புதன், 29 ஏப்ரல், 2015

ஸ்திர ராசிகளுக்கு பாக்கியஸ்தானமே பாதகஸ்தானமாகிறது.பாக்கியாதிபதியின் தசையில் பலன் எப்படி இருக்கும்?




சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு லாபஸ்தானம் பாதக ஸ்தானமகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாக்கிய ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், இறை நிலையால் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது, மேலும் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பெரும் வலிமைக்கு ஏற்ப திசா புத்திகள் யோக பலன்களோ, அவயோக பலன்களே ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது.

மேற்கண்ட கேள்வி பொதுவாக ஜாதக கணிதம் பற்றிய தெளிவு இல்லாத சூழ்நிலையில் வினவ படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, அதாவது பாதக ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனையே செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிப்பாகும், மேலும் ஒருவரது ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, எந்த ஒரு கிரகமும் யோகம் தரும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, இது அவரவர் சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் வலிமை சார்ந்த விஷயம்.

இதற்க்கு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :




ஜாதகர் லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

மேற்கண்ட கடக இலக்கின ஜாதகருக்கு பாதக ஸ்தானமான அமைவது லக்கினத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானம் , இது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஜாதகர் அடையும் லாபத்தை குறிக்கும், சர லக்கினம் என்பதால் இது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக செயல்படுகிறது, இதன் அதிபதி சுக்கிரன் ( இது பொதுவாக பாரம்பரிய ஜாதக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது ) இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வு செய்யும் பொழுது சுக்கிரன் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குகிறார், அதாவது பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் யோகத்தை தரும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாக கருதலாம், ஆக இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை செய்யவில்லை, வேறு எந்த கிரகம் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

இவரது சுய ஜாதக அமைப்பின் படி, புதன்,சனி,ராகு ஆகிய கிரகங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் என்ற கிரகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் பாதக ஸ்தான பலனை நடத்துகிறது என்றால், சனி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? ராகு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? என்ற கேள்விகளுக்கு ஜாதக கணிதம் தெரிந்தோர் மிக எளிதாக பதில் காண இயலும், எனவே இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் அல்ல, 3,12க்கு உடைய புதனும், 7,8க்கு உடைய சனியும், லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகின்றனர்.

 எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்தி, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் என்று ஜாதக கணிதம் செய்வது முற்றிலும் தவறான கணிப்பே அன்றி, துல்லியமான ஜாதக கணிதம் அல்ல அன்பர்களே! மேலும் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானம் எனும் பாவகம் எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளின் பலனை ஏற்று நடத்தும் கிரகம் எதுவென்றாலும் பாதக ஸ்தான பலனை வழங்க  கூடும், அதே போன்று பாதக ஸ்தான அதிபதியான கிரகம் சுய ஜாதகத்தில் யோகம் தரும் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்திகள் யோக பலன்களை தர தவறுவதில்லை, எனவே ஒருவரது சுய ஜாதக வலிமையை முதலில் கருத்தில் கொண்டு, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே துல்லியமான ஜாதக பலன்களை எடுத்து கூற இயலும், மாறாக பாதக ஸ்தான அதிபதி, மற்றும் துர் ஸ்தான அதிபதிகள் திசை மற்றும் புத்திகள் இன்னல்களையே தரும் என்று கணிப்பது முற்றிலும் தவறான ஜாதக கணிதமே அன்றி வேறில்லை என்பது "ஜோதிடதீபத்தின் " ஆணித்தரமான கருத்தாக இங்கே பதிவு செய்கிறது.

குறிப்பு : 

எந்த ஒரு ஜாதகருக்கும் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் வருமாயின், அந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்கள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக