பின்தொடர...

Tuesday, February 20, 2018

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ? தோஷம் ஏதாவது உள்ளதா ?


" பருவத்தே பயிர் செய் " என்பது பழமொழி, சரியான பருவ வயதில் திருமணம் நடைபெறுவதே சிறப்பான இல்லற வாழ்க்கைக்கு வழிவகுக்கும், திருமணம் தாமதமாக ஒருவரது சுய ஜாதகத்தில் பல காரணங்கள் இருந்த போதிலும் அடிப்படை காரணமாக அமைவது இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை இன்மையும், திருமண வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதுமே என்றால் அது மிகையாகாது, கீழ்கண்ட உதாரண ஜாதகருக்கு ஏன் திருமணம் நடைபெற தாமதம் ஆகிறது ? என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம்

  மேற்கண்ட கடக லக்கின ஜாதகருக்கு  அகவை 34 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமண முயற்சிகள் யாவும் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றி தெளிவு படுத்தும் 2,5,7,8,12ம்  வீடுகளின் தொடர்பு மற்றும் வலிமையை பற்றி ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பானது, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், களத்திர ஸ்தானமான 7ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பானது,  8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும், அயன சயன ஸ்தானமான 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தாம்பத்திய வாழ்க்கையில் வெகு தாமதத்தை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12 வீடுகளில் 2,7ம் வீடுகளை தவிர மற்ற வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும், குறிப்பாக ஜாதகரின் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிகழவேண்டிய பல சுப நிகழ்வுகளை தடை செய்வது கண்கூடாக தெரிவதுடன் 5ம் வீடு தாம் தொடர்பு பெற்ற வழியில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது மிகுந்த சிரமத்தை 5ம் பாவக வழியில் இருந்து தரும் அமைப்பாகும், 8ம் வீடு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிகழ்வுகளை குறிக்கும் அம்சமாகும், இது ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தரும் விஷயமல்ல, தாம்பத்ய வாழ்க்கையில் அயன சயன போகத்தை தரும் 12ம் வீடு வெகுவாக பாதிப்பது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து பெறவேண்டிய யோக பலன்களை தடைசெய்கிறது.

நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 2,3,7,9ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகத்தை தந்த போதிலும், 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை 200% விகிதம் 5,11ம் பாவக வழியில் இருந்து தருவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பதை தரும் விஷயமாகும், கடந்த செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தந்த போதிலும், 2,7ம் பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை, செவ்வாய் திசை முழுவதும் ஜாதகருக்கு தொழில் வழியில் இருந்தும் சுய வளர்ச்சி அமைப்பில் இருந்தும் முன்னேற்றங்களை மட்டுமே வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

 தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் சீரிய முயற்சியும், சுய தேடுதலும் ஜாதகருக்கு நல்லதோர் வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும் என்று மிக தெளிவாக கூறலாம், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான தொடர்பு ஜீவன ஸ்தான தொடர்பை பெறுவதால், ஜாதகர் தான் பணியாற்றும் துறையில் இருந்து நல்ல வாழ்க்கை துணையை இந்த ராகு புத்தியில் தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு, மேலும் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதால் நல்ல இல்லற வாழ்க்கை அமையும் என்பதை தெளிவாக கூறலாம்.

திருமண தாமதம் ஆக சுய ஜாதகத்தில் 5,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதும், நடைபெற்ற சந்திரன் மற்றும் செவ்வாய் திசைகள் ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியில் இருந்தும் சுய வளர்ச்சி அமைப்பில் இருந்துமட்டுமே நன்மைகளை ஏற்று நடத்தியது மட்டுமே அடிப்படை காரணமாக அமைந்துவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது ராகு திசை நடைபெற்றாலும் ராகு தனது திசா புத்தி காலத்தில் 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, எனவே ஜாதகர் தனது வாழ்க்கை துணையை சற்று சீரிய முயற்சி மூலம் தேடி பெறமுடியும் என்பதால் தன்னம்பிக்கையும், தைரியமும் பெறலாம், தோஷம் என்பது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலிருந்து மட்டுமே வரும் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

ஜாதகருக்கு 5,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு தமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment