செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ராகு கேது தரும் சுபயோக பலாபலன்கள் - சுய ஜாதக ஆலோசணை


  சுய ஜாதகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகங்களை வலிமை பெற செய்வது என்பது, ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை தரும் அமைப்பாகும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ராகு கேது, ஜாதகருக்கு வழங்கும் சுபயோகங்கள் என்பது அளவிடமுடியாதது என்றால் அது மிகையாகாது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உள்ளது என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது நமக்கு தெரியவரும், ஆனால் ஜாதகருக்கு ராகு கேது கும்பத்தில் உள்ள 6ம் பாவகத்தில் ராகு பகவானும், சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் கேது பகவானும் அமர்ந்து இருப்பதே சரியான அமைப்பு, எனவே ஜாதகருக்கு சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவானும், விரையஸ்தானத்தில் கேது பகவானும் வலிமை பெற்று அமர்ந்திருப்பது ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு சத்ரு மற்றும் விறை ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது எந்த விதத்தில் ஜாதகருக்கு நன்மையை தரும் என்ற கேள்வி எழுவது இயற்கையே, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் நன்மை தீமையை செய்யும் வல்லமை உண்டு, உதாரணமாக சுய ஜாதகத்தில் லக்கினம் ஒரு ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பின், ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடை, உடல் பாதிப்பு மற்றும் ஜாதகர் தன்னை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், அதை போன்றே சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் தான் நினைக்கும் காரியங்கள் யாவினையும் வெற்றிகரமாக நடத்தும் வல்லமையை பெற்றவராகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்வார், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு பாவக தொடர்பு வழியில் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருகின்றார்.

எனவே ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன மேன்மையை பெறுவார், இது ஜாதகருக்கு பதவியில் வெற்றி வாய்ப்பு, உத்தியோகம் செய்வதில் சீரிய ஆர்வம், திடீர் பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நற்பெயர், சுய முயற்சியில் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என ஜாதகரை மிக சிறப்பு மிக்கவராக பிரகாசிக்க செய்யும், ஜாதகரின் சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10,11ம் வீடாகவும், சர மண் ஸ்திர காற்று ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தொழில் வழியிலான முன்னேற்றம் மற்றும் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்பின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக அமையும், சத்ரு ஸ்தானம் என்றவுடன் ஜாதகருக்கு அது இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகும், சத்ரு ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஓர் ஜாதகருக்கு நல்ல உடல் நிலை மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை வாரி வழங்கும், ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான பாதிப்பில் இருந்து வெகு விரைவில் மீண்டு வரும் யோகத்தை நல்குவதுடன், தனது வாழ்க்கை துணையை தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த பாசமுடன் வைத்திருக்கும் குணத்தை தரும் என்பது சிறப்பு விஷயமாகும்.

12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் 12 பாகை வரை வியாபித்தது நிற்கிறது, சிம்மத்தில் 12ம் பாவகத்திற்கு உற்ப்பட்ட இடத்தில் கேது அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு மிகுந்த அயன சயன சுகத்தை தரும், ( பனிரெண்டில் கேது அமர்வது பிறப்பில்லா நிலையை தரும் என்பதற்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம் ) கேது பனிரெண்டில் வலிமை பெற்று அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு மோட்ஷ வாழ்க்கை நல்கும், வலிமை அற்று அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிடும், மேற்கண்ட ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்று அமர்ந்த கேது ஜாதகருக்கு பாவக வழியில் ஜீவன ஸ்தானத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, எதிரிகள் செய்யும் சூழ்ச்சியே மிகுந்த பேரதிர்ஷ்டத்தை வாரி வழங்கிவிடும், தான் செய்யும் பணியில் எதிர்பாராத பதவி உயர்வு, வருமான உயர்வு என்ற அமைப்பில் சிறப்பை தரும் , சுய தொழில் செய்ப்பவர் எனில் ஜாதகருக்கு தொழில் துறையிலான அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவில்லாமல் அமையும், ஜாதகர் செய்யும் தொழில் முதலீடுகள் மிக பெரிய லாபத்தை வாரி வழங்கும்.

இல்லற வாழ்க்கையில் நல்ல அயன சயன சுக போகத்தை வாரி வழங்குவதுடன், ஜாதகரின் வாழ்க்கையில் நிறைவான சொத்து சுக சேர்க்கைகள் உண்டாகும், அதீத கற்பனைகள் கூட ஜாதகருக்கு நடைமுறைக்கு  வரும் என்பது சாயா கிரகங்கள் செய்யும் மாயாஜாலமாகும், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாழ்க்கையில் மிரளத்தக்க அதிசயங்கள் நடைபெறும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு :

 ராகுகேது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட  பாவகத்தை வலிமை பெற செய்கிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவேளை தான் அமர்ந்த பாவகத்தை ராகு கேது வலிமை பெற செய்யவில்லை எனில், ஜாதகருக்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்பது தாங்க இயலாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதது ஏன் ?



கடந்த பதிவின் தொடர்ச்சி ...

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சுக ஸ்தான வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள், சொத்துகளை இழத்தல், காரிய தடை, வறுமை, அதிர்ஷ்டமின்மை, குழப்பமான மனநிலை, அதிக வேலை பளு, விஷம் சார்ந்த இன்னல்கள், வசிப்பதற்கான வீடு அமைவதற்கு தடை, வண்டி வாகனம் சார்ந்த விறைய செலவுகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலை, அடிக்கடி தொழில் மாற்றம், வரவுக்கு மிகுந்த செலவுகள், சரியான தொழில் அமைவதற்கு தடை, அடிமை தொழில் வழியில் அதிக மன உளைச்சல், நிம்மதியின்மை, திடீர் நஷ்டம் மற்றும் எதிர்பாராத போராட்டம், கால விரையம், நிதி மேலாண்மையில் கவனமின்மை போன்ற இன்னல்கள் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செலவினங்கள், அனைவராலும் இன்னல்கள், பங்கு சந்தையில் நஷ்டம், திருப்தி இல்லாத வாழ்க்கை, சூது மூலம் பெருத்த நஷ்டம், விபத்து போன்ற இன்னல்களால் பாதிப்பு என்ற வகையில் துன்பத்தை தரும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வு, பரிச்சை,வழக்கு, போட்டி பந்தையங்களில் வெற்றியை தரும் என்ற போதிலும் உடல் நலம் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், வியாதியை எதிர்கொள்ளும் வல்லமையை தாராது, சிறப்பான வேலை அனுபவத்தை தரும், மற்றவர்களுக்கு சற்று சிரமத்தை தரும், எதிரிகளுக்கு மிகுந்த பாதிப்பை தரும், தனது சீரிய முயற்சியின் மூலம் வாழ்க்கையில் சில நன்மைகளை தரும்.

8,9ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளையே தரும், இருப்பினும் வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்கள் கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்கும், எதிர்பாராத துன்பம் மற்றும் விபத்து ஜாதகரின் வாழ்க்கை தரத்தையே கடுமையாக பாதிக்கும், திருப்தியில்லா மன நிலை ஜாதகர் செய்யும் காரியங்களில் வெளிப்படும், நீண்ட ஆயுள் ஜாதகருக்கு கிடைத்த முழு நன்மையாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கல்வியில் தடை, விரக்தி மனப்பான்மை, மனசஞ்சலம், விபத்து, போதிய அறிவுரை கிட்டாமல், போராட்ட வாழ்க்கையை  எதிர்கொள்ளும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம் பரிபூர்ணமாக கிடைக்காமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளுதல், முற்போக்கு சிந்தனை குறையும் தன்மை என மிகுந்த பாதிப்பை தரும்.

மேற்கண்ட பாவகங்கள் ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, அடுத்து தற்போழுது ஜாதகருக்கு சுக்கிரன் திசை நடைமுறையில் உள்ளது, இருப்பினும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்தித்து கொண்டும், சிறந்த வேலை, தொழில் அமையாமல் சிரமங்களையும், திருமணம் அமையாமல் அது சார்ந்த இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், இதற்கான காரணம் என்ன ? என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகருக்கு சுக்கிரன் திசை ( 23/07/2001 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, பாரம்பரிய முறைப்படி ஜாதகருக்கு சுக்கிரன் சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி என்ற போதிலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க காரணம் ஏன் ? என்ற கேள்விக்கு சுக்கிரன் திசை ஜாதகருக்கு சுப ஆதிபத்தியம் பெற்ற போதிலும், தனது திசையில் 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் எதிர்பாராத திடீர் இழப்புகளை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பதுடன், ஜாதகரின்  ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும், கும்ப ராசியில் அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டமின்மையை சுக்கிரன் திசையில் அனுபவிக்க வைக்கிறது என்பதுடன் ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகளில் பெரும் தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்குகிறது, மேலும் ஜாதகரின் முயற்சிகள் யாவும் கடும்  தோல்வியை சந்திக்கிறது, சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சில நன்மைகளை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை புதன் புத்தி 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் ஸ்தான வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகருக்கு சற்று நெருக்கடிகளை தரக்கூடும்.

எதிர் வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 23/07/2021 முதல் 23/07/2027 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தந்த போதிலும், 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக்கத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த சுபயோகத்தை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கு வருமான ரீதியாக சிறப்பான முன்னேற்றங்களையும், குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் சூரியன் திசையில் மிகுந்த யோக பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

எதிர் வரும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 23/07/2027 முதல் 23/07/2037 வரை )

சந்திரன் திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், 4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10,12ம் பாவக வழியில் இருந்து சிரமங்களையும் தரக்கூடும் என்பதால், ஜாதகர் சந்திரன் திசையில் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை சுவீகரிப்பதற்கான அதீத வாய்ப்புகளை உருவாக்கி, சகல விதங்களில் இருந்தும் வெற்றி பெற முயற்சிப்பதே மிகுந்த யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், நடைமுறையில் உள்ள திசை, எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், இல்லை எனில் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்வது நம்மை விழிப்புணர்வுடன் இயங்க செய்யும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே  ஜாதகர் 1,7ம் பாவக வழியில் இருந்து வரும் சிறப்பான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகருக்கான சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 24 பிப்ரவரி, 2018

தொழில், திருமணம் அமைவது எப்பொழுது ? சுய ஜாதகத்தில் உள்ள யோக அவயோகங்கள் பற்றி விளக்கம் தருக ?



தொழில் ( வேலை ) இதுவரை சரியாக அமையவில்லை, திருமணமும் நடைபெறவில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும், எனது ஜாதகம் பற்றிய ( லக்கினம் முதல் 12 வீடுகள் பற்றி ) முழு விபரமும் தெளிவாக விளக்கம் தர வேண்டுகிறேன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள, தங்களின் அறிவுரையையும் எதிர்பார்க்கிறேன், " நன்றி "

ஒருவரது சுய ஜாதக பலாபலன் பற்றி தெளிவு பெற 3 வழிமுறையை பின்பற்றினால் ஜாதகருக்கான துல்லியமான பலாபலன்களை மிக சரியாக தெளிவு படுத்த இயலும், அதுபற்றி இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1) ஜாதகரின் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு கணிதம் செய்யப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது.

2) ஜாதகரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பெற்ற பாவகங்கள் எது? வலிமை அற்ற பாவகங்கள் எது ? அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது.

3) ஜாதகருக்கு தற்போழுது, எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் என்ன ? அவை வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருகின்றதா? வலிமை அற்ற பாவக தொடர்பை பெற்று அவயோக பலன்களை தருகின்றதா ? என்பது பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது, மேலும் திசா புத்திகள் பாவக தொடர்புகளுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் வலிமை, வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெறுவதும்  மிக மிக அவசியமானது.

மேற்கண்ட மூன்று விதிகளை கையாள்வதன் மூலமே, நாம் சுய ஜாதக பலாபலன்களை பற்றி 100% விகிதம் தெளிவு பெற உதவி புரியும்.


ஜாதக பலாபலன்கள் 

லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து தந்தையின் ஆதரவு மற்றும் நேசம் கிட்டும், நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும், மனோ தத்துவம் மற்றும் தெய்வீக அனுபவம் உண்டாகும், மதம் ஞானம் போன்ற விஷயங்களில் தேர்ச்சி உண்டு, நல்ல தெளிந்த அறிவு திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும், தனது வாழ்க்கை துணையின் சகோதரர் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெரும் வல்லமையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆரோக்கியம் மேம்படும், ஸ்திரமான மனவலிமை மூலம் சகல காரியங்களிலும் வெற்றி பெரும் யோகம் உண்டு, எடுக்கும் முடிவுகள் விரைவானதாகவும், சரியானதாகவும் அமையும், அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு பல நேரங்களில் கைகொடுக்கும், ஆராய்ச்சி மனப்பான்மை ஜாதகரின் வெற்றியை அதிகரிக்கும், நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகர் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டு, அமைதியும் மகிழ்ச்சியும் ஜாதகரின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும், சமாதானம் மற்றும் பெருந்தன்மை ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

7ம் பாவாக வழியில் இருந்து ஜாதகர் மனைவியுடன் நல்ல இணக்கமான சூழ்நிலையை பெறுவதற்கான வாய்ப்பை தரும், வாழ்க்கை துணையின் கல்வி அறிவு ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், கூட்டு தொழில் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும், கூட்டாளிகளுக்கு நல்ல லாபத்தை தரும், பலதிருத்தலங்களுக்கு கூட்டாக சென்று வரும் யோகம் உண்டு, வணிகம் மற்றும் வியாபர துறையில் நல்ல அறிவும், பல புதிய யுக்தியை கடைபிடிக்கும் யோகமும் உண்டு, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த நல்லறிவை இயற்கையாகவே பெறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும், தனது பேச்சு எழுத்து மூலம் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு , தன்னம்பிக்கையும், மனோதைரியமும் மிதமிஞ்சிய அளவில் ஜாதகருக்கு கைகொடுக்கும், அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தவறவிடாமல் கைப்பற்றி நலம் பெறுவது அவசியமாகிறது, வியாபரத்துறையில் நல்ல லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு, பெற்றோர் மற்றும் பாரம்பரிய தொழில்கள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும், ஜாதகரின்  புதிய முயற்சிகள் யாவும் மிகப்பெரிய வெற்றியை தரும்.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை வாரி வழங்கும், மிதம்மிஞ்சிய செல்வாக்கு, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, குடும்பத்தி மகிழ்ச்சி, அறுசுவை உணவு, இனிமையான பேச்சு திறன், வருமானம் சார்ந்த உதவிகள், கடின உழைப்பிற்கான ஊதியம் உடனே கிடைத்தால், குடும்ப வாழ்க்கையில் சுபயோகம், வாழ்க்கை துணை வழியிலான வருமான உதவி மற்றும் பரிபூர்ண ஆதரவு, பேச்சை முதலீடாக கொண்டு செய்யும் தொழில் வழியிலான அதீத வருமானம் என ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  மிகுந்த செல்வ செழிப்பை தரும், ஜாதகரின் எதிரிகளை மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் உண்டு, ஸ்திரமான நல்ல மனநிலையை தரும், சிறந்த சிந்தனை மூலம் வாழ்க்கையில் ஜாதகர் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டு, உண்மை மற்றும் சத்தியத்தை மதிக்கும் யோகம் உண்டு, விளையாட்டு வீர சாகச நிகழ்வுகளில் அதீத ஆர்வம் உண்டாகும், மன தைரியம் சிறப்பான வெற்றிகளை நல்கும், பயணம் மூலம் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், கற்ற கல்வியின் மூலம் சிறப்பு உண்டு, புதிய மாற்றங்கள் ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தை தரும், ஏஜென்சி எடுத்து செய்யும் வியாபாரங்கள் யாவும் ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் வருமானம் என்பது அளவில்லாமல் கிடைக்கும், சகல எதிர்ப்புகளையும் சமாளித்து பரிபூர்ண வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

 ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6 பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருந்த போதிலும், தொழில் மற்றும்  திருமணம் இதுவரை ஏன்? கைகூடி வரவில்லை என்பதனை அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே ! ஜாதகருக்கு 23/07/2001 தேதி முதல் தற்போழுது வரை சுகம் மற்றும் பாக்கிய ஸ்தான  அதிபதி சுக்கிரன் திசை நடைமுறையில் இருந்தும், தொழில் திருமணம் ஏன் தாமதம் ஆகிறது என்பதனையும் அடுத்த பதிவில் விளக்கமாக பார்ப்போம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஜாதக பொருத்தம் எப்படி உள்ளது? எனது மகளுக்கு ஏற்ற வரனா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


கேள்வி :
கீழ்கண்ட வரனின் ஜாதகம் எனது மகளுக்கு பொருந்துமா ? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா ? ஜாதக பொருத்தம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்தவும்,

பதில் :

 திருமண பொருத்தம் காண்பதில் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

2) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் ( ஏக திசை என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

3) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது  கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன் பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

4) மேற்கண்ட விஷயங்களை தவிர ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம், களத்திர தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளை, புறம் தள்ளிவிட்டு, வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வலிமையின் அடிப்படையில் திருமணம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

இனி அன்பரின் கேள்விக்குண்டான பதிலை பார்ப்போம்.

வரனின் பிறந்த தேதி : 26/09/1990
                                நேரம் : 08:45 AM 
                                இடம் : கோவை 


லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்.

மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக 2,8ம் வீடுகள்  திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்பம், வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திப்பார், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்ற போதிலும், வாழ்க்கை துணைக்கு பொருளாதார ரீதியான பேரிழப்புகளை தருவார்.

5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 5ம் பாவக வழியில் கடுமையான புத்திர தோஷத்தையும், சமயோசித அறிவு  திறனில் குறைகளையும், கற்ற கல்வி வழியிலான நன்மை அற்ற தன்மையையும் அனுபவிப்பார், குறிப்பாக ஜாதகரின் சிந்தனை திறனும், பூர்வீகமும் கடுமையாக பாதிக்கப்படும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணைக்கு கடுமையான தோஷத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் மணந்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின், இல்லற வாழ்க்கை வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும், வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை வெகுவாக குறைக்கும், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கினமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியில் அமைந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையில் ஜாதகர் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபமும் வலிமையற்று உள்ளது, 7ம் ராசியான துலாமும் வலிமையற்று உள்ளது  என்பதுடன் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் வலிமையற்று காணப்படுகிறது என்பதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும்.

அயன சயன ஸ்தானத்தை குறிக்கும் 12ம் வீடு பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அனைத்திலும் நஷ்டத்தை தரும், மேலும் புத்திரம் யோகம் சார்ந்த கடுமையான பாதிப்புகளை தரும், தாம்பத்திய வாழ்க்கையில் முரண்பட்ட பாதிப்புகளை ஜாதகர் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என்பதால், தங்களது அருமை மகளுக்கு ஏற்ற வரன் இந்த  ஜாதகர் இல்லை என்பதை மட்டும் மிக தெளிவாக கூறி, வேறு நல்ல வரனாக தேடி திருமணம் நடத்தி வைக்க " ஜோதிடதீபம் " ஆலோசனை வழங்குகிறது.

குறிப்பு :

தங்களது மகளின் சுய ஜாதகத்தில் 2,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  இருப்பதால், தாங்கள் பார்க்கும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக வலிமையுடன் இருப்பதுடன், நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்ற பிறகே திருமணம் செய்து வைப்பது சகல நலன்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்க.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

தொழில் ஸ்தானம் பெரும் வலிமை, ஜாதகர் பெரும் ராஜயோக பலாபலன்கள் !



  தனக்கு உகந்த தொழில் அமைப்பினை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அமைத்துக்கொள்ளும் பொழுது, ஜாதகரின் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பது உறுதி செய்யப்பட்ட விஷயமாகும், பரபரப்பான இந்த உலகத்தில் நேர விரையம் என்பது நமது வாழ்க்கையில் நமக்கு வரும் அதிர்ஷ்டங்களை தவறவிட செய்யும் தன்மையை பெற்றது, எனவே நமது சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவுடன் நமது வாழ்க்கையை எதிர்கொள்வோம் எனில், நமக்கு வரும் வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும், நாமே சுவீகரிக்கும் வல்லமையை தந்து விடும்.

 தனது வாழ்க்கையில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெறக்கூடிய விஷயங்களை அறிந்திறாத பொழுது நமது நோக்கமும் லட்சியமும் வெகுவாக உடையும், உதாரணமாக நமக்கு பொருத்தமான தொழில் எதுவென்று நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுமாயின், நாம் வெகுவாக நேர விரையத்தை சந்திக்கும் நிலையை தருவதுடன் சுய முன்னேற்றம் என்பதும் கடுமையாக பாதிக்கப்படும், சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை மற்ற பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில் ஓர் தொழிலை நாம் தேர்வு செய்தொம் எனில், செய்யும் தொழில் வழியிலான வெற்றி வாய்ப்புகளை எவராலும் தட்டிப்பறிக்க இயலாது, மேலும் தன்னிறைவான ஜீவன முன்னேற்றம் என்பது மிகவும் சிறப்பாக அமையும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகர் ஓர் இளம் கோடீஸ்வரர் என்றால் நம்ப முடிகிறதா ? உங்களுக்கு , ஜாதகர் கேட்க வந்ததென்னவோ திருமணத்தை பற்றித்தான், ஆனால் அவரது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மை இந்த பதிவினை எழுத தூண்டியது, ஜாதகர் ஓர் பட்டதாரி, கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓர் தொழிலை சிறு முதலீட்டில் துவங்குகிறார், துவங்கி குறிகிய காலத்தில் ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றி, தொடர்ந்து தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை பெற ஆரம்பிக்கிறார், ஜாதகரின் தன்னம்பிக்கையுடனான கடின உழைப்பும், சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையும் ஜாதகரை தொழில் ரீதியாக மிகவும் மதிப்பு மிக்க இடத்தில் அமரவைக்கிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 ஜாதகருக்கு 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ஆகி அனைத்து வீடுகளும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் பரிபூர்ண யோக ஜாதகம் பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5,9ம் வீடுகள் ஜாதகருக்கு  சிறந்த கல்வி அறிவையும், சமயோசித புத்திசாலித்தனத்துடன் கூடிய அறிவு திறனையும் வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது ஜாதகருக்கு சரியான கல்வி மற்றும் சரியான தொழில் அறிமுகத்தை உகந்த காலத்தில் வழங்கி இருக்கிறது, 1,4,7,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  லக்கின வழியில் இருந்து நல்ல கல்வி வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சிறந்த உடல் மற்றும் மன நலம், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற யோகங்களையும், 4ம் பாவக வழியில் இருந்து தன்னிறைவான சுகபோக யோகம், சொகுசு வீடு வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணத்தை வழங்கி இருக்கிறது, 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் மக்கள் ஆதரவு, கூட்டு தொழில் வழியில் இருந்து பெரும் சுபயோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தன்னிறைவான வருமான வாய்ப்புகள், சிறந்த வியாபர திறமை என மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கி இருக்கிறது, 10ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் திறமை, தீர்க்கமான வாத திறமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வெற்றிகள், சுய முன்னேற்றம், வியாபாரம் மூலம் விருத்தி என ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவித்துக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

6,8,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 6ம் பாவக  வழியில் இருந்து நினைத்த எண்ணம் நிறைவேறும் தன்மை, மிக எளிதான வெற்றி வாய்ப்புகள், அதீத புத்திகூர்மை மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் யோகம், கூலியாட்கள், வேலையாட்கள் மூலம் அபரிவித வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் நன்மைகளை தந்துகொண்டு இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து லட்சியம் நிறைவேறும் தன்மை, போட்டி வழக்குகளில் வெற்றி, கூட்டு தொழில் மூலம் லாபம், நிறைவான மன நிலை, திடீர் அதிர்ஷ்டம் என்றவகையில் சிறப்புகளை வழங்கி உள்ளது, 12ம் பாவக வழியில் இருந்து நிறைய லாபம், முதலீடுகளில் இருந்து வரும் பெரும் செல்வம், வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம், அதிர்ஷ்டத்துடன் கூடிய சுப விரையம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கி உள்ளது.

2,3,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தனது பேச்சு திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகத்தை தருவதுடன், சிறந்த வருமான வாய்ப்பையும் நல்கியுள்ளது, குடும்பத்தில் மகிழ்ச்சி, தெளிவான பேச்சு திறன் என ஜாதகருக்கு மேலும் நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், எண்ணத்தின் வலிமை, சிறந்த வியாபார யுக்தி, அதிக வாகன வசதி, விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்ம சிந்தனை, ஜோதிடம் மற்றும் கணிதத்தில் விழிப்புணர்வு என்ற வகையில் சிறப்புகளை தருவதுடன், எதிர்வரும் திருமணத்திற்கு பிறகான அதீத அதிர்ஷ்டங்களை வாரி  வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் லாபத்தை தரும், மேலும் ஜாதகரின் நல்ல குணம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று தனது திசையை தொழில் ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை நல்குவதுடன், எதிர்வரும் கேது திசை 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நற்ப்பெயரை பெற்று  தரும், கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை முழுவதும் நன்மைகளை தருவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதால், முழு சுபயோகம் பெற்றவர் என்பதுடன் கிரகங்களினால் வரும் நன்மைகளை மட்டுமே ஜாதகர் எதிர்கொள்வார் என்பது கவனிக்கத்தக்கது, இவருக்கு பாதிப்பான பலாபலன்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் வாழ்த்துக்கள் அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 21 பிப்ரவரி, 2018

திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?


கேள்வி :

 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?

பதில் : 

  சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் ( லக்கினம் முதல் விரைய ஸ்தானம் வரை ) பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதாவது தாங்க இயலாத துன்பத்தையும் துயரத்தையும் தரும், இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 7ம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஜாதகருக்கு திருமணம் சார்ந்த தடைகளும் தாமதங்களும் நிச்சயம் ஏற்படுவதுடன், தாம்பத்திய வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமையை தெளிவாக தெரிந்துகொண்ட பிறகே திருமண வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், தனக்கு வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.



லக்கினம் : தனுசு 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோஹிணி 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் பாதிக்கப்பட்ட அமைப்பாக கருதலாம், ஜாதகருக்கு தற்போழுது 30 வயது நடைமுறையில் உள்ளது, திருமணம் என்பது இன்னும் எட்டா கனியாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலாக அவரது செயல்பாட்டையே காரணமாக சொல்லலாம், தனக்கு வந்த நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் போக்கு நெடுங்கால தாமதத்தை தந்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, இதற்க்கு காரணமாக ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே என்றால் அது மிகையாகாது, லக்கினம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அவ்வளவு சிறப்புகளை தருவதில்லை, உதாரணமாக ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட மனநிலையை பெற்று இருப்பார், உடல் மனம் இரண்டும் ஓர் நேர்கோட்டில் இயங்காது, இயற்க்கைக்கு புறம்பான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், அதீத கற்பனையில் ஜீவனம் செய்யும் அமைப்பை பெற்று இருப்பதுடன், மற்றவர்களுடனான புரிதல் மிக மிக குறைவாக அமைந்திருக்கும், மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட ஜாதகர் தனது திருமண வாழ்க்கையினை இவ்வளவு காலமும் தள்ளிபோட்டுக்கொண்டே வருவது ஏன் என்பது ஜாதகருக்கே வெளிச்சம், நமது ஜாதக கணித முறையின் படி ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுனத்தில் அமைவதால், ஜாதகரின் அசட்டு தனமும், அலட்சியமும், முயற்சி இன்மையும் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக சொல்லலாம்.

7ம் வீடு பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் சிறப்பின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, திருமண வாழ்க்கை மூலம் நலம் பெறுவதற்கான சிறு அறிகுறியும் தெரியவில்லை, முரண்பட்ட நட்பு, அதீத கற்பனை, ஆர்வமின்மை போன்ற பாதிப்புகளால் ஜாதகர் பாதிக்கப்படுவது கவனிக்கத்தக்கது, 7ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுனத்தில் அமைவது, ஜாதகரின் உடல் ரீதியான பாதிப்புகள் தாம்பத்திய ரீதியான வீரியத்தை வெகுவாக இழக்க செய்வதுடன், வீண் மனபயத்தையும் வாரி வழங்குகிறது, சுப காரியங்களை வெகு விரைவில் நிறைவேற்றி வைக்கும் தன்மை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடும் ஜாதகருக்கு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், ஜாதகருக்கு வரும் நல்ல நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதுடன், சுப நிகழ்வுகளை நிறைவேற்றும் வல்லமையை தடுக்கிறது, ஜாதகரின் சிந்தனையும் செயல்பாடுகளும் விலாசமான பார்வையில் இல்லாதது 5ம் பாவக வலிமை இன்மையை தெளிவு படுத்துகிறது, சுய புத்தி அல்லது சொல்புத்தி இரண்டில் சுய புத்தி ஜாதகருக்கு சிறப்பாக செயல்பட மறுப்பதால், அனைத்தையும் உதறித்தள்ளும் நிலையில்  ஜாதகர் இருக்கின்றார்.

கடந்த ராகு திசை ( 09/11/1999 முதல் 09/11/2017 வரை ) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 200% விகித இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு வாரி வழங்கி இருப்பது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை தந்து இருக்கிறது , மேலும் ராகு திசையில் சூரியன்,சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியது ஜாதகருக்கு கடுமையான தடைகளை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 09/11/2017 முதல் 09/11/2033 ) வரை ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 5,8ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 4,10ம் வீடுகள்  வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, எனவே பெற்றோர் மற்றும் உறவுகள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தாமதமாகாமல் தேர்வு செய்து, இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும் என்பது  " ஜோதிடதீபம் " வழங்கு அறிவுரையாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தான வாழ்க்கையில் வாழ்க்கை துணையாக வரும் எதிர்பாலின அன்பரிடம் இருந்து அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் உள்ளதா ? என்பதை கருத்தில் கொண்டும், தனக்கும் வாழ்க்கை துணைக்கும் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும், இதற்க்கு மாறாக செயல்படுவது திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ? தோஷம் ஏதாவது உள்ளதா ?


" பருவத்தே பயிர் செய் " என்பது பழமொழி, சரியான பருவ வயதில் திருமணம் நடைபெறுவதே சிறப்பான இல்லற வாழ்க்கைக்கு வழிவகுக்கும், திருமணம் தாமதமாக ஒருவரது சுய ஜாதகத்தில் பல காரணங்கள் இருந்த போதிலும் அடிப்படை காரணமாக அமைவது இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை இன்மையும், திருமண வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதுமே என்றால் அது மிகையாகாது, கீழ்கண்ட உதாரண ஜாதகருக்கு ஏன் திருமணம் நடைபெற தாமதம் ஆகிறது ? என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம்

  மேற்கண்ட கடக லக்கின ஜாதகருக்கு  அகவை 34 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமண முயற்சிகள் யாவும் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றி தெளிவு படுத்தும் 2,5,7,8,12ம்  வீடுகளின் தொடர்பு மற்றும் வலிமையை பற்றி ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பானது, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், களத்திர ஸ்தானமான 7ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பானது,  8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும், அயன சயன ஸ்தானமான 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தாம்பத்திய வாழ்க்கையில் வெகு தாமதத்தை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12 வீடுகளில் 2,7ம் வீடுகளை தவிர மற்ற வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும், குறிப்பாக ஜாதகரின் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிகழவேண்டிய பல சுப நிகழ்வுகளை தடை செய்வது கண்கூடாக தெரிவதுடன் 5ம் வீடு தாம் தொடர்பு பெற்ற வழியில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது மிகுந்த சிரமத்தை 5ம் பாவக வழியில் இருந்து தரும் அமைப்பாகும், 8ம் வீடு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிகழ்வுகளை குறிக்கும் அம்சமாகும், இது ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தரும் விஷயமல்ல, தாம்பத்ய வாழ்க்கையில் அயன சயன போகத்தை தரும் 12ம் வீடு வெகுவாக பாதிப்பது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து பெறவேண்டிய யோக பலன்களை தடைசெய்கிறது.

நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 2,3,7,9ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகத்தை தந்த போதிலும், 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை 200% விகிதம் 5,11ம் பாவக வழியில் இருந்து தருவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பதை தரும் விஷயமாகும், கடந்த செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தந்த போதிலும், 2,7ம் பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை, செவ்வாய் திசை முழுவதும் ஜாதகருக்கு தொழில் வழியில் இருந்தும் சுய வளர்ச்சி அமைப்பில் இருந்தும் முன்னேற்றங்களை மட்டுமே வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

 தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் சீரிய முயற்சியும், சுய தேடுதலும் ஜாதகருக்கு நல்லதோர் வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும் என்று மிக தெளிவாக கூறலாம், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான தொடர்பு ஜீவன ஸ்தான தொடர்பை பெறுவதால், ஜாதகர் தான் பணியாற்றும் துறையில் இருந்து நல்ல வாழ்க்கை துணையை இந்த ராகு புத்தியில் தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு, மேலும் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதால் நல்ல இல்லற வாழ்க்கை அமையும் என்பதை தெளிவாக கூறலாம்.

திருமண தாமதம் ஆக சுய ஜாதகத்தில் 5,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதும், நடைபெற்ற சந்திரன் மற்றும் செவ்வாய் திசைகள் ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியில் இருந்தும் சுய வளர்ச்சி அமைப்பில் இருந்துமட்டுமே நன்மைகளை ஏற்று நடத்தியது மட்டுமே அடிப்படை காரணமாக அமைந்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது ராகு திசை நடைபெற்றாலும் ராகு தனது திசா புத்தி காலத்தில் 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, எனவே ஜாதகர் தனது வாழ்க்கை துணையை சற்று சீரிய முயற்சி மூலம் தேடி பெறமுடியும் என்பதால் தன்னம்பிக்கையும், தைரியமும் பெறலாம், தோஷம் என்பது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலிருந்து மட்டுமே வரும் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

ஜாதகருக்கு 5,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு தமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வாழ்க்கை துணையை தேர்வு செய்யுமுன் ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் !


கேள்வி :

 எனது  விருப்படி வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது பொருத்தமானதா? எனது தேர்வு சரிதானா ? திருமண வாழ்க்கை, எதிர்காலம் சரியாக அமையுமா?
பிறந்த குறிப்பு - தேதி ( 01/01/1991 ) நேரம் ( 05:55 AM ) இடம் ( அந்தியூர்  )



பதில் :

தங்களின் விருப்ப தேர்வு மிக மிக தவறானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, தங்களுக்கு உகந்த கணவராக இவர் அமைவார் என்று உறுதியாக கூற இயலாது, ஏனெனில் இவரது ஜாதகம் மிகவும் வலிமை அற்றதாக காணப்படுகிறது, குறிப்பாக திருமண வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்திலும் 2,5,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது இல்லற வாழ்க்கையில் கடுமையான பிரிவை தரக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை, இவரது ஜாதக வலிமையை கீழ்கண்ட வாறு வகைப்படுத்தலாம் .

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

4,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,6,8,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு  :

1ம் வீடு லக்கின பாவகமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

அடிப்படையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு ( ஆயுள்  ) 8ம் வீடாக அமைவதும், ஸ்திர நீர் தத்துவ ராசியில் அமைவதும் தாங்கள் இவரை கணவராக ஏற்றுக்கொண்ட பிறகு தாங்கள் மனரீதியாக கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் சொல்ல இயலாத மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையும், முரண்பட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்பதனை மனதில் கொண்டு விழிப்புணர்வுடன் தாங்கள் செயல்படுவதே தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

சுக ஸ்தானமான 4ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் குணம்  சார்ந்த விஷயங்களில் இன்னல்களை தரும், தெளிவான மன இயல்பை ஜாதகருக்கு தாராது, குறுகிய மனப்பக்குவம் கொண்டவராக இருக்க கூடும், மேலும் வண்டிவாகனம், வீடு போன்றவைகள் சிறப்பாக அமையாததுடன், இழப்புகளையும் தரும், 3ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது வீரியமிக்க செயல்பாடுகளை தாராது, தன்னம்பிக்கை தைரியம் வெகுவாக குறையும், 6ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கடுமையான  உடல் நல பாதிப்பு, எதிரி தொந்தரவு  மற்றும் கடன் தொல்லைகளை தரும், 8ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகர்  மணந்துகொள்ளும் பெண்ணிற்கு கடுமையான நெருக்கடிகளை தரும், இவர் வழியிலான பொருளாதார சிக்கல்களை கடுமையாக தரும், 9ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது அறிவு திறன் பாதிப்பு மற்றும் எதையும் பெறுவதற்கு ஜாதகர் கடுமையான போராட்டங்களை  சந்திக்கும் சூழ்நிலையை  தரும், உதவ யாரும் அற்ற தன்மையை தரும், 11ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது அதிர்ஷ்டமற்றவர் என்பதுடன், பிற்போக்கு தனமான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், தன்னம்பிக்கை என்பது ஜாதகருக்கு  வெகுவாக குறையும், மற்றவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை  தரும், 12ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியின்மையையும், வீண் கவலை, மனபயம், தெளிவில்லாத சிந்தனை மூலம் வாழ்க்கையை கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கிக்கொள்ளும் சூழ்நிலையை தரும், தாம்பத்திய வாழ்க்கை நீடிக்காத நிலையை தரக்கூடும், கடுமையான கருத்து வேறுபாடு அதிகமாக வரும்.

தற்போழுது நடைபெறும் சனி திசையும், எதிர்வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 8ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று முழு  வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைக்கு கொண்டு வருவது, ஜாதகரை மணந்துகொள்ளும் வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

தங்களின் சுய ஜாதகத்திலும் 2,5,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது, திருமண வாழ்க்கைக்கு சிறிதும் பொருத்தம் அற்ற நபரை தேர்வு செய்து படுகுழியில் வீழ்ந்து கண்ணீர் வடிப்பதை தவிர்க்குமாறு தங்களுக்கு " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குறிப்பு :

வாழ்க்கை துணியை தாங்கள் விருப்பப்படி தேர்வு செய்தது மிக மிக தவறு, சிறிதும் தங்களுக்கு பொருத்தமில்லாதது, திருமண வாழ்க்கை சிறப்பிக்க வாய்ப்பு இல்லை, எதிர்காலம் சூன்யமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய் தோஷம் எனும் மாயவலை !

 

 " மாற்றம் ஒன்றே மாறாதது " என்ற விதி அணைத்திற்கும் பொருந்தும், இன்றைய சூழலில் ஜோதிட சாஸ்திரமும் இதற்க்கு ஆர்ப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது, இயற்க்கை உண்மைக்கு புறம்பான விஷயங்களை புறம் தள்ளிவிட்டு, சத்தியத்தை நோக்கி நகரும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே,  பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் மனிதனை மூழ்கடித்து உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்துகொண்டிருந்த பலரை, இன்றைய இளைய தலைமுறையினர் தெரிக்கவிட்டு கொண்டு இருப்பது வரவேற்க்கதக்க விஷயமாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இன்றைய இளைஞர்கள் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை ஆண் பெண் பாகுபாடு இன்றி பெறுவதிலேயே நாம் இதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், மேலும் இதற்க்கு அவரவர் சுய ஜாதக  பாவக வலிமை பெரிதும் உதவுகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது, தனது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் பகவான் உள்ளதால் செவ்வாய் தோஷம் என்கின்றனர்? நான் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா ? என்ற கேள்விக்கான பதிலை இன்றை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

 ஜாதகரின் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவான் ஜாதகருக்கு செவ்வாய் தோஷத்தை தருகிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதக வலிமை என்பது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில்  ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை அமைகிறது, ஒருவரின் திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் ஆகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, 2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தாலும், சுய ஜாதக வலிமையின்  அடிப்படையில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் மேற்கண்ட கண்ட பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பதே உண்மை.

2,7,8ல் பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன், ராகு,கேது  போன்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பாவகம் வலிமை இல்லை என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதம் அறியாமல் கூறப்படும் வாய்ஜாலம் என்பதை தவிர வேறு இல்லை, கீழ்கண்ட மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் பாவகத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பினும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடும்  களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது  ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணையுடனான புரிதல்கள், இணக்கமான வாழ்க்கை, பரஸ்பரம் அன்பு செலுத்தும் யோகம் என்ற  வகையில்  சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும் அமைப்பை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், செவ்வாய் இங்கு அமர்வது  தோஷத்தை தருமெனில் ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமை இழந்து காணப்பட வேண்டும் ஆனால் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும் சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் தனது மனைவி வழியில் இருந்து சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் வல்லமையை தருவதுடன், ஜாதகர் எந்த பெண்ணை ( தனது வாழ்க்கை துணையாக ) தேர்வு செய்தாலும் அவர் வழியில் இருந்து நன்மைகளையும் சுக போகங்களையும் தன்னிறைவாக பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகமே கட்டியம் கூறுகிறது, மேலும் தான் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  அதனால் யாதொரு பாதிப்பும் ஜாதகருக்கு ஏற்படாது என்பதே உண்மை நிலை, செவ்வாய் தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து அன்பர்களே, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பின் செவ்வாய் போன்ற பாவக கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை களைந்து, சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையில் இணையும் பொழுது, இல்லற வாழ்க்கை பரிபூர்ணத்துவத்தையும் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே !

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகத்தில் தாய் மற்றும் தந்தையை பிரதிபலிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டுமே இன்னல்களை தரும் அமைப்பாகும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, திடீர் அதிர்ஷ்டத்தை 8ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இது ஜாதகருக்கு தனது தொழில் வழியில் பிரதிபலிக்கும், தொழில் மூலம் ஜாதகர் சுபயோக வாழ்க்கையை பெறுவர் என்பதுடன், 8ம் வீடு வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் நன்மைகளை குறிக்கும், எனவே ஜாதகர் திருமண பந்தத்தில் இணைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே புத்திசாலித்தனம், எதிர்வரும் சனி திசையை 3,6,8,9,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பரிபூர்ண யோகத்தை நல்குவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையையும் சிறப்பிக்கும் என்பதால், நம்பிக்கையுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

சர்ப்ப கிரகங்கள் ( ராகு கேது ) சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசா புத்திகளில் வழங்கும் பலாபலன்களும் !



 இறை அருளின் கருணையினால் நம்மை இயக்குவதும், இயங்க வைப்பதும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, இதில் மற்ற 7 கிரகங்களுக்கு இல்லாதா தனித்தன்மை சாயாகிரகங்களுக்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை, சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றார்களோ அந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை இவர்களுக்கு உண்டு என்பதுடன், ஒரே பாவகத்தில் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வல்லமையையும் தானே ஆளுமைக்கு கீழ் எடுத்துக்கொண்டு அவர்கள் தரும் பலாபலன்களை தனது பலாபலனாக வழங்கு தனித்தன்மையும் உண்டு, என்பதால் நமது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது சாய கிரகங்கள் நமக்கு யோகத்தை தருகின்றனரா ? அவயோகத்தை தருகின்றனரா ? என்பதை நிர்ணயம் செய்ய இயலும்.

அடுத்து சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தாலும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை என்ன? அவை நமக்கு யோக பலன்களை தருகின்றதா ? அவயோக பலன்களை தருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சாயாகிரகங்களின் திசா புத்தி நமக்கு தரும் பலாபலன்கள் பற்றி ஓர் முடிவுக்கு வர இயலும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் ராகுவும், லக்கினத்தில் கேதுவும் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்திருக்கின்றனர், இதில் லக்கினத்தில் அமர்ந்த  கேது ஜாதகருக்கு சுபத்துவம் பெற்று லக்கின பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகருக்கு ஜெனன காலத்தில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, நல்ல உடல் நலம், சிறந்த கல்வி, சிறந்த அறிவு திறன், தனது சிந்தனை திறன் கொண்டு சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், தன்னம்பிக்கை குறையாத மன நிலை, எதிர்ப்புகளை மிக எளிதாக வெற்றிகொள்ளும் தன்மை, மிகுந்த சிந்தனை திறன் மற்றும் மதி நுட்பம் என ஜாதகரை லக்கினத்தில் அமர்ந்த கேது ஓர் பூரணத்துவம் பெற்ற மாமனிதராக உலகிற்கு அடையாளம் காட்டியது, மேலும் ஜாதகரின் ஒழுக்கம், நல்ல மனம், வெளிப்படையாக பழகும் தன்மை யாவும் ஜாதகரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது, ஜாதகருக்கு லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் கேது பகவான் நல்ல ஆன்மீக வெற்றியையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் மிக  இளம் வயதிலேயே பெற்று தந்தது, லக்கினம் உபய காற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 18 பாகைகளையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனுடன் கூடிய வீரியத்தையும், பரந்த மனபக்குவத்துடன் கூடிய ஆளுமை திறனையும் வாரி வழங்கியது கேது பகவானின் ஆளுமையினாலே என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு கேது பகவான் ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் அமர்ந்து முழு சுபயோகங்களையும் தருவது கவனித்தக்க சிறப்பு அம்சமாகும், இதற்க்கு நேரெதிராக களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தரும் வலிமையை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியில் 18 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் மகர ராசியில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பதும், தனுசு ராசிக்கு உற்ப்பட்ட களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவதும், ஜாதகருக்கு நன்மையை தரவில்லை, ஜாதகருக்கு இளம் வயதிலேயே காதல் எனும் விஷயத்தில் மூழ்கடித்து, தனக்கு சற்றும் பொருந்தாத ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, அதன் வழியிலான கடுமையான இன்னல்களை அனுபவிக்க செய்தது, குறிப்பாக ஜாதகரின் முதல் திருமணம் ஜாதகருக்கு வீண் அவப்பெயரையும், எதிர்பாராத இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகர் இதன் பாதிப்பில் இருந்து விடுபடவே வெகுகாலம் ஆனாது என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்களோ அந்த பாவகத்தை வலிமை பெற செய்யயும் நிலையில் இருப்பின் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் இதில் மாற்று கருத்து இல்லை, ஒரு வேலை தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்கின்றனர் என்றால், ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் இல்லையெனில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தாலும் சாயாகிரகங்கள் தரும் பாதிப்பு மறையாத வடுவாக நமது வாழ்க்கையில் நீடித்து நின்றுவிடும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு 100% விகித பாதிப்பை தருவது ஜாதகருக்கு சற்று கவலைதரும் விஷயம் என்ற போதிலும், ராகு கேது தனது திசா,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் என்ன ? என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ராகு தனது திசையில் தரும் பலாபலன்கள் : ( 28/10/2001 முதல் 28/10/2019 வரை )

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் நின்ற ராகு பகவான் தான் நின்ற பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கிய போதும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் 1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்கியது ராகு திசை காலத்திலேயே ஜாதகர் மறுமணம் செய்து நல்ல குழந்தை பேருடன் வெளிநாடுகளில் நல்ல ஜீவனத்துடன் ஜீவிக்க செய்தது, இதற்க்கு  காரணம் ஜாதகரின் 5ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் வியாபித்து வலிமை பெற்று நின்றதே அடிப்படை காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகர் தொடர்ந்து வெளிநாடுகளில் தனது அறிவு திறன் கொண்டு சுய சம்பாத்தியத்தையும், நல்ல வெளிவட்டார பழக்க வழக்கங்களையும் பெற்று பிரபல்ய யோகத்தை பெற்று தந்து இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாதிப்பிற்கு ஆளான ஓர் கிரகம் தனது திசையிலும் இன்னல்களை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகும், சுய ஜாதகத்தில் பாவக வழியில் பாதிக்கப்பட்ட கிரகம் தனது திசையில் எந்த ? பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கிய போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு ஏற்று நடத்திய  பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கியது .

கேது தனது ( திசை ????? )  புத்திகளில் தரும் பலாபலன்கள் :

கேது பகவானும் தனது புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு 1,5ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து  இருந்தாலும் சரி தான் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமை என்ன ?  என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்ப்பின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை இழக்க செய்யின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது  மிக அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சனி திசை ( எதிர் வரும் ) தரும் பலாபலன்களும், சுய ஜாதக வலிமையின்மையும்!

 

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்புகளை தரும்,  ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளை தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதனால் வரும் இன்னல்களை ஜாதகர் சந்திக்காமல், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை மட்டுமே ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் பற்றியும், எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட பல பாவகங்கள் வலிமையற்று காணப்பட்ட போதிலும், வலிமை பெற்ற பாவக பலனையே கடந்த ராகு திசை ஏற்று நடத்தியிருப்பது ஜாதகருக்கு சுபயோக பலன்களை வழங்கியதுடன், அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசையை 2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, ஜாதகர் குரு திசையில் 2,5,8ம் பாவக வழியில் இன்னல்களையும், 6,10ம் பாவக வழியில் சுபயோகங்களையும் பெற்றுக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ராகு  புத்தி வழங்கும் பலன்களை சிந்திப்போம், தற்போழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை தருவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தற்போழுது 4ம் பாவக வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தந்துகொண்டு இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க சிறப்புஅம்சமாகும்.

 இனி ஜாதகருக்கு அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதே அதிமுக்கியமான கேள்வி, ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 13 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் 18 பாகைகளையும் கொண்டிருப்பது மிகுந்த நன்மைகளை குறுகியகாலத்தில் வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகரின் தொழில் சர மண் தத்துவம் சார்ந்து அமைந்திருப்பது மேலும்  வலுசேர்க்கும் அமைப்பாகும், ஜாதகர் சனி திசை காலத்தில் 11ம் பாவக வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும், சுபயோகங்களையும் சர மண் மற்றும்  ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் இருந்து தன்னிறைவாக பெறுவார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,7,8,9,12 என 8 வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் எதிர்வரும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையை தரும், ஜாதகர் தனது தொழில்  அமைப்புகளில் இருந்தும், தனது அறிவுத்திறன் மூலமும் நல்ல அதிர்ஷ்ட  வாய்ப்புகளை தன்னிறைவாக பெறுவார், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் விஷயமாகும், நடைபெறுவது சுப கிரகத்தின் திசையா ? அசுப கிரகத்தின் திசையா? என்று ஆய்வு செய்வதைவிட, நடைபெறும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை கண்டுணர வாய்ப்பளிக்கும் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 3 பிப்ரவரி, 2018

திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவது ஏன் ?



திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவது ஏன் ?

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வரன் வதுவின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் பெரும்பாலும் நட்ஷத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, அடுத்து ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, அதற்க்கு அடுத்து திசாசந்திப்பு, ஏகதிசை பொருத்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, இவையாவும் தம்பதியரின் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தருமா ? என்றால் வாய்ப்பு குறைவு என்பதே சரியான பதில், மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தாராமல், வரன் வதுவின் ஜாதகங்களில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பொழுது தம்பதியரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதை மிக உறுதியாக சொல்லலாம், திருமணம் பொருத்தம் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் அமைப்பது எப்படி ? என்பதை ஓர் உதாரணம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

வது ஜாதகம்


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : உத்திரம் 1ம் பாதம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,6,8,10,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,7ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

வரன் ஜாதகம்


லக்கினம் : துலாம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் ஜீவனஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,6,8,10,12ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட வது வரன் இரண்டு ஜாதகத்திலும், வரன் ஜாதகம் என்பது மிகவும் வலிமையுடையாதாக காணப்படுகிறது, குறிப்பாக இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் வீடுகளான 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் தொடர்பு பெறுவதுடன், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகின்றது, வதுவின் ஜாதகத்தில் 10 பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், இல்லற வாழ்க்கையை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 27/02/2013 முதல் 27/02/2031வரை ) 4,6,8,10,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு சிறப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது தனது கணவன் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுவது எடுத்து காட்டுகிறது, எனவே ஜாதகி தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிப்படையாத ஜாதகமாக தேர்வு செய்வது சகல நலன்களையும் இல்லற வாழ்க்கையில் வாரி வழங்கும், இறையருள் ஜாதகிக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை துணையையே தேர்வு செய்து தந்திருப்பது சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 5,9ம் வீடுகள் வலிமை பெற்றதன் தன்மையே என்றால் அது மிகையில்லை.

 வரனின் ஜாதகத்தில் இயற்கையாவே 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்றுஇருப்பது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 04/02/2010 முதல் 04/02/2030 வரை ) 1,5,7,11ம் வீடுகள் ஜீவனஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான  பலனை வாரி வழங்குவது ஜாதகருக்கு அதீத நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் லக்கின வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், புகழ்மிக்க பொறுப்புகள், வெகுமதி கவுரவம், அந்தஸ்து , சமூகம் மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம், அரசியல் வியாபாரத்தில் வெற்றி என்ற வகையிலும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சமயோசித அறிவு திறனால் லாபம், கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளால் லாபம், வாழ்க்கையில் மேன்மையான நிலை, புத்திசாலித்தனமான வியாபார வல்லமை, யோகம் மிக்க புத்திர பாக்கியம், குல தெய்வ ஆசீர்வாதம் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்ட வாய்ப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும், லாப ஸ்தான வழியில் இருந்து வலிமை மிக்க பெரிய பதவிகள் ஜாதகரை தேடிவரும் யோகம், அரசு மற்றும் தனியார் துறை வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மூலம் ஜீவன மேன்மை பெறுதல், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, பெற்றோர் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுதல் என ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அபரிவிதமான நன்மைகளை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்பை தரும், மேலும் ஜாதகருக்கு கடகம் ஜீவன ஸ்தானமாக அமைந்து மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சகல சுகபோகங்களையும் ஜாதகர் சுவீகரிக்க யோகமுடையவர் என்பதை மேற்கண்ட அமைப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

வதுவின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு 4,6,8,10,11,12ம் வீடுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையே தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வரனுக்கு அடுத்து வரும் சூரியன் திசை 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசை 2,4,6,8,10,12ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட இருவரும் திருமணம் செய்துகொள்வதால் இல்லற வாழ்க்கை 100% விகிதம் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

குறிப்பு :

திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவதால் தம்பதியரின் வாழ்க்கை இணைபிரியாததாகவும், சகல சௌபாக்கியங்களுடன், பதினாறும் பெற்று வாழையடி வாழையாக செழித்தோங்கி வாழ்வார்கள் என்பதே சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவதின் சிறப்புஅம்சமாகும், இனிவரும் தலைமுறையினர் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலையின் அவசியத்தை புரிந்து இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல சௌபாக்கியங்களையும் நமக்கு வாரி வழங்கும், வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, சுய ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் !


 சுய ஜாதகம் நமது வாழ்க்கையில் வரும் நன்மை தீமைகளை மட்டும் கோடிட்டு காட்டுவதல்ல, பாவக வலிமையின் அடிப்படையில் நமது வாழ்க்கையை திட்டமிடுதல்களுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ள நல்வழிகாட்டுதல்களையும் வழங்கும் வல்லமை பெற்றது, இன்றை சூழ்நிலையில் உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம், வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் " சுவரில்லாமல் சித்திரம் எழுத முடியாது " எனவே நமது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் நமது " ஜீவனை கருத்துடன் காப்பது " அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 4ம் பாதம் 

 ஜாதகரின் இழப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்ல, நமது மனதையும் கடுமையாக பாதிப்பை  தந்து மீள இயலாத துன்பத்தை தந்துவிட்டது, ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 4,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் பாரம்பரியத்தையும் ஜாதகர் செய்த புண்ணியகாரியங்களையும் நமக்கு மிக எளிதாக தெளிவுபடுத்தும், ஜாதகரின் தொழில் திறமை, அதிர்ஷ்டம், குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி, இறை அருளின் ஆசிர்வாதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த போதிலும், ஜாதகரின் பாதுகாப்பற்ற பயணம் ஜாதகரின் உயிரை பறித்தது, இதற்க்கு முன் ஜாதகர் மூன்று விபத்துகளை சந்தித்த போதிலும், ஜாதகரின் உயிருக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, உடலுக்கும் பெரிய இன்னல்களை தரவில்லை, ஏனெனில் ஜாதகர் சந்தித்த விபத்துகள் யாவும் நான்கு சக்கர வாகனத்தில் என்பதால், வாகனங்களுக்கு மட்டுமே கடுமையான பாதிப்பை தந்தது, இறை அருளால் ஜாதகருக்கு எந்த வித பாதிப்பை சந்திக்கவில்லை, இறுதியில் ஜாதகரின் உயிரை பறித்த விபத்து என்பது இருசக்கர வாகனத்தில் நிகழ்ந்தது, அதுவும் ஜாதகரின் அஜாக்கரதையால் தலை கவசம் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்டது என்பது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும்.

 நம்மிடம் ஜாதக ஆலோசனை பெரும் பொழுது ஜாதகருக்கு இந்த விஷயம் மிகவும் தெளிவாக விளக்கம் தந்து அறிவுறுத்தப்பட்டது, இருப்பினும் ஜாதகரின் கவனக்குறைவு உயிரிழப்பு வரை அழைத்து சென்றது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெற்று கொண்டு இருக்கும் குரு திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான  பலனையும், குரு திசை சனி புத்தி வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையும் தந்த போதிலும், சனி புத்தியில் ராகு அந்தரம் 4,12ம் வீடுகள் பேரிழப்பை தரும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது சிறு விபத்திலேயே ஜாதகர் மரணத்தை சந்திக்கும் சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைந்து ஜாதகருக்கு அசட்டு தைரியத்தை வழங்கி, குல தெய்வத்தின் கருணையை பெற முடியாத சந்தர்ப்பத்தில் உயிரிழப்பை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

 ஜாதகர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் பயணித்து இருப்பின் இந்த மரணம் நிகழ்ந்து இருக்கவே வாய்ப்பில்லை, அனைவரும் பாதுகாப்பாக வண்டி வாகனங்களில் பயணிப்பது அவசியம் என்ற போதிலும், சுய ஜாதகத்தில் 1,4,6,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் அவர்கள் அனைவரும், இறை அருள் தந்த தனது உடலையும் உயிரையும் பேணிப்பாதுகாப்பது மிக மிக அவசியமாகிறது, இதை சுய ஜாதகம் கொண்டு நாம் மிக தெளிவாக உணர இயலும், மேற்கண்ட ஜாதகரின் இழப்பு என்பதே இறுதியாக இருக்க இறை அருள் கருணை புரியட்டும், அனைவரும் ஓர் நாளில் இறப்பது உறுதியென்ற போதிலும் நமது கர்மவினை பதிவினை இந்த பூ உலகில் கழித்துக்கொண்டு இறைநிலையை அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும், விபத்துகளால் வரும் இழப்புகளில் இருந்து மகரிஷி அய்யா வழங்கிய  " அருட்க்காப்பு " எனும் வேத மந்திரம் நம் அனைவரையும் காக்கும், என்பதனை ஒவ்வொரு பயணத்திலும் நாம் நினைவில் கொள்வதுடன், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பாதுகை பட்டையையும் அணிந்து செல்வதை நமது கடமையாக ஏற்பது அவசியமாகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலன பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருந்தது சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகரின் கவனமின்மையும், பாதுகாப்பற்ற பயணமும், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அனைத்தையும் அவருடன் மண்ணோடு மண்ணாக மறைந்ததுடன், அவரை சார்ந்த அனைவரையும் மீளாத்துயரத்தில் அழுத்திவிட்டு சென்றுவிட்டது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696