வியாழன், 8 செப்டம்பர், 2022

திருமணத்தடை ஏன்? ராகு திசை தரும் பாதிப்பா?

கேள்வி :

ராகு திசை தரும் பலன் என்ன? திருமணம் தாமதம், தடை ஆக காரணம் என்ன? 


லக்கினம் : கன்னி 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

பதில் : 

திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக சரியான வயதில் அமைய சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்தில் இருந்து 2,7ம் வீடுகள் வலிமை இழக்க கூடாது, மேலும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் மற்றும்  காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் எந்த விதத்திலும் பாதிக்க படமால் இருப்பதுடன் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான நற்பலன்களை வழங்கும், தங்களது ஜாதகத்தில் இந்த அமைப்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வோம்.

சகோதரிக்கு வணக்கம் தங்களது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளான 2,5,7,8,12ம் வீடுகளில் 2ம் வீட்  தனது சுய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையுடனும், 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனும் இருப்பது சிறப்பான அமைப்பாக கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்க்கையும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர பாக்கியமும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையையும் சுவீகரிப்பதற்கான வாய்ப்பை நல்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அயன சயன ஸ்தானமான 8,12ம் வீடுகள் தங்களுக்கு விரைய ஸ்தானமான  12ம் பாவக தொடர்பை பெறுவது  மிகுந்த மாங்கல்ய தோஷத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கான திருமண தாமதம் மற்றும் தடைக்கு அடிப்படை காரணம் ஆகும், மேலும் தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை (08/09/2015 முதல் 08/09/2033 வரை) சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவும் தங்களின் திருமண வாழ்க்கை தடை பெறுவதற்கு அடிப்படை காரணமாகும், மேலும் ராகு திசையில் தற்போழுது  நடைமுறையில் உள்ள சனி புத்தியும் ( 14/10/2020 முதல் 21/08/2023 வரை) தங்களுக்கு 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேலும் இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவே தங்களது திருமண தடை மற்றும் தாமதத்திற்கு அடிப்படை காரணம் என்பதை  கருத்தில் கொள்ளவும், இதற்கான தீர்வை முறையாக ஆலோசணை பெற்று நலம் பெறுங்கள்.

குறிப்பு : 

தங்களது சுய ஜாதகத்தில் திருமண தடையை தவிர்க்க திசா நாதன் ராகு புத்தி நாதன் சனி இருவரில் ஒருவர் ராகு அல்லது கேதுவின் நட்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண முயற்சிகளை மேற்கொள்ள நல்லதொரு இல்லற வாழ்க்கை அமையும், மணமகன் வரும் திசை? அவரது வீடு இருக்கும் திசை, தொலைவு ? ஆகிய விபரங்களை ஆலோசணையின்பொழுது தெளிவு படுத்துகிறோம் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக