சனி, 25 ஏப்ரல், 2015

வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு என்றால் புத்திர பாக்கியம் (ஆண் வாரிசு) கிடைக்காதா ?


5ல் ராகு அமர பெற்ற ஆண்களின் ஜாதகங்களை பார்க்கும் பெண்ணை பெற்றவர்கள், மறு பேச்சுக்கே இடமில்லாமல் தங்களது பெண்ணை திருமணம் செய்து தர மறுக்கின்றனர், இதை 5ல் ராகு அமைய பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்களிடமும் அவர்களை பெற்றவர்களையும் கேட்டல் கதை கதையாக சொல்வார்கள், உண்மையில் இவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் ராகு பகவான் உண்மையில் 5ம் பாவகத்தில்தான் அமர்ந்து இருக்கின்றாரா? 5ல் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு எவ்விதம் தீமையை செய்கிறார்? லக்கினத்திற்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் எந்த ராசியுடன் சம்பந்தம் பெறுகிறார், ராகு பாகவானால் பாதிக்க பட்ட 5ம் பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா? எதிர்வரும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா ? என்ற கேள்விகளும் துணை கேள்விகளும் நிறைய உண்டு, ஆனால் நமது ஜோதிட அன்பர்கள் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு "புத்திர பாக்கியம்" கிடையாது என்ற முடிவுக்கு வருவது எப்படி? என்று தெரியவில்லை.  

இவர்கள் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக எடுத்து கொள்ளும் பெண்ணை பெற்றவர்களின் மன நிலையும் விளங்க வில்லை, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகம் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும், புத்திர ஸ்தானம் இந்த பாவகத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை தர மாட்டார் என்று முடிவு செய்வது முற்றிலும் ஜோதிட கணித அமைப்பிற்கு முரண்பட்ட கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, 5ல் ராகு அமைய பெற்ற ஜாதகருக்கு ஆண் வாரி உள்ள ஜாதகங்கள் நிறைய நம்மிடம் உதாரணம் உண்டு அன்பர்களே ! 

இருப்பினும் 5ல் ராகு அமர்ந்த ஜாதகத்தை குத்து மதிப்பாக "புத்திரபாக்கியம் " கிடையாது என்று ஒதுக்குவது முற்றிலும் தவறு என்றே தோன்றுகிறது, 5ல் ராகுகேதுவை பற்றி இதற்க்கு முந்தைய பதிவுகளில் ஜோதிடதீபம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறது, குத்து மதிப்பாக 5ல் ராகு புத்திர பாக்கியம் கிடையாது என்று ஒதுக்கும் ஜோதிடர்கள் அனைவரும், முறையாக ஜோதிடகணிதம் கற்றவர்கள்தான ? என்ற கேள்வி எழுகிறது, இந்த குழப்பங்களுக்கு கிழ்கண்ட விளக்கங்களை தர " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது.

ராகு 5ல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :

1) ஜாதகரின் லக்கினத்தில் இருந்து 5ம் ராசியில் ராகு அமர்ந்து இருப்பதை வைத்து 5ல் ராகு என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு, ஜாதகரின் 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை முதல், பாவகம் முடிவு பெரும் பாகைக்கு உட்ப்பட்ட 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றாரா? என்பதை ஜாதகரின் பாவக ஆரம்பம், மதியம், முடிவு நிலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.

2) 5ல் அமர்ந்த ராகு ரிஷபம், மிதுனம் ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்), கடகம் ( வளர்பிறை சந்திரன் ), கன்னி ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்) துலாம், தனுசு,மீனமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும் தன்மையை ராகு இயற்கையாக பெற்று விடுவார், எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கிய யோகம் உள்ளதாகவே கருதலாம், ( பெரும்பாலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகளாகவே எவ்வித தடையும் இன்றி பிறக்கின்றது)

3) 5ல் அமர்ந்த ராகு மேஷம்,மிதுனம்  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்),கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம்,கன்னி  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்), விருச்சிகம்,மகரம்,கும்பமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை அற்று போக செய்யும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு, எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கியத்தில் தடை உள்ள ஜாதகமாக எடுத்துகொள்ளலாம், ஆனால் இது ஆண் வாரிசு என்ற அமைப்பில் மட்டுமே குறையை தரும், பெண் குழந்தை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை, ஒருவேளை ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் ( 100கிமீ அப்பால் ) ஆண்வாரிசே நிச்சயம் கிடைக்கும்.

4) பெரும்பாலும் 5ல் ராகு அமர்ந்து பாதிப்பை பெற்று இருக்கும் ஜாதகர்கள், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை பெறுகின்றனர், தனது பாரம்பரிய முறையில் இருந்து வித்தியாசமான அணுகு முறையில் ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையையும், தனது பாரம்பரியத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டவர்களாக கானபடுகின்றனர், இவர்கள் அனைவரும் தனது பூர்வீகத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலவில்லை, வெளியூர் அல்லது வெளிநாடுகளிலேயே மிகப்பெரிய அந்தஸ்தையும், வெற்றிகளையும் வாரி குவிக்கின்றனர், பூர்விகத்தில் இவர்களது அறிவும் புத்திசாலித்தனமும் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்றது, வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் இவர்களது அறிவும், புத்திசாலித்தனமும் அபரிவிதமாக வேலை செய்வது கவனிக்க தக்கது, மேலும் வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகர்  வசிக்கும் பொழுது 5ம் பாவக பாதிப்பு வெகுவாக குறைந்து, சிறந்த ஆண்வாரிசும் உண்டாகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

5) பெரும்பாலும் குழந்தைகளே அற்ற சூழ்நிலை எப்பொழுது ஒரு ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது என்று காணும் பொழுது தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் பாதக ஸ்தனாங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே புத்திர பாக்கியமே இல்லாமல் போகிறது என்பது 100% விகித உண்மை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களும் முறையான தீர்வுகளை தேடும் பொழுது 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை பெற இயலும் என்பதே ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

குறிப்பு :

 அன்பர்களே ! 5ல் ராகு அமர்ந்தாலே குழந்தை பாக்கியம் கிடையாது என்ற குத்து மதிப்பான வாதத்தை விடுத்து சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை உணர்ந்து தங்களது மகளுக்கோ, அல்லது மகனுக்கோ வரன்,வது தேடுவதே சரியான தீர்வாக இருக்கும், 5ல் அமரும் ராகு நல்ல செய்தால் எவ்வித குழப்பமும் இல்லாமல் தங்களது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுங்கள் அவர்களது வாழ்க்கை மென்மேலும் செழித்து ஓங்குவதையும், அவர்களுக்கு நல்ல வாரிசு அமைவதையும்,திருமணம் நடந்த சில காலங்களிலேயே கண்குளிர காணலாம், என்று ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

2 கருத்துகள்:

  1. அருமையான விளக்கம் ஐயா நன்றி...இனிய மங்களவார காலை வணக்கங்கள்....

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்து சரியே எனது ஜாதகத்தில் 5ல் ராகு உள்ளது எனக்கு பெண் குழந்தை மட்டுமே உள்ளது

    பதிலளிநீக்கு