செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

சர்ப்ப கிரகங்கள் ( ராகு கேது ) சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசா புத்திகளில் வழங்கும் பலாபலன்களும் !



 இறை அருளின் கருணையினால் நம்மை இயக்குவதும், இயங்க வைப்பதும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, இதில் மற்ற 7 கிரகங்களுக்கு இல்லாதா தனித்தன்மை சாயாகிரகங்களுக்கு உண்டு என்பது நிதர்சனமான உண்மை, சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றார்களோ அந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை இவர்களுக்கு உண்டு என்பதுடன், ஒரே பாவகத்தில் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வல்லமையையும் தானே ஆளுமைக்கு கீழ் எடுத்துக்கொண்டு அவர்கள் தரும் பலாபலன்களை தனது பலாபலனாக வழங்கு தனித்தன்மையும் உண்டு, என்பதால் நமது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது சாய கிரகங்கள் நமக்கு யோகத்தை தருகின்றனரா ? அவயோகத்தை தருகின்றனரா ? என்பதை நிர்ணயம் செய்ய இயலும்.

அடுத்து சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தாலும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை என்ன? அவை நமக்கு யோக பலன்களை தருகின்றதா ? அவயோக பலன்களை தருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சாயாகிரகங்களின் திசா புத்தி நமக்கு தரும் பலாபலன்கள் பற்றி ஓர் முடிவுக்கு வர இயலும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் ராகுவும், லக்கினத்தில் கேதுவும் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்திருக்கின்றனர், இதில் லக்கினத்தில் அமர்ந்த  கேது ஜாதகருக்கு சுபத்துவம் பெற்று லக்கின பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகருக்கு ஜெனன காலத்தில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, நல்ல உடல் நலம், சிறந்த கல்வி, சிறந்த அறிவு திறன், தனது சிந்தனை திறன் கொண்டு சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், தன்னம்பிக்கை குறையாத மன நிலை, எதிர்ப்புகளை மிக எளிதாக வெற்றிகொள்ளும் தன்மை, மிகுந்த சிந்தனை திறன் மற்றும் மதி நுட்பம் என ஜாதகரை லக்கினத்தில் அமர்ந்த கேது ஓர் பூரணத்துவம் பெற்ற மாமனிதராக உலகிற்கு அடையாளம் காட்டியது, மேலும் ஜாதகரின் ஒழுக்கம், நல்ல மனம், வெளிப்படையாக பழகும் தன்மை யாவும் ஜாதகரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது, ஜாதகருக்கு லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் கேது பகவான் நல்ல ஆன்மீக வெற்றியையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் மிக  இளம் வயதிலேயே பெற்று தந்தது, லக்கினம் உபய காற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 18 பாகைகளையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனுடன் கூடிய வீரியத்தையும், பரந்த மனபக்குவத்துடன் கூடிய ஆளுமை திறனையும் வாரி வழங்கியது கேது பகவானின் ஆளுமையினாலே என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு கேது பகவான் ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் அமர்ந்து முழு சுபயோகங்களையும் தருவது கவனித்தக்க சிறப்பு அம்சமாகும், இதற்க்கு நேரெதிராக களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தரும் வலிமையை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியில் 18 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் மகர ராசியில் 8 பாகைகளையும் கொண்டு இருப்பதும், தனுசு ராசிக்கு உற்ப்பட்ட களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவதும், ஜாதகருக்கு நன்மையை தரவில்லை, ஜாதகருக்கு இளம் வயதிலேயே காதல் எனும் விஷயத்தில் மூழ்கடித்து, தனக்கு சற்றும் பொருந்தாத ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, அதன் வழியிலான கடுமையான இன்னல்களை அனுபவிக்க செய்தது, குறிப்பாக ஜாதகரின் முதல் திருமணம் ஜாதகருக்கு வீண் அவப்பெயரையும், எதிர்பாராத இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகர் இதன் பாதிப்பில் இருந்து விடுபடவே வெகுகாலம் ஆனாது என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்களோ அந்த பாவகத்தை வலிமை பெற செய்யயும் நிலையில் இருப்பின் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் இதில் மாற்று கருத்து இல்லை, ஒரு வேலை தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்கின்றனர் என்றால், ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் இல்லையெனில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தாலும் சாயாகிரகங்கள் தரும் பாதிப்பு மறையாத வடுவாக நமது வாழ்க்கையில் நீடித்து நின்றுவிடும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு 100% விகித பாதிப்பை தருவது ஜாதகருக்கு சற்று கவலைதரும் விஷயம் என்ற போதிலும், ராகு கேது தனது திசா,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் என்ன ? என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ராகு தனது திசையில் தரும் பலாபலன்கள் : ( 28/10/2001 முதல் 28/10/2019 வரை )

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் நின்ற ராகு பகவான் தான் நின்ற பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கிய போதும், தனது திசா, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் 1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்கியது ராகு திசை காலத்திலேயே ஜாதகர் மறுமணம் செய்து நல்ல குழந்தை பேருடன் வெளிநாடுகளில் நல்ல ஜீவனத்துடன் ஜீவிக்க செய்தது, இதற்க்கு  காரணம் ஜாதகரின் 5ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் வியாபித்து வலிமை பெற்று நின்றதே அடிப்படை காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகர் தொடர்ந்து வெளிநாடுகளில் தனது அறிவு திறன் கொண்டு சுய சம்பாத்தியத்தையும், நல்ல வெளிவட்டார பழக்க வழக்கங்களையும் பெற்று பிரபல்ய யோகத்தை பெற்று தந்து இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாதிப்பிற்கு ஆளான ஓர் கிரகம் தனது திசையிலும் இன்னல்களை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகும், சுய ஜாதகத்தில் பாவக வழியில் பாதிக்கப்பட்ட கிரகம் தனது திசையில் எந்த ? பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு, தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கிய போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு ஏற்று நடத்திய  பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கியது .

கேது தனது ( திசை ????? )  புத்திகளில் தரும் பலாபலன்கள் :

கேது பகவானும் தனது புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  1,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு 1,5ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து  இருந்தாலும் சரி தான் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமை என்ன ?  என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்ப்பின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை இழக்க செய்யின் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது  மிக அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. Lord of cusps என்று உங்கள் softwareல் உள்ள பாவ தொடர்புகளை நான் சுயமாக கணித்து பார்த்தேன்.சில சந்தேகங்கள் வருகின்றன.நீங்கள் கணித்து எதிர் வரும் பதிவில் எனக்கு விளக்கம் தர முடியுமா ஐயா?

    பதிலளிநீக்கு