செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதது ஏன் ?



கடந்த பதிவின் தொடர்ச்சி ...

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சுக ஸ்தான வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள், சொத்துகளை இழத்தல், காரிய தடை, வறுமை, அதிர்ஷ்டமின்மை, குழப்பமான மனநிலை, அதிக வேலை பளு, விஷம் சார்ந்த இன்னல்கள், வசிப்பதற்கான வீடு அமைவதற்கு தடை, வண்டி வாகனம் சார்ந்த விறைய செலவுகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலை, அடிக்கடி தொழில் மாற்றம், வரவுக்கு மிகுந்த செலவுகள், சரியான தொழில் அமைவதற்கு தடை, அடிமை தொழில் வழியில் அதிக மன உளைச்சல், நிம்மதியின்மை, திடீர் நஷ்டம் மற்றும் எதிர்பாராத போராட்டம், கால விரையம், நிதி மேலாண்மையில் கவனமின்மை போன்ற இன்னல்கள் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செலவினங்கள், அனைவராலும் இன்னல்கள், பங்கு சந்தையில் நஷ்டம், திருப்தி இல்லாத வாழ்க்கை, சூது மூலம் பெருத்த நஷ்டம், விபத்து போன்ற இன்னல்களால் பாதிப்பு என்ற வகையில் துன்பத்தை தரும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வு, பரிச்சை,வழக்கு, போட்டி பந்தையங்களில் வெற்றியை தரும் என்ற போதிலும் உடல் நலம் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், வியாதியை எதிர்கொள்ளும் வல்லமையை தாராது, சிறப்பான வேலை அனுபவத்தை தரும், மற்றவர்களுக்கு சற்று சிரமத்தை தரும், எதிரிகளுக்கு மிகுந்த பாதிப்பை தரும், தனது சீரிய முயற்சியின் மூலம் வாழ்க்கையில் சில நன்மைகளை தரும்.

8,9ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளையே தரும், இருப்பினும் வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்கள் கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்கும், எதிர்பாராத துன்பம் மற்றும் விபத்து ஜாதகரின் வாழ்க்கை தரத்தையே கடுமையாக பாதிக்கும், திருப்தியில்லா மன நிலை ஜாதகர் செய்யும் காரியங்களில் வெளிப்படும், நீண்ட ஆயுள் ஜாதகருக்கு கிடைத்த முழு நன்மையாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கல்வியில் தடை, விரக்தி மனப்பான்மை, மனசஞ்சலம், விபத்து, போதிய அறிவுரை கிட்டாமல், போராட்ட வாழ்க்கையை  எதிர்கொள்ளும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம் பரிபூர்ணமாக கிடைக்காமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளுதல், முற்போக்கு சிந்தனை குறையும் தன்மை என மிகுந்த பாதிப்பை தரும்.

மேற்கண்ட பாவகங்கள் ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, அடுத்து தற்போழுது ஜாதகருக்கு சுக்கிரன் திசை நடைமுறையில் உள்ளது, இருப்பினும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்தித்து கொண்டும், சிறந்த வேலை, தொழில் அமையாமல் சிரமங்களையும், திருமணம் அமையாமல் அது சார்ந்த இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், இதற்கான காரணம் என்ன ? என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகருக்கு சுக்கிரன் திசை ( 23/07/2001 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, பாரம்பரிய முறைப்படி ஜாதகருக்கு சுக்கிரன் சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி என்ற போதிலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க காரணம் ஏன் ? என்ற கேள்விக்கு சுக்கிரன் திசை ஜாதகருக்கு சுப ஆதிபத்தியம் பெற்ற போதிலும், தனது திசையில் 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் எதிர்பாராத திடீர் இழப்புகளை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பதுடன், ஜாதகரின்  ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும், கும்ப ராசியில் அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டமின்மையை சுக்கிரன் திசையில் அனுபவிக்க வைக்கிறது என்பதுடன் ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகளில் பெரும் தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்குகிறது, மேலும் ஜாதகரின் முயற்சிகள் யாவும் கடும்  தோல்வியை சந்திக்கிறது, சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சில நன்மைகளை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை புதன் புத்தி 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் ஸ்தான வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகருக்கு சற்று நெருக்கடிகளை தரக்கூடும்.

எதிர் வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 23/07/2021 முதல் 23/07/2027 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தந்த போதிலும், 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக்கத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த சுபயோகத்தை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கு வருமான ரீதியாக சிறப்பான முன்னேற்றங்களையும், குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் சூரியன் திசையில் மிகுந்த யோக பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

எதிர் வரும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 23/07/2027 முதல் 23/07/2037 வரை )

சந்திரன் திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், 4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10,12ம் பாவக வழியில் இருந்து சிரமங்களையும் தரக்கூடும் என்பதால், ஜாதகர் சந்திரன் திசையில் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை சுவீகரிப்பதற்கான அதீத வாய்ப்புகளை உருவாக்கி, சகல விதங்களில் இருந்தும் வெற்றி பெற முயற்சிப்பதே மிகுந்த யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், நடைமுறையில் உள்ள திசை, எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், இல்லை எனில் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்வது நம்மை விழிப்புணர்வுடன் இயங்க செய்யும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே  ஜாதகர் 1,7ம் பாவக வழியில் இருந்து வரும் சிறப்பான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகருக்கான சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக