சனி, 25 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலனை தரும் பொழுது ஜாதகர் என்ன செய்யலாம்? அவயோக பலனை தரும் பொழுது ஜாதகர் எதை தவிர்க்கலாம்?




ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு யோக  பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து யோகத்தை வழங்குகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு வாழ்க்கையில் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பரிபூரணமாக அனுபவிக்கலாம், மாறாக ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து அவயோகத்தை வழங்குகிறது, என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம், அல்லது விழிப்புணர்வுடன் செயல்பட்டு, துன்பங்களை களைந்து, நன்மைகளை பெறலாம், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற ஒரு விஷயம் ஜாதகருக்கு சிறந்த ஜோதிடர்கள் மூலம் ஜாதக கணிதம் கொண்டு மிக துல்லியமாக தெரிந்துகொள்ள இயலும், அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக நடத்தி செல்வதற்குண்டான வழிமுறைகளையும், விழிப்புணர்வுகளையும் ஜாதகரால் நிச்சயம் பெற இயலும்.

கிழ்கண்ட நமது நண்பருக்கு ( அவரது விருப்பத்தின் பேரில் ஜாதக பலன்களை வலைபதிவில் பதிவு செய்கிறது "ஜோதிடதீபம் " ) ஜாதக ரீதியான பலன்களையும் & தீர்வுகளை காண்போம் :




லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

ஜாதகருக்கு உபய கற்று தத்துவமான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசி ) மிதுன ராசியில் லக்கினம் 22:58:48 பாகையில் ஆரம்பித்து, சர நீர் தத்துவமான கடகத்தில் 19:09:36 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் இரண்டு தத்துவ அமைப்பில் லக்கினத்தின் செயல்பாடுகளை பெறுகின்றார், உபய இயக்க நிலையில் உள்ள காற்று தத்துவம், சர இயக்க நிலையில் உள்ள நீர்ததுவம். ஆக ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனும், நல்ல மனமும் இயற்கையாக அமைய வேண்டும்,  ஆனால் லக்கினம் எனும் 1ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம்  பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ஸ்திர மண் தத்துவமான ரிஷப ராசியில் அமைகிறது, ஆக ஜாதகருக்கு லக்கினம் பாதிக்க படுகிறது என்பது உறுதியாகிறது, இந்த இலக்கின பாதிப்பு ஜாதகருக்கு  வருமான ரீதியான பிரச்சனைகளையே தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு  தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை  தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! ஜாதகருக்கு சுக்கிரன்  திசை ( 23/09/2008 முதல் 23/08/2028வரை ) நடைமுறையில்  உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது வரவேற்க தக்க ஒரு சிறப்பு அம்சமாக கருதலாம், ஏனெனில் 2ம் வீடு ஜாதகருக்கு சிறந்த குடும்ப வாழ்க்கையையும், சிறந்த பேச்சு திறனையும், கை   நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், 4ம் வீடு ஜாதகருக்கு சிறந்த வீடு, மண் மனை, வண்டி வாகன யோகத்தையும் வாரி வழங்கும், சிறந்த குண நலன்களுடன் ஜாதகரை திகழ செய்யும், புதிய சொத்துகள், வாகன யோகங்கள் ஜாதகருக்கு 100% விகிதம் உண்டாகும், தனது  சொந்த ஊரில் சுய  சம்பாத்தியம் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும்,  தாய் மூலம் நன்மை உண்டாகும், கற்ற கல்வி ஜாதகருக்கு சிறந்த சுகபோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மிகவும் சிறப்பாக  இருப்பது உறுதியாகிறது, அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ( 24/09/2014 முதல் 24/11/2015 வரை ) என்ன செய்கிறது? என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

 சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,3,5,6,7,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, இந்த 12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்திலும், கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்திலும் சம்பந்தம்  பெறுவது, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், உடல் நல பிரச்சனைகளையும், சகோதர ஸ்தான அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவையும், எதிர்பாராத இன்னல்களையும், பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சமயோசித செயல்பாடுகள் அற்ற நிலையையும், புத்திசாலிதனத்தில் ஏற்ப்படும் பின்னடைவையும்,  உதவிசெய்ய யாரும் அற்ற நிலையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து வரும்  கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லைகள், தனது செயல் தனக்கே எதிர்பதமாக அமையும் சூழ்நிலை, உடல் நல குறைபாடு,என்ற வகையிலும்,  களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வாழ்க்கை துணை வழியில் இருந்தும்,  நண்பர்கள் வழியில் இருந்தும், கூட்டாளி மற்றும் வெளிவட்டார பழக்க  வழக்க அமைப்பில் இருந்து நிம்மதியற்ற சூழ்நிலையையும், லாப ஸ்தான அமைப்பில் இருந்து தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் உதறி தள்ளும் சூழ்நிலையையும், தன்னம்பிக்கை அற்ற சூழ்நிலையில் போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களையும், மனோ ரீதியான  போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சக்தி அற்ற நிலையையும், 12ம் பாவக வழியில் இருந்து வருமானம் அனைத்தையும் விரையும் ஆகும் சூழ்நிலையையும், மன நிம்மதி இழப்பு, அனைவராலும் துன்பம் மற்றும் தொல்லைகளை எதிர்கொள்ளும் தன்மையும், ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில்  உள்ள சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி வழங்குகிறது.

எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி அவயோக பலன்களையும்  தருவதால், ஜாதகர் செவ்வாய் புத்திக்கு ஏற்று நடத்தும் பாவகத்திர்க்கு உண்டான வழியில் இருந்து ( 1,3,5,6,7,11,12 ) அதிக அளவு இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, மேலும் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் ரிஷப ராசியிலும், வீர்யம், லட்சியம் மற்றும் சுய முயற்ச்சியை குறிக்கும் மிதுன ராசியிலும் அமைவதால், பாதிப்பின் தன்மையை ஜாதகரால் எதிர்கொள்ள இயலவில்லை, மேலும் வருமானம் என்பது ஜாதகருக்கு வெகுவாக குறையும், எடுக்கும் முயர்ச்சியும் வெற்றி பெறாத காரணத்தால், அதிக மன உளைச்சலுக்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் உருவாக்கும், இருப்பினும் இதன் பாதிப்பின் தன்மை 40% விகிதம்  என்பதாலும், நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை யோக பலன்களை வாரி  வழங்குவதாலும், ஜாதகரின் துன்பம் சூரியனை கண்ட பனிபோல் விரைவில்  விலகும்.

ஜாதகருக்கு சுக்கிரன் திசையில் அடுத்து வரும் ராகு புத்தி  2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது,   அளவில்லா வருமான வாய்ப்பையும், சொத்து சுக சேர்க்கையையும், வாரி வழங்கும், மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியின்  தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும், சுக்கிரன் திசை, எதிர் வரும் ராகு புத்தியில் வரும் யோக பலன்களை அனுபவிக்க வடக்கு திசை வாயிற்படி கொண்ட  வீடுகளில் வசிப்பது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், சுக்கிரன் திசையில் முழு பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதிக்க பட்டு இருந்த  போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை நன்மையை வாரி   வழங்குவது வரவேற்க தக்க ஒரு அம்சமாக" ஜோதிடதீபம் "  கருதுகிறது, மேலும் ஜாதகருக்கு பாதிக்க பட்ட 12ம் பாவகம் ஸ்திர ராசியில் 6 பாகையும், உபய ராசியில் 23 பாகையும் வியாபித்து இருப்பதால், நடைபெறும் தீமையின் அளவு ஜாதகருக்கு பெரிய அளவில் இன்னல்களை தாராது என்பதை  நினைத்து மகிழ்ச்சி அடையலாம், எனவே ஜாதகர் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியில் நடைபெறும் 1,3,5,6,7,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு வெற்றி அடையலாம், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்கலாம், மேலும் விபரங்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை ஜோதிடதீபத்தின் மூலம் பெறுவதால் மிகுந்த நன்மை அடையலாம்.

வாழ்த்துகள் !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக