, ஏனெனில் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிப்பதென்பது இயலாத நிலையை தரும், ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், ஜாதகருக்கு லக்கினம் சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் நலக்குறை, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, கடன், எதிரி தொந்தரவு, எதிர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையில் தோல்வி, தனது உடலையும் மனதையும் தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்ளும் மனநிலை என்ற அமைப்பில் இன்னல்களை தரும், ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சில விஷயங்களில் திடீர் வெற்றிகளை தந்த போதிலும், விபத்து, திடீர் இழப்பு, எதிர்பாராத பொருளாதார சிக்கல் என்ற வகையில் இன்னல்களை தரும், மருத்துவ செலவினங்கள் தொடர் பொருளாதர சிக்கல்களை அதிகரிக்கும், விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் மனம் சார்ந்த போராட்டங்களை அதிகரிக்கும், ஜாதகருக்கு வரும் பேரிழப்புகள் மீள இயலாத துன்பத்தை தரும், நம்பிக்கை இன்மையும், மனோதைரியமும் பெரிய பாதிப்பை தர கூடும், பொருளாதார சிக்கல்கள் பெரும் நெருக்கடிகளை தரும் எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் மேற்கண்ட 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையை மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக்கும்.
லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுதென்பது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் கடுமையான இன்னல்களை தருவதுடன், பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் தரும், குறிப்பாக ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் வெறும் கனவாகவே மாறிவிட வாய்ப்பு அதிகம் தெளிவற்ற சிந்தனைகள், வீண் கற்பனைகள், முரண்பட்ட வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, பொறுப்பற்ற அணுகுமுறை, உடல் மன வலிமையற்ற தன்மை, சுய நலம், பொறாமை, பிற்போக்கு தனமான சிந்தனை, குற்றம் குறை காணும் மனநிலை, சரியான கோணத்தில் புரிந்துகொள்ள இயலாத மனஇயல்பு, சமயோசித அறிவுத்திறன் இல்லாமை, போதை பொருட்கள், லாகிரி வஸ்துக்களுக்கு அடிமையாகும் தன்மை என ஜாதகரை மீள இயலாத துயரத்தில் ஆழ்த்தும் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் மட்டுமல்ல லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானததல்ல, எனவே சுய ஜாதகத்தில் வீடுகள் தாம் தொடர்பு பெரும் பாவக வழியிலான பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும் என்பதால் சுய ஜாதகத்தில் லக்கினம் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது, இதற்க்கு நல்ல உதாரணமான 2 ஜாதகங்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .
லக்கினம் வலிமை அற்ற ஜாதகம் :
லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்
ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது விபத்து, ஏமாற்றம், திடீர் இழப்பு, திடீர் உடல்நல பாதிப்பு, திடீர் பொருளாதார இழப்பு என்ற வகையில் இன்னல்களை தந்துகொண்டு இருப்பதுடன், ஜாதகரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சமூக பாராட்டுதல்களை உரியதாக அமையாதது லக்கினம் வலிமையின்மையை தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் ஆயுள் ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் 2 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை கேள்விக்குறியாக்குவதுடன், ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளில் தெளிவின்மையை உறுதி செய்கிறது, ஜாதகரின் அறிவு ஜாதகருக்கு பயன்படாமல் பிறர் ஒருவருக்கு பயன்தருவது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகர் தனது உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டிலும் அக்கறை இன்றி இருப்பது லக்கினம் பாதிக்கப்படுவதின் தாக்கமே, இருப்பினும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், எதிர்வரும் குரு திசையும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது பாதிக்கப்பட்ட லக்கினபாவகத்திற்க்கு சற்று ஆறுதலை தரும் என்பதை நினைத்து ஜாதக மகிழ்ச்சி அடையலாம் .
லக்கினம் வலிமை பெற்ற ஜாதகம் :
லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் லக்கினம் வலிமை பெற்று இருப்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் லாப ஸ்தானம் என்பது ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியில் 26 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மத்தில் 4 பாகைகளையும் கொண்டிருப்பது ஜாதகரின் நல்ல குணத்தையும், விசாலமான மனநிலையையும் கொண்டிருப்பவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்பதாகும், மனம் என்பது செம்மையானால் மந்திரம் செபிக்க தேவையில்லை, அதற்க்கு நல்ல உதாரணம் மேற்கண்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், இறை அருளின் மீதான பற்றுதலும் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பையும், இனிமை நிறைந்த யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியதை, ஜாதகர் மிக எளிதாக சுவீகரிக்க லக்கினம் முழு வலிமையுடன் அமைந்ததே அடிப்படை காரணமாக அமைந்தது, ஜாதகரின் அறிவும் பரந்தமனபக்குவமும் ஜாதகருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்க தவறவில்லை.
சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது, வலிமை பெற்ற மற்ற பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை வளர்ச்சியில் இருந்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் தனி சிறப்பு அம்சமாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக