சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து தரும் யோக அவயோகம், நன்மை மற்றும் தீமையை பற்றிய தெளிவும், விழிப்புணர்வும் நமக்கு கிடைத்துவிட்டால், நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு தடையேதும் இருக்காது என்பது மறுக்க இயலாத உண்மை, மேற்கண்ட விஷயங்கள் பற்றிய தெளிவுஎதும் இல்லாமல் செய்யப்படும் காரியங்களில், நமது உழைப்பும் நேரமும் வீண் விரையம் ஆவதை தவிர்க்க இயலாது, குறிப்பாக சுய ஜாதகத்தில் நமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை அறிந்து அதன் வழியில் நமது உழைப்பை போடும்பொழுது, நமது வெற்றியை எவராலும் தடுக்க இயலாது, பெரும்பாலான அன்பர்களின் வாழ்க்கை தமக்கு உகந்த ஜீவனத்தை தேடாத ஒரே காரணத்தால், அவர்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வசதி வாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது, நமது வாழ்க்கையின் ரகசியங்களை துல்லியமாக அறிந்துகொள்ள நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அட்ஷய பாத்திரம் நமது சுய ஜாதகமே, இதை கருத்தில் கொண்டு செயல்படுவோர் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றத்திற்கும், அதிர்ஷ்டகரமான சுபயோகங்களுக்கும் தடையேதும் இருக்காது அன்பர்களே, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து இன்னல்களும் நடைமுறைக்கு வருவது இயற்க்கை, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலாபலன்களை சுவீகரிக்கவும், வலிமையற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் நமக்கு சுய ஜாதகத்தின் அவசியம் மிகவும் தேவை படுகிறது, நவகிரகங்களின் திசா புத்திகள் நமக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது நமக்கு சுபயோக பலன்களும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது அவயோக பலன்களும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், இதை தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது நமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பரிபூர்ணமாக வந்துசேரும் என்பதை மறுப்பதற்கில்லை, சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும் காலங்களின் நமது முயற்சிகளும், செயல்திறனும் அதிகரிப்பது நமக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் நமது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், கீழ்கண்ட ஜாதகருக்கு பாவக வலிமை வழங்கும் சுபயோக பலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
1,3,9,11ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி 1,2,3,4,5,9,10,11ம் வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 1,2,3,4,5,9,10,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், 6,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 6,7,8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.
நமக்கு தற்போழுது தெரியவேண்டிய விஷயம் ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் எது ? தவிர்க்க வேண்டிய தொழில் எது ? நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்கள் என்ன ? என்பது மட்டுமே .
ஜாதகருக்கு உகந்த தொழில் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய ஜீவன ஸ்தான தொடர்பு மற்றும் அதன் வலிமையினை கருத்தில்கொள்வது அவசியமாகிறது, 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை தெளிவுபடுத்துகிறது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் சுய தொழில் செய்ய அருகத்தையுடையவர் என்பது உறுதியாகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 21 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்தில் 7 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகர் ஸ்திர தன்மையுடனான மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்வதே ஜாதகருக்கு அபரிவிதமான தொழில் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், உதாரணமாக மண்ணில் கிடைக்கும் உலோக பொருட்கள், கற்கள், மணல், கட்டிட உபகரண பொருட்கள், வண்டி வாகனம் போன்ற தொழில்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வெற்றி வாய்ப்புகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், தனது பேச்சு திறனை கொண்டு முதலீடு ஏதும் செய்யாமல் செய்யும் தொழில்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு தொழில் அமையும், வட்டி தொழில் அல்லது ஆபரணங்களை அடகு பிடிக்கும் தொழில், வீட்டு உபகரண பொருட்கள், மின் உபகரண பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டாகும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் ஜாதகர் தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் யாதொரு குழப்பமும் ஏற்படாது என்று தெளிவாக கூறமுடியும்.
ஜாதகர் தவிர்க்க வேண்டிய தொழில் என்பது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து உணர இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு என்பது 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை, அடிப்படையிலேயே ஜாதகருக்கு கூட்டு தொழில் என்பது ஆகாத அமைப்பு என்பதை தெளிவு படுத்த ஜோதிடதீபம் கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக ஜாதகர் கூட்டு முயற்சி செய்யும் தொழில்கள் அனைத்திலும் கடுமையான விரையங்களை சந்திக்கவேண்டிவரும், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் ஏற்றுமதி சார்ந்த தொழிலால் ஜாதகர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதால் கூட்டு முயற்சியை தவிர்ப்பது நல்லது, விரையஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான 4ம் வீடாகவும், சர நீர் ராசியாகவும் அமைவதால் அழியும் பொருட்களை வைத்து தொழில் செய்வதும் கடும் நஷ்டத்தை தரும், குறிப்பாக பல் பொருட்கள், தானியம், காய்கறி, உணவு பொருட்கள் என அன்றுஅன்று அழியும் நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்யாமல் இருப்பதே ஜாதகருக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.
நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு நல்ல கல்வி அறிவை மட்டும் சிறப்பாக வழங்கியிருக்கிறது, சுக்கிரன் திசையில் கேது புத்தி ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மண் தத்துவம் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளை நல்கும், எதிர்வரும் சூரியன், திசை 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை தனது பேச்சு திறன் மூலம் வாரி வழங்கும், சந்திரன் திசை 2,6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது 2ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தந்த போதிலும் 6,8,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது என்பது ஜாதகர் அவசியம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமாக உள்ளது, எதிர்வரும் சூரியன் திசையில் ஜாதகர் கூட்டு முயற்சியை தவிர்த்து சுய தொழில் செய்து நலம் பெறுவதே அவசியமாகிறது, குறிப்பாக ஜாதகர் அழிவு பொருட்களை அடிப்படையாக கொண்டு எந்த தொழிலும் செய்வது ஜாதகருக்கு உகந்தது அல்ல !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக