Tuesday, April 7, 2015

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் !
கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு  திகைக்காமல் மிக  எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல  வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது  சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து  பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை  சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம்  பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக  எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது  சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.