பின்தொடர...

Wednesday, February 21, 2018

திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?


கேள்வி :

 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?

பதில் : 

  சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் ( லக்கினம் முதல் விரைய ஸ்தானம் வரை ) பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதாவது தாங்க இயலாத துன்பத்தையும் துயரத்தையும் தரும், இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 7ம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஜாதகருக்கு திருமணம் சார்ந்த தடைகளும் தாமதங்களும் நிச்சயம் ஏற்படுவதுடன், தாம்பத்திய வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமையை தெளிவாக தெரிந்துகொண்ட பிறகே திருமண வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், தனக்கு வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.லக்கினம் : தனுசு 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோஹிணி 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் பாதிக்கப்பட்ட அமைப்பாக கருதலாம், ஜாதகருக்கு தற்போழுது 30 வயது நடைமுறையில் உள்ளது, திருமணம் என்பது இன்னும் எட்டா கனியாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலாக அவரது செயல்பாட்டையே காரணமாக சொல்லலாம், தனக்கு வந்த நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் போக்கு நெடுங்கால தாமதத்தை தந்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, இதற்க்கு காரணமாக ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே என்றால் அது மிகையாகாது, லக்கினம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அவ்வளவு சிறப்புகளை தருவதில்லை, உதாரணமாக ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட மனநிலையை பெற்று இருப்பார், உடல் மனம் இரண்டும் ஓர் நேர்கோட்டில் இயங்காது, இயற்க்கைக்கு புறம்பான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், அதீத கற்பனையில் ஜீவனம் செய்யும் அமைப்பை பெற்று இருப்பதுடன், மற்றவர்களுடனான புரிதல் மிக மிக குறைவாக அமைந்திருக்கும், மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட ஜாதகர் தனது திருமண வாழ்க்கையினை இவ்வளவு காலமும் தள்ளிபோட்டுக்கொண்டே வருவது ஏன் என்பது ஜாதகருக்கே வெளிச்சம், நமது ஜாதக கணித முறையின் படி ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுனத்தில் அமைவதால், ஜாதகரின் அசட்டு தனமும், அலட்சியமும், முயற்சி இன்மையும் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக சொல்லலாம்.

7ம் வீடு பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் சிறப்பின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, திருமண வாழ்க்கை மூலம் நலம் பெறுவதற்கான சிறு அறிகுறியும் தெரியவில்லை, முரண்பட்ட நட்பு, அதீத கற்பனை, ஆர்வமின்மை போன்ற பாதிப்புகளால் ஜாதகர் பாதிக்கப்படுவது கவனிக்கத்தக்கது, 7ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுனத்தில் அமைவது, ஜாதகரின் உடல் ரீதியான பாதிப்புகள் தாம்பத்திய ரீதியான வீரியத்தை வெகுவாக இழக்க செய்வதுடன், வீண் மனபயத்தையும் வாரி வழங்குகிறது, சுப காரியங்களை வெகு விரைவில் நிறைவேற்றி வைக்கும் தன்மை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடும் ஜாதகருக்கு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், ஜாதகருக்கு வரும் நல்ல நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதுடன், சுப நிகழ்வுகளை நிறைவேற்றும் வல்லமையை தடுக்கிறது, ஜாதகரின் சிந்தனையும் செயல்பாடுகளும் விலாசமான பார்வையில் இல்லாதது 5ம் பாவக வலிமை இன்மையை தெளிவு படுத்துகிறது, சுய புத்தி அல்லது சொல்புத்தி இரண்டில் சுய புத்தி ஜாதகருக்கு சிறப்பாக செயல்பட மறுப்பதால், அனைத்தையும் உதறித்தள்ளும் நிலையில்  ஜாதகர் இருக்கின்றார்.

கடந்த ராகு திசை ( 09/11/1999 முதல் 09/11/2017 வரை ) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 200% விகித இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு வாரி வழங்கி இருப்பது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை தந்து இருக்கிறது , மேலும் ராகு திசையில் சூரியன்,சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியது ஜாதகருக்கு கடுமையான தடைகளை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 09/11/2017 முதல் 09/11/2033 ) வரை ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 5,8ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 4,10ம் வீடுகள்  வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, எனவே பெற்றோர் மற்றும் உறவுகள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தாமதமாகாமல் தேர்வு செய்து, இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும் என்பது  " ஜோதிடதீபம் " வழங்கு அறிவுரையாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தான வாழ்க்கையில் வாழ்க்கை துணையாக வரும் எதிர்பாலின அன்பரிடம் இருந்து அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் உள்ளதா ? என்பதை கருத்தில் கொண்டும், தனக்கும் வாழ்க்கை துணைக்கும் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும், இதற்க்கு மாறாக செயல்படுவது திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment