வெள்ளி, 23 செப்டம்பர், 2022

படையப்பா நீலாம்பரியும் பாதக ஸ்தானமும் !

 

 ஏழரைசனி பாதகஸ்தானம் எது ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பத்தை தரும்?

கேள்வி : 

 ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு உண்டா ?

பதில் :

 ஒரு ஜாதகர் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்கிறார் என்றால் அதற்க்கு அடிப்படை காரணம் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவை அல்ல அன்பர்களே மேற்சொன்ன தோஷங்கள் யாவும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் சொல்லப்படும் தவறான கருத்துக்கள், ஒருவரின் வாழ்க்கையினை 200% விகித பாதிப்பை தந்து எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கும் வல்லமை என்பது பாதக ஸ்தானத்திற்க்கு மட்டுமே உண்டு என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது, அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதக ஸ்தானம் பற்றிய தெளிவான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்பதால் மேற்சொன்ன தோஷங்கள் காரணம் என முன்னிறுத்தப்பட்டு தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது, சுய ஜாதக வலிமை சார்ந்த விஷயங்கள் மூடி மறைக்கப்படுகிறது, சரி பாதக ஸ்தானம் என்றால் என்ன ? இதனால் வரும் பாதிப்பு எத்தகையது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் உயிர்ப்புடன் இருப்பது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகம் ஏதாவது ஒன்றோ, சில பாவங்களோ பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகம் செயல் இழப்பத்துடன், ஜாதகர் பாதக ஸ்தான சம்பந்தம் பெற்ற வீடுகள் வழியில் இருந்து அதீத 200% விகித இன்னல்களை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது, உதாரணமாக படையப்பா நீலாம்பரியின் கதாபாத்திரம் சரியான எடுத்துக்காட்டு, வாழவேண்டிய வயதிலும் இவர்கள் வாழ்வதில்லை, வாழ வேண்டிய வழிமுறையையும் இவர்கள் அறிவதில்லை இதன் பாதிப்பை இவர்களை சார்ந்தவர்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலை தருவது கவனிக்கத்தக்கது.

ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான சம்பந்தம் பெறுவது 

 ஜாதகர் உடல் நலம் மன நலம் பாதிப்பு வளரும் சூழ்நிலை சிறப்பில்லை, பெற்றோருடன் வாழ இயலாத சூழ்நிலை, அறிவு பூர்வ செயல்திறன் குறைவு, ஆன்ம பலம் குறைந்து முரண்பட்ட வாழ்க்கையை ஜாதகர் சுவீகரிக்கும் தன்மை, தனது வாழ்க்கையினை தானே கெடுத்துக்கொள்ளுதல் என்ற வகையில் கடினமான இன்னல்களை வாரி வழங்கும்.

உதாரணமாக : 

லக்கினம் : மேஷம் 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

 ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகமே பாதக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 ) அடிப்படையில் பெற்றோருடன் வளரும் சூழ்நிலை அமையவில்லை, போதை வஸ்துக்களால் உடல் நலம் கடுமையாக பாதிப்பு, கல்வியில் தடை, தொழில் தடை, முரண்பட்ட இல்லற வாழ்க்கை அதனால் பிரிவு, கவுரவம் அந்தஸ்த்து வெகுவாக பாதிக்கப்பட்டு, ஜாதகர் மனநல ஆலோசணை பெற்று ஜீவிக்கும் தன்மையிலும் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலை என ஜாதகரே தனது வாழ்க்கைக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டார் என்பது கவனிக்க தக்கது.

 ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை ( 08/12/2006 முதல் 08/12/2024 வரை ) நல்ல வேலை இந்த வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை என்பது ஆறுதலான விஷயம் நடைபெறும் ராகுதிசையும், மேற்கண்ட ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி இருந்தால் இவரது வாழ்க்கை அதோகதிதான் என்பதை எவராலும் தடுக்க இயலாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம்.

 ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 )  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படி சம்பந்தம் பெற்றாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் எதிர்வரும் திசா புத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்ட  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தக்கூடாது என்பது மட்டுமே ஜாதகர் வாழ்வதற்கான வழி, இல்லையெனில் ஜாதகரின் வாழ்வு முன்னேற்றம் தொழில் பொருளாதாரம், இல்லற வாழ்க்கை, மனநிம்மதி, மனஉறுதி, செயல்பாடு, முயற்சி, கவுரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை யாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பது கவனிக்க தக்கது, இதில் இருந்து ஜாதகர் மீண்டு வருவது என்பது இயலாத காரியம் என்பதை அன்பு நேயரின் கேள்விக்கு பதிலாக வழங்குகிறோம்.

எனவே ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு என்பது பாதக ஸ்தான தொடர்பு என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம் அன்பரே!

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக