சனி, 23 ஜூலை, 2016

சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொருத்தமான தொழிலை ஜாதகரீதியாக தேர்வு செய்வது எப்படி ?


சுய ஜாதக ரீதியாக தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகரின் நிலையானது, நமது கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல், வீடும் கெட்டது போல் " என்ற பழமொழிக்கு உதாரணமாக அமைந்துவிடும், தமக்கு உகந்த தொழிலை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதக பாவக வலிமை 100% விகிதம் சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்றால் அது மிகையல்ல, ஒரு ஜாதகர் தனது சுய ஜாதகம் கொண்டு தமக்கு உகந்த சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழிலை தேர்வு செய்வாராயின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடைசெய்ய இயலாது, ஏனெனில் இறைஅருள் விதித்த கர்மத்தை செய்ய தகுதி உடையவர் ஆகிறார், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் மென்மேலும் வளர்ச்சி பாதையில் வெற்றிநடை போடும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகரின் உழைப்பும், லட்ச்சியங்களும் மிகவிரைவாக சாதிக்கும் வல்லமையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியான காலநேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், பொருளாதார தடைகள் அற்ற தன்னிறைவான வசதிவாய்ப்புகளை ஜாதகர் சிறப்பாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

சுய ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகரை செக்குமாட்டிற்கு பொருத்தமான நிலையையும், குறுகிய வட்டத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையையும், ஜாதகரின் லட்ச்சியங்கள் மற்றும் கனவுகள் "கானல்நீராக" மாறிவிட வாய்ப்புண்டு, தாம் செய்யும் தொழிலில் விருப்பமும், கடமை உணர்வும், அதீத ஆர்வமும் கொண்டதாக அமையும் பொழுதே ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது அபரிவிதமான வெற்றிகளை நல்கும், விருப்பம்,ஈடுபாடு,கடமை மற்றும் ஆர்வம் இன்றி செயல்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான நன்மைகளை தந்துவிட நிச்சயம் வாய்ப்பில்லை, ஏனெனில் புது சிந்தனைகள் மற்றும் புதிய யுக்திகளை கண்டுணரும் வாய்ப்பினை ஜாதகருக்கு ஜீவன பாவகம் வழங்குவது கேள்விக்குறியே, தமக்கு உகந்த தொழிலை தேர்வு  செய்யும்பொழுது ஜாதகரின் வளர்சசி ஓர் சீரிய முன்னேற்றத்துடன் வளர்ச்சிப்பாதையில் சிறப்பாக வெற்றிநடைபோடும்.

  ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கேற்ப, தமக்கு பொருத்தமான தொழிலை நிர்ணயம் செய்வது எப்படி? என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம் 

1) ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவாகத்துடன் தொடர்பு பெறுவது, ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது தெளிவாகிறது, எனவே ஜாதகர் சுய தொழில் செய்தால் நிச்சயம் திடீர் பேரிழப்பும் வீண் விரையமுமே ஏற்படும், மேலும் ஜாதகர் தான் செய்யும் சுய தொழில் மூலம் அதிக மன உளைசலுக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையை பெரிய அளவில் தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகமாக அமைவது ஜாதகரின் சொத்து,வீடு, வண்டி,வாகனம் மற்றும் சுக போகங்கள் அனைத்தையும் சுய தொழில் செய்வதால் விரையமாக்கும் சூழ்நிலையை தரும், மேலும் சொத்து,வீடு,வண்டி,வாகனம் மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழிலை தேர்வு செய்து செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தொழில்  ரீதியாக மிகப்பெரிய தோல்வியே கிட்டும் என்பதை கவனத்தில் கொள்வது சாலச்சிறந்தது.

2) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை மிக துல்லியமாக நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே ஜாதகர் சுய தொழில் செய்ய முழு தகுதி உடையவர் ஆகிறார், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் நிற்பது, ஜாதகர் கூட்டு தொழில் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை ஸ்திரமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஸ்திர காற்று ராசியான கும்பம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றிகளை கூட்டு தொழில் மூலம் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் அறிவு திறனும் தொழில் வல்லமையும் கூட்டு தொழில் மூலம் விருத்தி அடையும், மேலும் திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமான ஜீவன வாழ்க்கையை பெரும் யோகம் பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே, ஜாதகர் தனது அறிவு திறன்,சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் புதியசிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு கூட்டு தொழில் மூலம் பன்மடங்கு லாபங்களை பெறுவார் என்பது மிக தெளிவாக தெரிய வருகிறது.

3) ஜாதகர் அடிமை தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்று காணப்படும் பொழுது, ஜாதகர் அடிமை தொழில் செய்யவும் தகுதி அற்றவர் என்பது உறுதியாகிறது, ஏனெனில், ஒரு இடத்தில் நிலையாக பணியாற்றும் வாய்ப்பினை தாராது, பல இடங்களில் ஓடி அலைந்து திரியும் நிலையை தந்துவிடும், இதனால் ஜாதகரின் திட்டமிடுதல்கள், செயல் திறன் வெகுவாக குறையும், கெளரவம் பார்க்காமல் சுய மரியாதை இழந்து செய்யும் வேலையை ஜாதகரே விரும்பி ஏற்றுக்கொண்டால் இது சாத்தியம், அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தி வர வாய்ப்பில்லை ஏனெனில் ஜாதகரின் லக்கினம் சிம்மம், கட்டுப்பாடு அற்ற சுதந்திர நிலையை கையில் ஏந்தும் அன்பர்கள், இந்த சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், இந்த ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு மட்டுமே கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றது, ஆனால் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் முறையே 2,6,8,12 பாவகங்கள் ஆகும் என்பதால் ஜாதகர் கூட்டு தொழில் மூலமோ அல்லது வெளிநாடுகளில் உயர்பதவி மூலமோ ராஜயோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை சிறப்ப சுய ஜாதக பாவக வலிமை தெளிவுபடுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எவ்வித சூழ்நிலையிலும், தனக்கு உகந்த தொழிலை தாமாகவே தேர்வு செய்து வெற்றிகாணும் யோகம் பெற்றவர் என்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் இவர் பக்கம் நிற்பதால் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மைகளையும், ஜாதகத்திற்கு உற்ப்பட்ட யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும், அடுத்தது வரும் செவ்வாய் திசையும் கூட்டுதொழில்  அல்லது வெளியூர், வெளிநாடுகளில் சிறப்பான தொழில் அல்லது வேலை வாய்ப்பினை நல்கும்,  அதற்கு அடுத்து வரும் ராகு திசை ஜாதகரை கூட்டு தொழில் மூலம் பரிபூரண யோகத்தை வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்" வழங்கும் அறிவுரை உடனடியாக ஜாதகர் திருமணம் செய்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

2 கருத்துகள்:

  1. sir my name is shanmugam mesha lakinam,kumbarasi,sadhaya,natchathiram enadhu eathir kalam eppady endru ,solluviengala sir plese..........?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் jothidadeepam@gmail.com

      நீக்கு