செவ்வாய், 20 செப்டம்பர், 2022

சனிமகா திசா மற்றும் புத்தி யாரை கடுமையாக பாதிக்கும் !

 

 நவ கிரகங்களின் திசா புத்தி அந்த்ரம் மற்றும் சூட்ஷம காலங்கள் ஒரு ஜாதகருக்கு தனித்துவம் வாய்ந்த தன்மையில் நன்மை தீமைகளை வழங்கும் என்று கருதுவது சுய ஜாதக வலிமை அறியாமல் கூறப்படும் தவறான கருத்துக்கள், சுப கிரகங்களின் திசா புத்திகள், கேந்திர கோணங்களில் அமர்ந்த கிரகங்களின் திசா புத்திகள், சுப கிரக சேர்க்க பார்வை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும் என்பது  சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கனம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை உணராமல் கூறப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள், இதை போன்றே அசுப கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே வழங்கும் என்பதும் சுய ஜாதக உண்மைக்கு புறம்பானது.

 நவ கிரகங்களின் திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்துமோ அன்றி, தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவது என்பது ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்து என்பது கவனிக்க தக்கது, எனவே ஒவ்வொரு ஜாதகருக்கு தனது ஜாதகத்தில்

 1) ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் எவ்வித வலிமையுடன் உள்ளது வலிமை பெற்று இருக்கின்றதா? அல்லது வலிமை அற்று இருக்கின்றதா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வது ஜோதிட ரீதியான விழிப்புணர்வை தரும் 

2) நடைபெறும் திசா புத்தி சுய  ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது அது தரும் பலன் நன்மையா ? தீமையா ? என்பதில் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வழி வகை செய்யும்.

3) நடைபெறும் திசா புத்திகள் கோட்சார ரீதியாக சுய ஜாதகத்தில் செல்லும் நட்ஷத்திரம் நமக்கு தரும் பலன் என்ன ? 

இந்த மூன்று விஷயங்கள் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை வெகு சிறப்பாக நாமே நிர்ணயம் செய்ய வழிவகை செய்யும்

உதாரணமாக : 


லக்கினம் : துலாம் 

ராசி : மகரம் 

நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 மேற்கண்ட ஜாதகருக்கு அறிவுறுத்த பட்ட ஆலோசணை என்பது துலாம் லக்கினம் மகர ராசி யோகாதிபதி ராசியாதிபதி சனி திசை சுபயோகங்களை வாரி வழங்கும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது குத்துமதிப்பாக, இதை கருத்தில் கொண்ட ஜாதகர் குரு திசை வழங்கிய அனைத்து பொருளாதர விஷயங்களை, சொத்து போன்றவற்றை முதலீடு செய்து குறுகிய காலத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார் குரு மகாதிசை ( 05/07/1996 முதல் 05/07/2012 வரை ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 4,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்கி இருக்கின்றது.

யோகாதிபதி ராசியாதிபதி ஜாதகருக்கு பேரிழப்பை தந்தது ஏன் ? என்பதை  ஆய்வு செய்யும் பொழுது ஜாதகருக்கு சனி திசை (  05/07/2012 முதல் 06/07/2031 வரை ) தற்போழுது 1,3,5,7,11 ஆகிய வீடுகள் துலாம் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தில் 200% விகிதம் இன்னல்களை வாரி  வழங்கி உள்ளது, ஜென்ம லக்கின வழியில்   உடல் நலம் மனநலம் பாதிப்பு , சூழ்நிலை எதிர்கொள்ள இயலாத தன்மை, சுய அறிவு சார்ந்த முடக்கம், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மை, தவறான முடிவுகளை மேற்கொள்ளுதல், மூன்றாம் பாவக வழியில் இருந்து சரியான விஷயங்களை  கிரகிக்கும்  வல்லமை அற்று போகுதல், முயற்சிகள் யாவும் கடுமையான இன்னல்களை வழங்குவது, போதிய திட்டமிடுதல்கள் இல்லாதது, வருங்காலத்தை யூகிக்க முடியாத தன்மை, பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து  சமயோசித அறிவு திறன் செயல் இழப்பு, பூர்வீகத்தில் குடியிருப்பதால்  அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலை, ஆண் வாரிசு அற்ற நிலை, களத்திர ஸ்தான வழியில் இருந்து தனி திறன் இன்மை கூட்டு முயற்சி பாதிப்பு இல்லற வாழ்க்கை பாதிப்பு  வீண் விரையம் மற்றவர்களை நம்பி ஏமாந்து போகுதல்  என கடுமையான பாதிப்புகள், லாப ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, பிற்போக்கு தனமான எண்ணங்கள், தோல்வி மனப்பான்மை, வீண் பயம், எதிர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என கடுமையான பாதிப்புகளை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை சனி மகா திசை வழங்கி உள்ளது.

சனி பகவானும் கோட்சார ரீதியாக தற்போழுது சந்திரன் மற்றும் செவ்வாய்  சாரத்தில்  சென்று திடீர் இழப்பு மற்றும் பேரிழப்பை பொருளாதர ரீதியாக வழங்குவது  ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடியை தரும் நிலையாகும்.

எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து, திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, கோட்சார கிரகங்கள் செல்லும் சார பலன் தரும் நன்மை தீமையை உணர்ந்து சுய ஜாதக ஆலோசனை பெரும்பொழுது நமது  வாழ்க்கையை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக