ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றதோ அந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் வல்லமை பெற்றவை என்பதை இதற்கு முன் சில பதிவுகளில், ஜோதிடதீபம் பதிவு செய்து விளக்கம் தந்திருக்கும், சாயா கிரகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்ய இயலாது, ஏனெனில் தாம் அமர்ந்த புத்திர ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக புத்திர ஸ்தானத்திற்கு வலிமையற்று அவயோகங்களை தரும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு புத்திர சோகத்தை தருவதிலும் தவறுவதில்லை, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பை பெறுவது ஜாதகருக்கு யோகம் மற்றும் நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்குவதில் அதிக தடைகளை ஏற்படுத்துவதுடன் வருமுன் உணரும் சக்தியை வெகுவாக குறைக்கின்றது, ஜாதகர் நன்மைகளையும் நல்லோர் ஆதரவையும் பெறுவதற்கு அதிக அளவிலான போராட்டங்களையும், முயற்ச்சிகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் சாயா கிரகங்களால் பாதிப்பை பெறுவது மிகுந்த இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வாழங்கும், சாயா கிரகங்களால் 5ம் பாவகம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் மற்றும் புத்திகூர்மை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, முன்னேற்றத்தில் அக்கறை, பொறுப்பு மிக்க செயல்பாடுகள், சுயமாக சகல முடிவுகளையும் மேற்கொள்ளும் வல்லமை, தன்னம்பிக்கை மிக்க மன நிலை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், லட்சியங்களை விரைவாக நிறைவேற்றும் தனி திறமை என்ற வகையில் யோக பலன்களை வழங்கும், மேலும் ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், அனைவராலும் உதவி பெரும் தன்மை சிக்கல் மிகுந்த சூழ்நிலைகளை மிக எளிதாக கையாளும் வல்லமையை பெற சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையே காரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களால், 5ம் பாவகம் வலிமை பெறுவதே நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக சாயா கிரகங்களால் 5ம் பாவகம் பாதிக்கப்படுவதும், அல்லது அதற்கு நிகரான பாதிப்பை பெறுவதும் ( 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அளவில்லா துன்பங்களையே தரும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : ரிஷபம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம்
ஜாதகிக்கு 5ம் பாவகமான கன்னியில் கேது, 5ம் பாவக அதிபதி இங்கு கேந்திர அதிபதியாக காணப்படுகிறார் ( சூரியனுடன் சேர்ந்த புதன் ) அடிப்படையில் 5ம் பாவகம் கோண வீடு, அதன் அதிபதி கேந்திர அதிபதி, அங்கு அமர்ந்த கேது 5ம் பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை பெறுகிறார், மேலும் 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் 5ம் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது, எனவே மேற்கண்ட ஜாதகி தமது வாழ்க்கையில் அளவில்லா போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், ஜாதகிக்காக எடுக்கும் சுப முயற்சசிகள் யாவும் பெரிய பின்னடைவையே சந்தித்து கொண்டு இருக்கின்றது.
அடிப்படையில் கல்வியில் தடை, உடல் நல குறைபாடு, வேலை வாய்ப்பில் தடை, திருமண முயற்ச்சிகளில் தடை என ஜாதகிக்கு தொடர்ந்து இன்னல்களே நடைபெற்று கொண்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது சிரமங்களை வாரி வழங்கும் எனும் போதில், பூர்வ புண்ணியமான 5ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் வாய்ப்பையே வழங்காது, மேலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பாதிப்பிற்கு அதிக அளவில் சாயா கிரகமான கேது பகவானே காரணமாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு 5ம் பாவகம் உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவது, உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும் வழங்கிக்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது, ஜாதகிக்கு வரும் எதிர்ப்புகளும், இன்னல்களும் மிகப்பெரிய பாதிப்பை தரும், சுய முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்கப்படும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதை ஜாதகி கவனத்தில் கொள்வது நல்லது, சுயமாக ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.
மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் சாயா கிரகமான கேது அமர்ந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகிக்கு சாதகமான அமைப்பு அல்ல எனவே தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் 100% விகிதம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியம் கிட்டும், மாறாக இதை போன்றே 5ம் பாவகம் பாதிக்கப்பட்ட ஜாதகர் வாழ்க்கை துணையாக அமைந்தால் புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களுக்கும், புத்திர சோகம் அனுபவிக்கும் சூழ்நிலைக்கும் ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும், இயற்கையாகவே இந்த ஜாதகிக்கு பெரும்பாலான பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கடுமையான நெருக்கடிகளையும், மன கவலைகளையும் அதிக அளவிலான மன போராட்டங்களையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமை பெற்றதாக இருந்தால் மட்டுமே ஜாதகி தமது வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகை உண்டாகும், இதற்கு மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகமும் பாதிப்பை பெற்று இருந்தால் ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்புண்டு.
ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்பை 5ல் அமர்ந்த கேதுபகவானின் வலிமை தடுக்கும், மற்றவர் உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பையும் வழங்காது, ஜாதகியின் சுய ஜாதகமும் வலிமை அற்று காணப்படுவது மேலும் மேலும் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கியவண்ணமே இருக்கும் என்பதால் இனிவரும் காலங்களை ஜாதகி மிக எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது, நடைபெறும் சுக்கிரன் திசையும் ( லக்கினாதிபதி திசை பொதுவாக அனைவருக்கும் நன்மையை செய்யும் என்பது இங்கே பொருந்துவதில்லை, எந்த கிரகத்தின் திசை என்றாலும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையும் யோகமும் உண்டாகும்) ஆயுள் பாவக பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகிக்கு நன்மையை தரும் நிலை அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஜாதகி லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து மன கவலைகளையும், சகோதர ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையையே, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்குவது வருந்தத்தக்க ஒன்றாகும்.
மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டியது ஜாதகியின் கடமையாகும், வீண் மாயையில் வீழ்ந்தால் ஜாதகியின் வாழ்க்கை சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகிறது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக