Thursday, July 21, 2016

தொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழங்கும் பலாபலன்கள் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " ஒரே வாக்கியத்தில் ரத்தினைசுருக்கமாக ஓர் ஆண் மகனுக்கு ஜீவனத்தின் அவசியத்தை முன்னோர்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர், சரியான இளம் வயதில் தாம் விரும்பிய தொழிலை தேர்வு செய்து, ஆர்வமுடனும் முழு அர்ப்பணிப்பையும்  தமது சுய உழைப்புடன் விதைத்தால், அதன் பலனானது மிகப்பெரிய விருச்சமாக நம்மையும் காத்தருளும், தம்மை நாடி வருவோரையும் காத்தருளும், கடனுக்காக பணியாற்றும் தன்மையானது தொழில் விருத்தியையும், அடிப்படை முன்னேற்றத்தையும் வெகுவாக பாதிக்கும், இன்றைய சூழ்நிலையில் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தும் யோகம் எத்தனை அன்பர்களுக்கு வாய்க்கிறது என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டால் மிக மிக குறைவான சதவிகித அளவிலேயே உள்ளது தெளிவாக தெரிய வரும்.

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு உதவி செய்யும் சில பாவகங்களின் தன்மை ஆகியவை வைத்தே ஒருவரின் தொழில் முன்னேற்றம் நிர்ணயம் செய்யப்படுகிறது, சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, நல்ல தொழில் வெற்றிகளை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல தொழில் அல்லது ஜாதகருக்கு உகந்த தொழில் அமைவது குதிரை கொம்பாகவே உள்ளது, ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு துல்லியமாக வழிகாட்டும், மேலும் ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை பரிபூர்ணமாக பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர், தன் உடல் உயிர், வளரும் சூழ்நிலை, சுய அறிவு திறன், தனிப்பட்ட திறமைகள், திட்டமிடுதல்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வல்லமை என ஜாதகரை சிறப்பாக இயக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன், எனவே ஜாதகர் இயற்கையாகவே சுய தொழில் செய்து அதில் நிச்சய வெற்றியை பெறுவார் என்பது தெளிவாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்கும் வல்லமையை பெற்று தரும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மேலும் உடல்,மனம்,அறிவு ஆகியவற்றை எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்க வைக்கும், ஜாதகர் தொழில் செய்வதற்கெனவே படைக்கப்பட்டவர் என்பது லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதில் இருந்தே தெளிவாக அறியலாம், லக்கினம் முதல் கேந்திரம்/கோணமாக அமையும்.

அடுத்து சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் தான் ஈட்டிய செல்வத்தை நுகரும் சக்தி கொண்டவரா? அற்றவரா? என்பதை மிக தெளிவாக அறிவித்துவிடும், மேலும் ஜாதகரின் குண நலன்கள், சொத்து சுக போகம், வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவற்றின் மூலம் ஜாதகர் பெரும் லாபம் மற்றும் நன்மைகளை தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது உழைப்பின் மூலம் சொத்து,வீடு,வண்டி,வாகன யோகத்தை பெற தகுதியானவர் என்பதும், மேற்கண்ட விஷயங்களில் இருந்து தொழில் வாய்ப்பினை பெரும் யோகம் பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, சுய ஜாதகத்தில்  4ம் பாவகம் வலிமை பெறுவது சுக போக வாழ்க்கையையும், வீடு வண்டி வாகன யோகத்தையும் நல்கும், மேலும் ஜாதகரின் குண நலன்களும் மற்றவர்களுடன் ஜாதகர் பழகும் தன்மை நிலையை பற்றியும், தனது தாய் வழியில் இருந்து யோகங்களையும் வாரி வழங்கும், சுக ஸ்தானம் மூன்றாம் கேந்திரமாக அமையும்.

அடுத்து களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் பொதுமக்களுடன் கொண்டுள்ள நல்லுறவையும், நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து பெரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தெளிவுபடுத்தும், மேலும் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் ஜீவன உதவிகளையும், வியாபார வழியில் இருந்து பெரும் முன்னேற்றங்களையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து பெரும் ஆதரவு, தொழில் விருத்தியையும் தெளிவு படுத்தும், வியாபாரத்தில் பொதுமக்கள் செல்வாக்கினை உறுதிப்படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வியாபாரம் மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை சிறப்பாக வழங்கும் என்பதும், தமது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், தொழில் முறை கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்தும் மிகுந்த யோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது, களத்திர ஸ்தான வலிமை ஜாதகருக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் சிறப்பான அறிமுகத்தையும், பெருமை மிக்க வரவேற்பையும் பெற்றுத்தரும், சுய ஜாதகத்தில் ஒருவருக்கு களத்திர ஸ்தானம் ஆறாம் கேந்திரமாக அமையும்.

அடுத்தது ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை வெளிப்படுத்தும், ஜாதகர் தனது தொழிலில் கொண்டுள்ள ஆர்வத்தையும் கடின உழைப்பையும் ஜீவன ஸ்தான வலிமை மூலம் உணரலாம், தொழில் ஞானம் என்பது ஜாதகருக்கு ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே அமைகின்றது, தனது தொழில் பற்றிய விசாலமான பார்வை, அதன் வளர்ச்சி மீது ஜாதகர் கொண்டுள்ள அக்கறை மற்றும் திட்டமிடுதல்கள், போட்டியாளர்கள் மூலம் வரும் எதிர்ப்பை கிரகித்து வலிமையை வெளிப்படுத்தும் தன்மை, தொழில் மீது கொண்டுள்ள பற்று மற்றும்  நிலையான உண்மை தன்மை, பிரபல்யம் பெரும் யோகம், அபரிவிதமான விருத்தி என தாம் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றத்தின் தன்மையை மிக தெளிவாக ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் புரிந்துகொள்ள இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, சிறப்பான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவத்தில் நிற்பதும், ஜாதகரின் தொழில் விருத்தியை தமது அறிவு திறன் கொண்டு நிர்ணயம் செய்வார் என்பதும், அது பரிபூர்ணமாக ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதும் வரவேற்கத்தக்கது, பொதுமக்கள் விரும்பும் ஆடை ஆபரணங்கள், உயர் ரக சொகுசு பொருட்கள், கேளிக்கை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், மூலம் ஜாதகர் தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பது உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் எட்டாம் கேந்திரமாக அமையும்.

ஜாதகர் 1ம் பாவக வழியில் இருந்து வட்டிதொழில், வாக்கின் வழியில் தொழில், நிலம் இடம் சார்ந்த தொழில் செய்யவும், 4ம் பாவக வழியில் இருந்து, வண்டிவாகனம், வீடு, மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை தொழில் செய்யவும், 7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் விற்பனை, பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த தொழில்கள் செய்யவும், 10ம் பாவக வழியில் இருந்து தரகு தொழில், பங்கு வர்த்தகம், அறிவு சார்ந்த வர்த்தகங்கள், சந்தை முதலீடு, பெரிய அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் தொழில்கள், மின்னணு, கணினி சார்ந்த தொழில்கள் செய்யவும் தகுதி பெற்றவர் ஆகிறார், மேற்கண்டவற்றில் ஜாதகரின் விருப்பமே தொழில் விருத்தியை  மிகவும் சிறப்பாக நிர்ணயம் செய்யும்.

சுய ஜாதகத்தில் ஜீவனத்தை வழங்கும் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன், இருப்பது ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்ற போதிலும், நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் ஜாதகரின் தொழில் வெற்றியை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதிக்கப்படுமாயின் மேற்கண்ட யோக பலன்களை தனது பூர்விக்கத்தில் இருந்து பெறுவதற்கு பகிதரான முயற்சசிகளை மேற்கொண்டாலும் நடைமுறைக்கு வாராது, மேலும் தடைகளும் இடர்பாடுகளும் வெகுவாக அதிகரிக்கும், தொழில் செய்வதற்கு தடையாக யாராவது ஒருவர் காரணமாக இருந்துகொண்டே இருப்பார்கள், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், கைநிறைவான லாபங்களை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment