பின்தொடர...

Tuesday, February 27, 2018

ராகு கேது தரும் சுபயோக பலாபலன்கள் - சுய ஜாதக ஆலோசணை


  சுய ஜாதகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகங்களை வலிமை பெற செய்வது என்பது, ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை தரும் அமைப்பாகும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ராகு கேது, ஜாதகருக்கு வழங்கும் சுபயோகங்கள் என்பது அளவிடமுடியாதது என்றால் அது மிகையாகாது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உள்ளது என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது நமக்கு தெரியவரும், ஆனால் ஜாதகருக்கு ராகு கேது கும்பத்தில் உள்ள 6ம் பாவகத்தில் ராகு பகவானும், சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் கேது பகவானும் அமர்ந்து இருப்பதே சரியான அமைப்பு, எனவே ஜாதகருக்கு சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவானும், விரையஸ்தானத்தில் கேது பகவானும் வலிமை பெற்று அமர்ந்திருப்பது ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு சத்ரு மற்றும் விறை ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது எந்த விதத்தில் ஜாதகருக்கு நன்மையை தரும் என்ற கேள்வி எழுவது இயற்கையே, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் நன்மை தீமையை செய்யும் வல்லமை உண்டு, உதாரணமாக சுய ஜாதகத்தில் லக்கினம் ஒரு ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பின், ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடை, உடல் பாதிப்பு மற்றும் ஜாதகர் தன்னை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், அதை போன்றே சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் தான் நினைக்கும் காரியங்கள் யாவினையும் வெற்றிகரமாக நடத்தும் வல்லமையை பெற்றவராகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்வார், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு பாவக தொடர்பு வழியில் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருகின்றார்.

எனவே ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன மேன்மையை பெறுவார், இது ஜாதகருக்கு பதவியில் வெற்றி வாய்ப்பு, உத்தியோகம் செய்வதில் சீரிய ஆர்வம், திடீர் பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நற்பெயர், சுய முயற்சியில் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என ஜாதகரை மிக சிறப்பு மிக்கவராக பிரகாசிக்க செய்யும், ஜாதகரின் சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10,11ம் வீடாகவும், சர மண் ஸ்திர காற்று ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தொழில் வழியிலான முன்னேற்றம் மற்றும் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்பின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக அமையும், சத்ரு ஸ்தானம் என்றவுடன் ஜாதகருக்கு அது இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகும், சத்ரு ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஓர் ஜாதகருக்கு நல்ல உடல் நிலை மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை வாரி வழங்கும், ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான பாதிப்பில் இருந்து வெகு விரைவில் மீண்டு வரும் யோகத்தை நல்குவதுடன், தனது வாழ்க்கை துணையை தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த பாசமுடன் வைத்திருக்கும் குணத்தை தரும் என்பது சிறப்பு விஷயமாகும்.

12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் 12 பாகை வரை வியாபித்தது நிற்கிறது, சிம்மத்தில் 12ம் பாவகத்திற்கு உற்ப்பட்ட இடத்தில் கேது அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு மிகுந்த அயன சயன சுகத்தை தரும், ( பனிரெண்டில் கேது அமர்வது பிறப்பில்லா நிலையை தரும் என்பதற்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம் ) கேது பனிரெண்டில் வலிமை பெற்று அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு மோட்ஷ வாழ்க்கை நல்கும், வலிமை அற்று அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிடும், மேற்கண்ட ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்று அமர்ந்த கேது ஜாதகருக்கு பாவக வழியில் ஜீவன ஸ்தானத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, எதிரிகள் செய்யும் சூழ்ச்சியே மிகுந்த பேரதிர்ஷ்டத்தை வாரி வழங்கிவிடும், தான் செய்யும் பணியில் எதிர்பாராத பதவி உயர்வு, வருமான உயர்வு என்ற அமைப்பில் சிறப்பை தரும் , சுய தொழில் செய்ப்பவர் எனில் ஜாதகருக்கு தொழில் துறையிலான அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவில்லாமல் அமையும், ஜாதகர் செய்யும் தொழில் முதலீடுகள் மிக பெரிய லாபத்தை வாரி வழங்கும்.

இல்லற வாழ்க்கையில் நல்ல அயன சயன சுக போகத்தை வாரி வழங்குவதுடன், ஜாதகரின் வாழ்க்கையில் நிறைவான சொத்து சுக சேர்க்கைகள் உண்டாகும், அதீத கற்பனைகள் கூட ஜாதகருக்கு நடைமுறைக்கு  வரும் என்பது சாயா கிரகங்கள் செய்யும் மாயாஜாலமாகும், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாழ்க்கையில் மிரளத்தக்க அதிசயங்கள் நடைபெறும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு :

 ராகுகேது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட  பாவகத்தை வலிமை பெற செய்கிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவேளை தான் அமர்ந்த பாவகத்தை ராகு கேது வலிமை பெற செய்யவில்லை எனில், ஜாதகருக்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்பது தாங்க இயலாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment