சனி, 3 செப்டம்பர், 2022

பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?

 


கேள்வி : 

பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?

5ல் ராகு அல்லது கேது புத்திர தோஷம் உருவாகும் ராகு இருந்தால் புத்திரர் உண்டாக்குவதே இல்லை, அப்படி பிறந்தாலும் 10 அல்லது 15 வயதில் மரணத்தை தழுவி புத்திர சோகம் உண்டாகும் ஆனால் கேது இருந்தால் தாமதப்பட்டு குழந்தை உண்டாகும், ஆனால் திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் தாமதப்பட்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு, இது உண்மையா ?

பதில் :

ஜோதிடம் மற்றும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் கூறப்படும் முரண்பட்ட தவறான கருத்து இது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

அதற்க்கு முன் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து, ஐந்தாம் இடம் தங்களது ஜாதகத்தில் மீனம் தனுசு, ரிஷபம் துலாம், மிதுனம் கன்னி (சூரியனுடன் 16 பாகைக்கு மேல் சேராத புதன் ) கடகம் (வளர் பிறை சந்திரன்) ஆகிய ராசிகளாக அமைந்து இருப்பின் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாக அமையும், மேற்கண்ட 5ம் பாவகத்தில் அமரும் ராகு தனது முழு வலிமையையும் 5ம் பாவகத்தின் மீது செலுத்தி அந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை அடைய செய்வதால் 5ம் பாவகம் வலிமை பெற்று, புகழ் பெற்ற சுபயோகங்கள் நிறைந்த ஆண் வாரிசை தங்களுக்கு வாரி வழங்கும் எனபது நிதர்சனமான உண்மை, எனவே 5ல் ராகு அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பது கட்டுக்கதை, ஜோதிடம் சார்ந்த யாதொரு உண்மையும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.



லக்கினம் : மிதுனம் 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை, மேலும் 5ல் நின்ற ராகு திசை நடைமுறையில் உள்ளதால் புத்திர பாக்கியமே கிடையாது என்ற காரணத்தை முன்னிறுத்துகின்றனர், இது எந்த  அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம், ஜாதகருக்கு ஜென்ம லக்கினம் மிதுன ராசியில் 83:11 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 109:21 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது மிதுன ராசியில் 06:49 பாகையும், கடக ராசியில் 19:21 பாகையும் கொண்டது ஜாதகரின் ஜென்ம லக்கினம்.

இதை கருத்தில் கொண்டு ஜாதகரின் 5ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது  ஜாதகருக்கு 5ம் பாவகம் துலாம் ராசியில் 202:56 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில்  233:57 பாகையில் நிறைவு பெறுகிறது, அதாவது துலாம் ராசியில் 07:04 பாகையும் விருச்சிக ராசியில் 23:57 பாகையும் கொண்டது ஜாதகரின் 5ம் பாவகம், ஆனால் ராகு அமர்ந்து இருப்பது  துலாம் ராசியில் 191:05 பாகையில், இது ஜாதகருக்கு துலாம் ராசியில் நான்காம் பாவகமாக  அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது அவசியம், மேலும் இதுவே உண்மை நிலையும் கூட, எனவே ராகு பகவான் துலாம் ராசியில் உள்ள 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதி ஆகிறது, ஒருவேளை 5ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பின் பூர்வபுண்ணிய ஸ்தானம் 100% வலிமை பெற்று ஜாதகருக்கு ஆண் வாரிசாகவே பிறக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயம்.

மேலும் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் காணப்படுகிறது  இது ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசை நல்குவதுடன், ஜாதகரின் தன் துறை சார்ந்த நுண்ணறிவு திறனை சிறப்பாக வெளிப்படுத்தும், ஜாதகருக்கு 5ல் ராகு அமரவில்லை, துலாம் ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை  நிலை இதை அன்பர்கள் கருத்தில் கொண்டு சுய ஜாதக விழிப்புணர்வு  பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக