செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும்பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் !


பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு நல்லதல்ல, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார், மேலும் சம்பந்த பட்ட பாவக வழியில் வரும் உறவுகளுடன் இணக்கம் காண இயலாமல், கருத்து வேறுபாட்டுடன், பகைமை பாராட்டும் சூழ்நிலை எதிர்பாராத வண்ணம் உருவாகிவிடும், கிழ்கண்ட ஜாதகிக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவகங்கள், தற்பொழுது நடைபெறும் திசையில் வழங்கும் பலன்களை பற்றி சற்று சிந்திப்போம் அன்பர்களே !



லக்கினம் : துலாம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

தற்பொழுது ஜாதககிக்கு நடைபெறும் திசை சூரியன் :  ( 06/07/2011 முதல் 05/07/2017 வரை ) ஜாதகிக்கு நடைமுறையில் உள்ள சூரியன் திசை 1,5,7,11ம் வீடுகள், சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகிக்கு அவயோக பலனை வழங்கிக்கொண்டு இருக்கிறது, ஜாதகி மேற்கண்ட பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்புகளை சந்திக்கிறார் என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1) லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லக்கினம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியாகவும், சர காற்று தத்துவ அமைப்பில் இயகுவதாலும், ஜாதகி தனது சுய சிந்தனை மற்றும் அறிவு திறனை இழக்கிறார், பாதிக்க படுவது பதாக ஸ்தானத்துடன் என்பதால் இந்த ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவம் என்பதாலும், ஜாதகி தனது அறிவார்ந்த செயல்களில் அவசரமும் முன்கோபமும் இருப்பதால், ஜாதகியினால் தெளிவான சிந்தனையுடன் செயலாற்ற இயலாமல், மற்றவர்களுடன் பகைமை கொண்டு தனக்கு வரும் இன்னல்களுக்கு தானே காரணமாக இருப்பது வருந்ததக்கது, சுய கட்டுபாடு இழந்து, தெளிவில்லாத சிந்தனையுடன் செய்யும் காரியங்களில் தோல்வியை சந்திக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகியின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர பாவகமாக வருவதால், வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இருந்தும் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொள்ளும் நிலை வரலாம்.

2) பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5ம் பாவகம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக வருவதாலும், ஜாதகிக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை ஜாதகியே உதறும் தன்மையை தரும், ஸ்திர காற்று மாறும் ஸ்திர நெருப்பு இரண்டும் பாதிப்பது, ஜாதகியை தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், தனது குழந்தைகள் அமைப்பில் இருந்து பிரிவும், அவர்களுக்கு செய்யும் கடமைகளில் இருந்து பின்னடைவையும் தரும், மேலும் ஜாதகி பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் அதிக ஈடுபாட்டை தர கூடும், மற்றவர்கள் சொல்வதை ஆலோசிக்காமல், அப்படியே நம்பும் தன்மையை தரும், சுய சிந்தனை செயல்படாது, சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகிக்கு கைகொடுக்காது.

3) களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் பாவகம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும் சர நெறுப்பு தத்துவமாக அமைவதால், ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக இன்னல்களும், ஜாதகியால் கணவருக்கு எதிர்பாராத இன்னல்களும், துன்பங்களும் அதிகமாக ஏற்ப்படும், இந்த காலங்களில் ஜாதகியின் கணவருக்கு வரும் இன்னல்களுக்கு ஒரு அளவு இருக்காது, மேலும் மேஷ ராசியை ஜாதகி களத்திர பாவகமாக கொண்டு இருப்பது, கணவருக்கு வரும் நேரடி பாதிப்புகளையும், இன்னல்களையும் தெளிவாக காட்டுகிறது.

4​) லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு வேறு பாவக வழியில் இருந்து வரும் யோக வாய்ப்புகளை ( உதாரணமாக 10ம் பாவக வழியில் இருந்து வரும் தொழில் முன்னேற்றம் ) ஜாதகி உதறி தள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகிக்கு உதவி செய்ய யாரும் முன் வரமாட்டார்கள், நம்பியவர்கள் ஜாதகியை ஏமாற்ற கூடும், தனது குழந்தைகள் வழியில் இருந்து சில இன்னல்களையும் துன்பங்களையும் ஜாதகி எதிர்கொள்ளும் தன்மையை தரக்கூடும், உடல் ரீதியான பாதிப்பை விட, ஜாதகிக்கு மன ரீதியான பாதிப்பே மிக அதிகமாக காணப்படும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், பித்தம் சம்பந்தமான நோய்கள் ஜாதகியை தாக்கக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஜாதகிக்கு அதிக துன்பத்தை தரும், தொழில் மூலம் வரும் லாபம் அனைத்தும் வீண் விரையம் ஆகும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவை சந்திக்கும்.

ஆக தற்பொழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை தருவதால் மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஜாதகி அனுபவிக்கும் தன்மையை தரும், ஜாதகியின் சுய கட்டுப்பாட்டை மீறி விதியானது வெகு வேகமாக வேலை செய்யும், தான் தரவேண்டிய பாவக வழிகளில் இருந்து இன்னல்களை தங்குதடையின்றி வழங்கும் என்பதால், ஜாதகி பொறுமை காப்பதே நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. எனக்கு ஒரு சந்தேகம்.ஸ்திர ராசிகளுக்கு பாக்கியஸ்தானமே பாதகஸ்தானமாகிறது.பாக்கியாதிபதியின் தசையில் பலன் எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு