செவ்வாய், 31 ஜனவரி, 2012

10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு

வணக்கம்,
10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
ஒரு ஜாதகர் என்ன தொழில்/வேலை செய்து வருமானம் ஈட்டுவார் என எப்படி கண்டுபிடிப்பது?



உதாரணமாக
1.பத்தாம் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் காரகமான தொழிலா?

2.சாரம் பெற்ற கிரகத்தின் தொழிலா?

3.பத்தாம் வீட்டுக்கு உரியவனின் காரக தொழிலா?

4.பத்தாம் வீட்டுக்கு உரியவன் சாரம் பெற்ற கிரகத்தின் காரகமான தொழிலா?

5.பத்தாம் வீட்டை பார்ப்பவனின் காரகமான தொழிலா?

6.அல்லது வேறு எப்படி முடிவு செய்வது? 


பதில் : 
       
உங்களின் கேள்வியில் உள்ளபடி ஒரு ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்பு இல்லை, 

கால புருஷ தத்துவப்படி  ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எந்த வீடாக வருகிறதோ, அந்த அமைப்பின் படி தொழில் அமையும்,

சர, ஸ்திர, உபய , தத்துவப்படி இயற்கையாகவே ஜீவனம் ஜாதகருக்கு அமைந்து விடும் ,

நெருப்பு ,நிலம், காற்று, நீர்  ராசிகளில் ஜாதகருக்கு ஜீவன வீடாக எது அமைகிறதோ அவ்வகை தொழில் அமைப்புகளில் வெற்றிபெறுவார் ,
மேலும் ஜீவன ஸ்தான அமைப்பு நல்ல நிலையில் இருந்தால், தொழில் அமைப்பு, ஜாதகரை தேடி வரும்,   ஜீவன ஸ்தான அமைப்பு பாதிக்கப்பட்டால் , ஜிவனத்தை தேடி இவர் செல்ல வேண்டி வரும்.

எடுத்துகாட்டாக :

               ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் ரிஷபமாக வந்து, அந்த வீடு நல்ல நிலையில் இருந்தால், ஸ்திரமாக ஒரு இடத்தில் ஜீவனம் அமையும், மேலும் வக்கீல் , நிதி நிறுவனம் , வட்டி தொழில் , கமிஷன் தொழில் , அதிக முதலீடு செய்யப்படும் தொழில்கள் , உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், வாக்கு சம்பந்தப்பட்ட தொழில்கள் என அமையும் .

தொழில் என்பது ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தை மட்டுமே வைத்து நிர்ணயம் செய்து விட முடியும், இத்தனை குழப்பங்கள் தேவையில்லை, இதை நிர்ணயம் செய்ய கண்டிப்பாக சுய ஜாதகம் தேவை.


1 கருத்து: