புதன், 21 செப்டம்பர், 2022

தத்து பரிகாரம் செய்வது ஏன்? செய்வதால் பெற்றோர் மற்றும் குழந்தைக்கு யோக வாழ்க்கை கிட்டுமா?

 


குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்து, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட தகப்பன்தாய் ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட குழந்தையை தத்து பரிகாரம் செய்வது பெற்றோர் மற்றும் குழந்தைக்கு சுபயோகங்களை வாரி வழங்கும், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கு பாவகங்கள் பாதிக்கப்படாத நிலையில் தத்து பரிகாரம் செய்து தருவது என்பது முற்றிலும் ஜோதிட சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயலாகும், இதனால் சம்பத்தப்பட்ட குழந்தைக்கு பெற்றோர் ஸ்தான வழியில் இருந்து வரும் சுபயோகங்களும் "யோகபங்க" நிலையை பெற்று  ஜாதகத்தில் உள்ள நன்மை மற்றும் யோக வாழ்க்கை தடைபட்டு போக வாய்ப்பு உள்ளது, முறையான ஜாதக ஆலோசனை அற்று செய்யும் காரியங்கள் யாவும் மிக பெரிய இன்னல்களையும் துன்பங்களையும் அதிகரிப்பதற்கே வாய்ப்பு உள்ளது என்பதை நாம் இந்த கட்டுரையில் அறிவுறுத்த விரும்புகிறோம். 

சுய ஜாதகத்தில் ஆண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 4ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 10ம் பாவகமும்,  பெண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 10ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 4ம் பாவகமும், பெற்றோர் ஸ்தானமாக அமையும், ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு கொடும் வைரியாக செயல்படும், பிறவியில் இருந்தே பெற்றோருக்கு பரம எதிரியாக செயல்படும் அல்லது பெற்றோர் அந்த குழந்தைக்கு ஜென்ம எதிரியாக செயல்படுவார்கள், உதாரணமாக குழந்தைகள் பெற்றோரை தாக்குவது உயிர் பயத்தை தருவது, பொருளாதார சிக்கல்களை உருவாக்குவது அல்லது பெற்றோர் அந்த குழந்தையை வஞ்சிப்பது சிசு கொலை செய்வது, கருவில் இருக்கும் பொழுதே கருச்சிதைவு செய்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகும், பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இன்று தண்டனையை ஏற்று கொண்டு இருக்கும் பெண்மணியை தமிழகத்தில் உள்ள நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு ஆயுள் அமைப்பை பாதிப்பதுடன் திடீர் இழப்புகளையும் பொருளாதார சிக்கல்கல்களையும் கடுமையாக வாரி வழங்கும், விபத்து மறுத்த்துவ செலவினங்கள், பெற்றோர் பிரிவு வளரும் சூழ்நிலை பாதிக்கப்படும் தன்மை என மிகுந்த இன்னல்களை வாரி வழங்குவதுடன் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான உறவு நிலையும் பாதிக்கப்படும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாசம் பற்று அற்று ஒரு நிலையிலா உறவு என்ற துர்பாக்கிய நிலையை தந்துவிடும், உதாரணமாக வெளிநாடுகளில் குழந்தைகள் இங்கே வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை நாடி தவிக்கும் பெற்றோர், அல்லது முதியோர் இல்லத்தில் பெற்றோர் அவர்களது சொத்தை அனுபவிக்கும் பெற்றோர் என்ற நிலையில் தற்போழுது தமிழகம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் வீண் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் அதீத மனஅழுத்தம், மனப்போராட்டம், வீண் விரைய செலவு, வீண் மருத்துவ செலவு, உதவி இன்றி தவிக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் வழியில் போராட்டம், அனைவராலும் தொல்லை துன்பம், எதிர்பாரா திடீர் இழப்பினால் அனைத்தையும் இழந்து இன்னலுறும் தன்மை, சட்ட சிக்கல் மூலம் தண்டனைக்கு ஆளும் தன்மை, தெளிவில்லாத சிந்தனை, குழம்பிய மனநிலை, நிலையற்ற தன்மையினால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, பொதுவாழ்க்கையில் அவப்பெயர், எதிர்ப்புகளால் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை என கடுமையான இன்னல்களை தரும், உதாரணமாக சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தனது அப்பா வெற்றியாளர் என்று நெகிழ்ந்த பெண் குழந்தை, மேற்சொன்ன நிலைகளுக்கு குழந்தைகளின் ஜாதகம் காரணம் அல்ல, குழந்தைகள் ஜாதகத்தின் மீது பழிபோட்டு கட்டுரையை எழுதவில்லை "ஜோதிடதீபம்" சம்பந்தப்பட்ட பெற்றோரின் சுய ஜாதகத்தில் குழந்தைகளை குறிக்கும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும், இந்த விஷயத்தை குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் 4,10ம் பாவகங்கள் தனது பாதிப்பின் நிலையில் இருந்து நமக்கு அறிவுறுத்தும்.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் 200%விகித இன்னல்களை வழங்கும் பாதக ஸ்தானமான ( சார லக்கினம் 11ம் வீடு, ஸ்திர லக்கினம் 9ம் வீடு, உபய லக்கினம் 7ம் வீடு பாதக ஸ்தானமாக அமையும் ) 11,9,7 பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் தாங்க இயலாத 200% விகித இன்னல்களை தரும் அமைப்பு இதுவே ஆகும், பெற்றோர் குழந்தை இருவரும் கடுமையாக பாதிக்கப்படும் துர்பாக்கிய நிலையை தரும், தனது கண்முன் பெற்றோர் இழப்பும், பெற்றோர் கண்முன் குழந்தை இழப்பும் ஏற்படும் துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது, இந்த அமைப்பை பெற்ற குழந்தைகளை வெகு விரைவாக தத்து பரிகாரம் செய்துவிடுவதே சாலச்சிறந்தது, இது மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து இறை அருள் இருவரையும் காத்து அருள் புரியும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம் 

ராசி : சிம்மம்

நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம் 

 மேற்கண்ட பெண் குழந்தையின் ஜாதகத்தில் தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், தாய் ஸ்தானமான 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை 100% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் எதிர்வரும் சுக்கிர மகா திசை ( 02/10/2023 முதல் 02/10/2043 ) வரை  வலிமை அற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட ( தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது ) தந்தையின் ஸ்தான பலனை பாதக வழியில் தர இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது, இது தனது தந்தைக்கு சுக்கிரன் திசை ஆரம்பித்தவுடன் 200% சதவிகிதம் இன்னல்களை தரும், பாதக ஸ்தானம் கால புருஷனுக்கு 2ம் ராசியான ரிஷபமாக அமைவது குடும்பத்தை கடுமையாக பாதிப்பதுடன், பொருளாதார வீழ்ச்சியை கடுமையாக தரும், இது இந்த குழந்தையின் தகப்பன் ஜாதகத்திலும் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும்.

நடைபெறும் கேது திசை வலிமை பெற்ற 5 மற்றும் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது  நன்மையை தந்த போதிலும் எதிர்வரும் சுக்கிரன் திசையே மிகுந்த இன்னல்களையும் தகப்பனுக்கு உயிர் ஆபத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

எனவே சம்பந்த பட்ட பெற்றோர் தமது பெண் குழந்தையை முறையாக சதுர் வேதி  சொல்லும் அறிவுரையை ஏற்று தானதர்மம் செய்து முறைப்படி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று "தத்து பரிகாரம்" செய்யும் பொழுது மேற்கண்ட 200% விகித இன்னல்களில் இருந்து பெற்றோரும் குழந்தையும் கடவுள் அனுக்கிரகம் மூலம் முழுமையாக காப்பாற்ற படுவார்கள் என்பது ஜோதிட சாஸ்திரம் காட்டும் நல்வழியாகும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக