பின்தொடர...

Tuesday, January 9, 2018

ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கமும், கேள்விகளுக்கான பதில்களும் !வணக்கம் அண்ணா 

நான் குமார் ,நானும் நண்பரும் இரு வாரங்களுக்கு முன் தங்களிடம் சோதிடம் காண தங்கள் இல்லத்திற்கு வந்திருந்தோம்.சோதிடத்தில் ஐயம் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள சொன்னீர்கள்.சில ஐயங்கள் உள்ளன அதற்கு விளக்கம் அளியுங்கள்.


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 3ம் பாதம்
 
கேள்வி :

1)2ம்,7ம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினீர்கள் மேலும் வைகாசிக்குள் திருமணம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறினீர்கள்.2ம்7ம் பாதிக்கப்படும் போது விரைவில் எவ்வாறு நடந்திடும்?

பதில் : 

ராகு திசையில் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் குலதெய்வ ஆசியினால் நல்லதோர் வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு நல்ல திருமண வாய்ப்பை நல்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, தாங்கள் இதை உதாசீனப்படுத்தினால், தங்களுக்குத்தான் சிரமம் என்பதை கருத்தில் கொள்க.

கேள்வி :

2)மனைவியின் கல்வி நிலை மற்றும் குணங்கள்.

பதில் : 

களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் சற்று கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது, எனவே தங்களின் கல்வி தரத்திற்கு நிகரான பெண் அமைய வாய்ப்பில்லை, சற்று குறைவான கல்வி தகுதியுடன் இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் நல்ல குணமும், பெருந்தன்மையான நடவடிக்கையும் பெற்ற பெண்ணாக இருப்பார்.

கேள்வி :

3) பெண் எந்த வாசல் வீட்டில் இருப்பார் ?

பதில் :
வடக்கு வாசல் வாயிற்படி கொண்ட வீட்டில் இருப்பது தங்களுக்கு சிறப்பை தரும் வாழ்க்கை துணையாக அமையும்.

கேள்வி :

4) தற்சமயம் பணியமைவதற்கான  காலத்தை கூறிடுங்கள் ?

பதில் : 

ராகு திசை சூரியன் புத்தியில் அமையாது, சந்திரன் புத்தி மற்றும் அந்தரத்தில் தேடினால் நல்ல வேலைவாய்ப்பு அமையும்.

கேள்வி :

5)அடுத்து வரும் சந்திர புத்தி எந்த வீட்டின் பலனை நடத்திடும்

பதில் :

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகத்தை நல்குகிறது, மேலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் வியாபித்து இருப்பது திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான யோக பலனை தரும், இதில் தங்களின் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்படும்.

கேள்வி :

6) 11ம் பாவம் நல்ல நிலை எனில் என்ன பயன் அதாவது 2,7மற்றும் 10 ம் பாவகம் பா தி க் கப் பட்டிருக்கும் போது 11 ஆல் என்ன பலன்

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகம் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகம், அது தங்களுக்கு மிகவும் வலிமையுடன் இருக்கின்றது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் அமைவது கெளரவம் மிக்க தொழில் வாய்ப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக செயல்படும், நடைபெறும், எதிர் வரும்  திசா புத்திகள் வலிமை பெற்ற 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

கேள்வி :

7) அடுத்து வரும் குருவின் திசை எடுத்து நடத்தும் பாவகம் நன்றி.

பதில் :

4,9ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை  பலாபலன்களை தர ஆயத்தமாக உள்ளது, இதனால் தகப்பனார் வழி சொத்து கிடைக்கும், உயில் இஞ்சுரன்ஸ் மூலம் தனவரவு உண்டாகும், போனஸ் லாபம் உண்டு, இருப்பினும் வாகன பழுது விபத்து தவிர்க்க இயலாது, எதிர்பாலின வழியில் இருந்து இன்னல்கள் உண்டாகும். பெயருக்கு களங்கம் உண்டாகும், நம்பிக்கை குறையும், இவையாவும் குரு திசை, குரு புத்தி, குரு அந்தரத்தில் மட்டும் நடைமுறைக்கு வரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெற தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பான எதிர்காலத்தை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment