செவ்வாய், 26 ஜூலை, 2016

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் நிலை என்னவாகும் ?

  


இது ஒரு சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் 2ம் பாவகமான குடும்ப ஸ்தானமும், 7ம் பாவகமான களத்திர ஸ்தானமும், ஒரு ஜாதகருக்கு பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் குடும்பம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், பாதிப்பானது ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்தும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்க இயலாத கடுமையான இன்னல்களையும், நெருக்கடிகளையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்க இயலாது என்பது வருத்தத்திற்கு உரியது, எனவே சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமும், 7ம் வீடான களத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டோ அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருந்தால், ஜாதகர் தமது குடும்பம் மற்றும் களத்திர வாழ்க்கையை மிக சிறப்பாக கையாள வேண்டும், ஏனெனில் மேற்கண்ட பாதிப்பானது இருபக்கமும் கூர்மையான முனையுள்ள கத்திக்கு நிகரானது, சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் இருபக்கமும் சேதாரம் மிக அதிக அளவில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நலம் தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு வரும் பாதிப்பானது, ஜாதகருடன் சென்றுவிடும் அல்லது அதற்க்கு சரியான தீர்வு காண இயலும், ஆனால் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களானது இல்லற வாழ்க்கையில் உள்ள இரு நபர்களால் கையாளப்படுவதால், தீர்வு காண மிகுந்த முயற்சசிகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது தம்பதியரின் வாழ்க்கையில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும், பொருளாதார தடைகளும், வருமான வாய்ப்புகளும் வெகுவாக குறையும், நிதி பற்றா குறை ஜாதகரையும் ஜாதகரை சார்ந்தவர்களையும் நிலைதடுமாற செய்யும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு, தனது வாழ்க்கையை தான் நிர்ணயம் செய்ய இயலாமல், மற்றவருக்காக வாழும் சூழ்நிலையை தரும் அல்லது மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலையி தரும், சுயமாக செயல்பட இயலாமல், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் துர்பாக்கிய  நிலையை தரும், அதில் இருந்து மீண்டு வரவும் இயலாது, எனவே ஏக்கம் நிறைந்த திருப்தி இல்லாத வாழ்க்கையையே ஜாதக எதிர்கொள்ளும் சூழ்நிலையை  தரும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள மற்றவர்களின் உதவிகளை நிச்சயம் நாடவேண்டிய சூழ்நிலையி தரும், குடும்பத்தில் ஜாதகரின் பேச்சு பலரது நிம்மதியை வெகுவாக குலைக்கும், அனைவரிடத்திலும் வெறுப்பை சம்பாதிக்கும் நிலையை தரும்.

 இல்லறவாழ்க்கை அமைவதில் அதிக அளவில் தடைகளை தரும், தமக்கு உகந்த ஓர் வாழ்க்கை துணையை சுயமாக ஜாதகரோ, ஜாதகியோ தேர்ந்து எடுக்க இயலாது, தேர்ந்தெடுத்தாலும் அது அவருக்கு பொருத்தமானவராக அமைவாரா என்பது கேள்விக்குறியே ? குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த துர்பாக்கியத்தை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிரமங்களுக்கு ஒரு அளவு இருக்காது, பொருளாதார நெருக்கடிகள் ஜாதகரை கடுமையாக பாதிக்கும், வீண் வாக்குவாதங்கள் ஜாதகரை மிகப்பெரிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், இல்லற வாழ்க்கையில் நிம்மதியின்மை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தன்னம்பிக்கை சுய மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது, பொருளாதார தேவைகளை  பூர்த்திசெய்ய ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதையும் விரையம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், இதற்க்கு காரணமாக ஜாதகரை சார்ந்தவர்களே இருப்பார்கள் என்பது கண்கூடான உண்மை, மேலும் ஜாதகரை பொருளாதார சிக்கல்களில் மிக எளிதாக சிக்கவைத்துவிடுவார்கள், ஜாதகரின் லட்ச்சியங்களும், ஆசைகளும் இறுதி வரை வெறும் கனவாகவே நிலைத்துவிடும்.

களத்திர ஸ்தான பாதிப்பு என்பது ஜாதகரை தனது விருப்பப்படி வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் தன்மையை தந்துவிடும், தேர்வு செய்த பிறகுதான் தெரியும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் தான் செய்த தவறான தேர்வுகளான வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளே காரணம் என்பது, இதில் நண்பர்களையும், கூட்டாளிகளையும் ஜாதகர் தவிர்த்துவிட வாய்ப்புண்டு வாழ்க்கைத்துணையை தவிர்ப்பது என்பது சற்று கடினமான விஷயமாக அமைந்துவிடும், மேலும் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் வெகுவாக தாமதப்படுகிறது, அல்லது தமக்கு சற்றும் பொருத்தம் அற்ற  வாழ்க்கைத்துணை மூலம் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெரும் ஜாதகர்கள், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அவசரம் மற்றும் திடீர் முடிவுகளை மேற்கொள்வது உகந்தது அல்ல, ஏனெனில் முற்றிலும் தவறான, தனக்கு சிறிதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிடும் சூழ்நிலையை தந்துவிடும், மேலும் அவர்கள் வழியில் இருந்து சொல்லவொண்ணா துன்பங்களுக்கு ஆளாகும் நிலையினை தந்துவிடும்,  இதனால் ஜாதகரின் உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வாழ்க்கையில்  சூழ்நிலை கைதியாக வாழும் தன்மையை தரும், இல்லறவாழ்க்கையில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையையும், திருமணத்திற்கு முன்புவரை இருந்த வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரிக்கும், தாம் செய்த தவறான முடிவுகளால்  தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், ஜாதகரின் முழு சுதந்திரமும் பறிபோகும், எதிர்த்து போராடும் திறன் இன்றி கூனி குறுகி சமுதாயத்தில் அவயோக வாழ்க்கையை வாழும் நிலையை தரும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின்,  சம்பந்தப்பட்ட ஜாதகர் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும், ஒருவேளை 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகரையோ ஜாதகியையோ தேர்வு செய்தால் வாழ்க்கை மிகப்பெரிய சூன்யமாக மாறிவிடும், பெரும்பாலும் தற்கொலை போன்ற முடிவுகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அன்பர்களின் சுய  ஜாதகங்களில் லக்கினமும் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம் 

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகர் வெகு சுதந்திரமாக சில முடிவுகளை மேற்கொண்டு தனது வாழ்க்கைக்கு இன்னல்களை தாமே வரவைத்துக்கொண்டார், தமது சுய விருப்பப்படி வாழ்க்கை துணையை தேர்வு செய்தார், ஆரம்பித்தில் இனித்த இல்லற வாழ்க்கை 60 நாட்களுக்கு பிறகு கசந்தது, "மோகம் 30 நாள் ஆசை 60 நாள்" என்ற பழமொழி ஜாதகருக்கு நடைமுறைக்கு வந்தது, கருத்து வேறுபாடுகளும், மன கசப்பும் இல்லற வாழ்க்கையில் கட்டாய பிரிவினை வழங்கியது, ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் அனைத்தும் பொய்த்து போனது, கல்வி தொழில் மற்றும் உடல் நலம்  கடுமையாக பாதித்தது, ஜாதகரை அவரது வாழ்க்கை துணை குறிப்பிட்ட சிலமாதங்களில் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, பல நன்மைகளை பெற்றுக்கொண்டார், தான் ஏமாறுவதும் ஜாதகருக்கு தெரியவில்லை, தெரிந்த பொழுது ஒன்று செய்ய இயலாத சூழ்நிலை, வாழ்க்கையில் அவசரப்பட்டு எடுத்த முடிவிற்க்கான பலாபலன்களை அனுபவிக்கும் பொழுது "நித்திய கண்டம் பூரண ஆயுசானது " ஜாதகரின் வாழ்க்கை. லட்ச்சியங்கள் ஆசைகள் அனைத்தும் காற்றில் பறந்தது, நிம்மதி இல்லாமல் அவல நிலையை தந்து, உறவுகளின் ஏளன பேச்சிற்கு ஆளாக்கியது, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியானது.

இதற்க்கு எல்லாம் ஜாதகரின் களத்திர பாவகம், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது காரணமாக அமைந்தது, ஜாதகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை துணை, மிக எளிதாக ஜாதகரை உதாசீனம் செய்து தமது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார், இதனால் ஜாதகர் எந்த ஒரு முடிவும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு ஆளானார், அதிக மனஅழுத்தம், மனபோராட்டம் ஆகியவை ஜாதகரின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது, இயல்பு வாழ்க்கைக்கு ஜாதகரால் திரும்ப இயலாத நிலை உருவானது, தனது சேமிப்பு அனைத்தும் கரைந்து, வேலையும் பறிபோனது, உறவுகள் வழியில் எதிர்ப்பு, பெயருக்கு களங்கம், நிம்மதி இன்மை என ஜாதகர் பல விதங்களில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார், இதற்க்கெல்லாம் காரணமாக சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையை கூறினாலும், 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தற்போழுது நடைபெறும் லக்கினாதிபதி திசையான குரு திசை பாதக ஸ்தான பலனையே வாரி வழங்குவது, ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு எல்லாம் முழு முதற்காரணமாக அமைந்துவிட்டது.

சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட  பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் சரியான பருவ வயதில் நடைபெறும் திசாபுக்திகள் ( 16 முதல் 26 வயது வரை ) பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் களத்திர வாழ்க்கை சிங்கத்தின் வாயில் அகப்பட்ட புள்ளிமானின் நிலைக்கு  பொருத்தமானதாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் வலிமை நிலையை, ஜோதிடர் உதவி கொண்டு தெளிவடைந்து, ஒருவேளை மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், பெரியோர் ஆசியையும், ஜோதிடர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, இனிய இல்லறம் காண "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது, மேற்கண்ட பாதிப்பான நிலையில் இருந்து விடுபட சரியான பரிகாரங்களை நாடி நலம் பெறவும், சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்யவும் தெய்வீக கலையான "ஜோதிட சாஸ்த்திரம்" நிச்சயம் தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பு :

திருமண வாழ்க்கை என்பது மிக சாதாரணமாக எதிர்கொள்ளும் விஷயம் அல்ல என்பதை இளம் வயதில் உள்ள அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகம் தங்களுக்கு மிகச்சரியாக பொருந்தி இருந்தால் தங்களின் வாழ்க்கையில் வரும் யோக நிகழ்வுகளுக்கு எவ்வித குறையும் இருக்காது, சகல நிலைகளில் இருந்து முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் இன்பமும் வந்து சேரும், மாறாக பாதிக்கப்பட்டு இருந்தால் தங்களின் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகளை ஓரளவு பெற இயலும், ஒருவேளை தங்களின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு இருந்தால், இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக