சனி, 3 பிப்ரவரி, 2018

திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவது ஏன் ?



திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவது ஏன் ?

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வரன் வதுவின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் பெரும்பாலும் நட்ஷத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, அடுத்து ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, அதற்க்கு அடுத்து திசாசந்திப்பு, ஏகதிசை பொருத்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, இவையாவும் தம்பதியரின் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தருமா ? என்றால் வாய்ப்பு குறைவு என்பதே சரியான பதில், மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தாராமல், வரன் வதுவின் ஜாதகங்களில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பொழுது தம்பதியரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதை மிக உறுதியாக சொல்லலாம், திருமணம் பொருத்தம் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் அமைப்பது எப்படி ? என்பதை ஓர் உதாரணம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

வது ஜாதகம்


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : உத்திரம் 1ம் பாதம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,6,8,10,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,7ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

வரன் ஜாதகம்


லக்கினம் : துலாம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் ஜீவனஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,6,8,10,12ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட வது வரன் இரண்டு ஜாதகத்திலும், வரன் ஜாதகம் என்பது மிகவும் வலிமையுடையாதாக காணப்படுகிறது, குறிப்பாக இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் வீடுகளான 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் தொடர்பு பெறுவதுடன், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகின்றது, வதுவின் ஜாதகத்தில் 10 பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், இல்லற வாழ்க்கையை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 27/02/2013 முதல் 27/02/2031வரை ) 4,6,8,10,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு சிறப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது தனது கணவன் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுவது எடுத்து காட்டுகிறது, எனவே ஜாதகி தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிப்படையாத ஜாதகமாக தேர்வு செய்வது சகல நலன்களையும் இல்லற வாழ்க்கையில் வாரி வழங்கும், இறையருள் ஜாதகிக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை துணையையே தேர்வு செய்து தந்திருப்பது சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 5,9ம் வீடுகள் வலிமை பெற்றதன் தன்மையே என்றால் அது மிகையில்லை.

 வரனின் ஜாதகத்தில் இயற்கையாவே 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்றுஇருப்பது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 04/02/2010 முதல் 04/02/2030 வரை ) 1,5,7,11ம் வீடுகள் ஜீவனஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான  பலனை வாரி வழங்குவது ஜாதகருக்கு அதீத நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் லக்கின வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், புகழ்மிக்க பொறுப்புகள், வெகுமதி கவுரவம், அந்தஸ்து , சமூகம் மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம், அரசியல் வியாபாரத்தில் வெற்றி என்ற வகையிலும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சமயோசித அறிவு திறனால் லாபம், கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளால் லாபம், வாழ்க்கையில் மேன்மையான நிலை, புத்திசாலித்தனமான வியாபார வல்லமை, யோகம் மிக்க புத்திர பாக்கியம், குல தெய்வ ஆசீர்வாதம் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்ட வாய்ப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும், லாப ஸ்தான வழியில் இருந்து வலிமை மிக்க பெரிய பதவிகள் ஜாதகரை தேடிவரும் யோகம், அரசு மற்றும் தனியார் துறை வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மூலம் ஜீவன மேன்மை பெறுதல், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, பெற்றோர் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுதல் என ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அபரிவிதமான நன்மைகளை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்பை தரும், மேலும் ஜாதகருக்கு கடகம் ஜீவன ஸ்தானமாக அமைந்து மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சகல சுகபோகங்களையும் ஜாதகர் சுவீகரிக்க யோகமுடையவர் என்பதை மேற்கண்ட அமைப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

வதுவின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு 4,6,8,10,11,12ம் வீடுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையே தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வரனுக்கு அடுத்து வரும் சூரியன் திசை 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசை 2,4,6,8,10,12ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட இருவரும் திருமணம் செய்துகொள்வதால் இல்லற வாழ்க்கை 100% விகிதம் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

குறிப்பு :

திருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவதால் தம்பதியரின் வாழ்க்கை இணைபிரியாததாகவும், சகல சௌபாக்கியங்களுடன், பதினாறும் பெற்று வாழையடி வாழையாக செழித்தோங்கி வாழ்வார்கள் என்பதே சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தருவதின் சிறப்புஅம்சமாகும், இனிவரும் தலைமுறையினர் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலையின் அவசியத்தை புரிந்து இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல சௌபாக்கியங்களையும் நமக்கு வாரி வழங்கும், வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக