ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாதக ஸ்தானத்தின் பலன் ஒரு ஜாதகருக்கு நடைபெற்றால் என்ன நடக்கும் ?



அண்ணே வணக்கம்,
      

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் எப்போதும் பாதக ஸ்தானம் பற்றி அதிகம் குறிப்பிடுகிறீர்கள். மற்ற ஜோதிடர்கள் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை கேட்டால் லாப ஸ்தானம்,பாக்கிய ஸ்தானம்,களத்திர ஸ்தானம் எப்படி  நமக்குத் தீமை செய்யும் எனக்கேட்டு உடம்பு புல்லரிக்கச் செய்கின்றனர். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான்.பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?.இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?.இத்தனை செய்யுமா ஏன் என்றால் நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?. நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.


வணக்கம் தம்பி தங்களின் சந்தேகங்களை தீர்த்தது வைப்பது ஜோதிடன் என்ற முறையில் எனது கடமையும் கூட , தங்களின் கேள்வி எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது , ஏனெனில் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற கேள்விகள் கேட்க்க இயலும் , இதிலிருந்து தங்களுக்கு ஜோதிட கலையின் மீது உள்ள அளவில்லா ஆர்வத்தை காட்டுகிறது , எவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேடுதல் இருக்கிறதோ , அவர்களுக்கு நிச்சயம் அந்த விஷயம் நிச்சயம் கிடைக்கும் , கடந்த ௮ வருடங்களுக்கு முன்பு தங்களை போன்றே ஜோதிடத்தை பற்றி உண்மை விஷயங்களை அறிய அதிக தேடுதலுடன் இருந்தேன் , அந்த தேடுதலின் பலனாகவும் , இறை அருளின் கருணையினாலும் , எனக்கு ஜோதிடத்திற்கும் , ஆன்மிகத்திற்கு சரியான குரு எனக்கு கிடைத்தார் , அவர்களின் அருளால் ஜோதிடத்தில் தெளிவும் , ஆன்மீகத்தில் விழிப்புணர்வும் பெற்றேன் எனவே தங்களுக்கும் தங்களின் தேடுதலுக்கும் இறை அருள் நிச்சயம் சரியான பதிலையும் , தெளிவையும் தரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை சரி இனி தங்களின் கேள்விக்கு உண்டான தெளிவான பதிலை பார்ப்போம் .


பாதகஸ்தானம் எப்போதும் தீமையான பலன்களைத்தான் தருமா?

பாதக ஸ்தானம் நிச்சயம் எப்பொழுது தீமையான பலனை மட்டுமே தரும் என்பதில் எவ்வித சந்தகமும் இல்லை உதரணமாக நமது வீட்டில் எரியும் விளக்குதானே அதை தொட்டால் நம்மை ஒன்றும் செய்து என்று சொல்ல முடியுமா ? உங்களது வீடு என்றாலும் உங்களது விளக்கு என்றாலும் அதில் எரியும் நெருப்பை தொட்டால் நிச்சயம் சுடவே செய்யும், "நெருப்பை தொட்டால் சுடும் என்பதே விதி"  இதை மாற்ற யாராலும் முடியாது , இதில் இருந்து தெரிவது பாதக ஸ்தானம் ஒருவருக்கு நிச்சயம் தீமையான பலன்களை மட்டுமே செய்யும் என்பது ஊறுதி .


இல்லை பாதகஸ்தான அதிபதி தான் பாதகம் செய்யுமா?.இல்லை பாதகஸ்தான அமர்வு பெற்ற கிரகங்கள் தான் தீமை செய்யுமா?

பாதக ஸ்தான அதிபதியும் கெடுதல் செய்ய மாட்டார் , பாதக ஸ்தானத்தில் அமர்ந்த கிரகமும் கெடுதல் செய்து , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் நடக்கும் பொழுது மட்டுமே , அதிக கெடுதலான பலனை அதாவது 200 மடங்கு கெடுதலான பலனை வாரி வழங்கும் , அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்காத சிரமங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டி சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குறிப்பாக சர லக்கினம் பெற்ற ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை பாதக ஸ்தானமான பதினொன்றாம் பாவகத்தின் பலனை தரும் பொழுது ஜாதகர் லக்கினம்  மேஷம் என்றால் தனது முட்டல் தனமான நடவடிக்கையின் காரணமாக தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , கடக லக்கினம் என்றால் தனது சொத்து சுகங்களை இழக்கும் தன்மையும் , உடல் நிலை பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி வரும் , துலாம் லக்கினம் என்றால் தனது அவசரமான செயல்களாலும் , முன்பின் யோசனை அற்ற செயல்களாலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , மகர லக்கினம் என்றால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும் , மன நிலை பாதிப்பிற்கும் உட்பட வேண்டிய சூழ்நிலை  ஏற்ப்படும் குறிப்பாக மன நோயால் அதிகம் பாதிக்க படும் நபர்கள் இவர்களே .

நடக்கும் எந்த கிரகத்தின் திசை என்றாலும் , அந்த திசை நிச்சயம் பாதக ஸ்தானத்தின் பலனை செய்யாமல் இருந்தால் மட்டுமே நல்லது , பாரம்பரிய ஜோதிட முறையில் நல்ல கிரகம் என்று வர்ணிக்க படும்  சுக்கிரன் , குரு , சந்திரன், போன்ற கிரகங்களின் திசை நடந்தாலும் அந்த கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனை செய்தால் ஜாதகர் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும் , நடப்பது என்னவே நல்ல கிரகத்தின் திசை தான் ஆனால் அந்த நல்ல கிரகம் தொடர்பு பெறுவதோ பாதக ஸ்தானம் எனவே நல்ல கிரகத்தின் திசையும் ஜாதகருக்கு பாதகமான பலனை 200 மடங்கு செய்யும் , உதாரணமாக என்னிடம் வந்த ஒரு நபருக்கு உபய லக்கினம் சுய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று இருந்தார் அவரின் திசை அப்பொழுது நடந்து கொண்டு இருந்தது , நடந்த சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்து கொண்டிருந்தது எனவே ஜாதகர் தனது நண்பர்களுடன்  கூட்டு தொழில் செய்து தன்னிடம் இருந்த சொத்து , நிலபுலன்கள் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வந்து விட்டார் , இதற்க்கு ஜாதகரின் வாழ்க்கை துணையும் உடந்தை இதற்க்கு காரணம் ஜாதகருக்கு நடந்த சந்திரன் திசை களத்திர பாவகம் எனும் பாதக ஸ்தான பலனை நடத்தியதே , தற்பொழுது விவாகரத்து பெற்று ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் சிறிய வருமானத்தை வைத்து தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் , இவருக்கு சந்திரன் திசை சந்திரன் புத்தியில் திருமணம் செய்ய சொல்லி எந்த ஒரு ஜோதிடனோ வழிகாட்டி இருக்கிறார் .

இதில் இருந்து தெரிவது நடக்கும் திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு சில காரியங்கள் செய்யும் நபர்கள் பின்னலில் இதுமாதிரி கடுமையான பாதிப்பான பலன்களை அனுபவித்து , மீள முடியாத நிலைக்கு தள்ளபடுகிறார்கள் , இது போன்ற தவறான பலனை சொல்லும் போலி ஜோதிடனுக்கு மற்றவரின் வாழ்க்கையை பற்றி என்ன கவலை , ஏதாவது பரிகாரத்தை சொல்லி பணம் ஈட்டுவதே அவர்களின் குறியாக  இருக்கும், மேலும் பரிகாரம் என்பது என்னவென்றே தெரியாமல் மக்களும் மூட நம்பிக்கைக்கு ஆர்ப்பட்டு தங்களது பொருட்களை இழந்து கொண்டேதான் இருக்கிறார்கள் , பாரிகாரம் என்பதே தான் செய்த வினை பதிவினை தானே தீர்த்து கொள்வதுதான் , உங்களுக்கு தலை வலி என்றால்  நீங்கள் தான் மருந்து எடுத்து கொள்ள வேண்டும் , மருத்துவர் எடுத்து கொண்டால் , தங்களுக்கு எப்படி குணமாகும் .

பொதுவாக பாதக ஸ்தானமாக சர லக்கினத்திற்கு 11 ம் வீடும் , ஸ்திர லக்கினத்திற்கு 9 ம் வீடும் , உபய லக்கினத்திற்கு 7 ம் வீடும் வருகின்றது , இதில் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் துரதிர்ஷ்டத்தையும் , ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் தேவையில்ல அவ பெயரையும், நற்பெயருக்கு களங்கத்தையும், உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடக்கும் பொழுது ஜாதகர் சமுதாயத்தில் மற்றவர்களால் அதிக இழப்புகளையும் , இல்லற வாழ்க்கையில் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும் .

நீங்கள் சொல்லும் பாதகஸ்தானத் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா,புத்திகள் எப்போதுமே நன்மை செய்யாது என்று கொள்ளலாமா?

நிச்சயமாக இதில் என்ன சந்தேகம் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற கிரகத்தின் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நிச்சயம் கெடுதலே செய்யும் இதற்க்கு நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் சரி வராது , ஜாதகர் தனது கருமையத்தை சுத்தம் செய்துகொண்டு , மனதை ஒரு நிலையாக வைத்து கொள்வது மட்டுமே நன்மையை தரும் , மேலும் அறிவில் விழிப்புணர்வுடன் இருப்பது சகல நன்மையை தரும் , சர லக்கினத்தை சார்ந்தவர்கள் மன உறுதியுடன் இருப்பதும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமலும்,உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் நண்பர்கள், வாழ்க்கை துணை,பொதுமக்களிடம் அதிக கவனமாக இருப்பதும் ஜாதகரை தேவையாற்ற பிரச்சனைகளை இருந்து காப்பாற்றும் , நன்மையான பலனை தரும் .


 நீங்கள் குறிப்பிடுவது ஒருவருக்கு (சரம் 11ம் அதிபதி,ஸ்திரம் 9ம் அதிபதி, உபயம் 7ம் அதிபதி)இந்த இடங்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் ஏதோ ஒருவகையில் தீமை மட்டுமே செய்யுமாயின் அந்தக் குறிப்பிட்ட ஆதிபத்திய வீடுகளின் பலனை நாம் அனுபவிக்கவே முடியாது. லாப‌மில்லாம‌ல்,ஒரு பாக்கிய‌மும் இல்லாம‌ல், ந‌ல்ல‌ ம‌னைவியில்லாம‌ல் த‌னிம‌னித‌ வாழ்வு எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து?. அத‌ற்கு இறை நிலை செய்துள்ள‌ மாற்றுவ‌ழிக‌ள் என்ன‌வாக‌ இருந்தால் அதை அவ‌ன் ச‌மாளிக்க‌ முடியும்.இத‌ற்குத் த‌ங்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலை ந‌ம‌து வ‌லைப்பூவில் அனைவ‌ர் அறிய‌த் த‌ருவீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்.

இதற்கு மேற்கண்ட அமைப்பில் பதில் கொடுத்து விட்டோம் , இருப்பினும் சில விளக்கம் கொடுக்க கடமை பட்டு இருக்கிறோம் , அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஆனால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் திசையில் நடை பெறவில்லை என்றால் , நிச்சயம் அதன் கெடுதலான பலன்கள் நடை முறைக்கு வரவே வராது , எனவே அந்த பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது பற்றி நாம் எவ்வித கவலையும் பட தேவையில்லை , நன்மை என்றாலும் , தீமை என்றாலும் நடக்கும் திசையில் சம்பந்த பட்ட பாவகங்களின் பலன்கள் நடை முறைக்கு வந்தால் மட்டுமே நன்மை தீமை பலனை செய்யும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் சம்பந்த பட்ட லக்கினத்தின் பாதக ஸ்தானமாக வரும் ராசி,மற்றும் தத்துவம், கால புருஷ தத்துவத்திற்கு சம்பந்த பட்ட ராசி என்ன அமைப்பை பெறுகிறது  என்ன வென்பதை வைத்தே பலனை நிர்ணயம் செய்ய வேண்டும் தம்பி , மேலும் ஜாதக ரீதியான அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் முடிந்த அளவிற்கு தங்களுக்கு பதில் சொல்ல காத்து இருக்கிறது ஜோதிடதீபம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

6 கருத்துகள்:

  1. குருவிற்கு
    மிக அருமையான விளக்கம். மேலும் சில வினாக்கள். கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

    பாதக ஸ்தானத்தில் அஷ்டவர்க்க படி அதிக பரல்கள் இருந்தால் மிக அதிக தீமை என்று எடுத்து கொள்ளலாமா?
    பாவகங்களின் வலிமையை அஷ்டவர்க்கம் வைத்து முடிவு செய்யலாமா?

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பாதகஸ்தானாதிபதி ராகு கேது சாரம் வாங்கி திசை நடத்தினால் எப்படி பாதகத்தை செய்யும்
    பாதகஸ்தானாதிபதி லக்ன யோகா்களின் சாரம் வாங்கினாலோ மறைவிடங்களில் இருந்தாலோ நீசம் பகை போன்று வலு குறைந்திருந்தாலோ பாதகத்தை செய்யாது
    நமது பிரதமா் மோடி அவர்கள் விருச்சிகம் லக்கினம் பாதகாதிபதி சந்திரதிசை ராகு புத்தியில்தான் பிரதமா் ஆனாா் அவருக்கு சந்திரன் விருச்சிகத்தில் நீசமாகி ஆட்சி பெற்ற செவ்வாயுடன் உள்ளாா்
    அவருக்கு ஏன் சந்திரன் பாதகத்தை செய்ய வில்லை யோகத்தை செய்தது பதில் கூற முடியுமா

    பதிலளிநீக்கு
  4. பாதகஸ்தானாதிபதி ராகு கேது சாரம் வாங்கி திசை நடத்தினால் எப்படி பாதகத்தை செய்யும்
    பாதகஸ்தானாதிபதி லக்ன யோகா்களின் சாரம் வாங்கினாலோ மறைவிடங்களில் இருந்தாலோ நீசம் பகை போன்று வலு குறைந்திருந்தாலோ பாதகத்தை செய்யாது
    நமது பிரதமா் மோடி அவர்கள் விருச்சிகம் லக்கினம் பாதகாதிபதி சந்திரதிசை ராகு புத்தியில்தான் பிரதமா் ஆனாா் அவருக்கு சந்திரன் விருச்சிகத்தில் நீசமாகி ஆட்சி பெற்ற செவ்வாயுடன் உள்ளாா்
    அவருக்கு ஏன் சந்திரன் பாதகத்தை செய்ய வில்லை யோகத்தை செய்தது பதில் கூற முடியுமா

    பதிலளிநீக்கு
  5. ஐயா, என் பேத்திக்கு பாதகாதிபதி ஸ்தானபலன் பெற்று, ரிஷபத்தில் செவ்வாய்.

    அவளுக்கு ச்வாதி நக்ஷத்திரம் ஆகையால், பாதகாதிபதி திசை 100 வயதேவிலேயே வரும் அல்லவா!!! ஆகையால், கெடுபலன்களிலிருந்து தப்ப முடியுமா?

    நன்றி
    பார்வதி

    பதிலளிநீக்கு
  6. இது ஜாதக ராசி கட்டத்தின் அமைப்பு
    கடக லக்கினம் மூன்றில் சனி கேட்டு நான்கில் சந்திரன் ஐந்தாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் ஆறாம் இடத்தில் புதன் எழில் செவ்வாய் எட்டில் குரு ஒன்பதில் ராகு.
    நான்கு பதினொன்றாமிடத்திற்கு அதிபதி சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகி சனியின் மூன்றாம் பார்வையை பெறுவதால் பாதகாதிபதி கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம் எனவும்
    மேலும் சுக்கிரனுக்கு இடம் கொடுத்த செவ்வாய் எழில் உச்சமாக இருப்பதாலும் நன்மையே நடக்கும் என சொல்வது சரியா
    chandrasekaran j
    9443191886

    பதிலளிநீக்கு