திங்கள், 25 ஜூலை, 2016

நவகிரக திசாபுக்திகள் எனது ஜாதகத்திற்கு வழங்கும் யோக அவயோக நிலையை பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன் !


கேள்வி :

2க்கு உடைய சூரியன் திசை மிகுந்த சிரமங்களையே தந்துள்ளது, எதிர்வரும் லக்கினாதிபதி சந்திரன் திசை மற்றும் அதற்க்கு பிறகு வரும் மற்ற திசைகள் எனக்கும் நன்மையை தருமா? தீமைகளை தருமா ? எனக்கு நன்மைகளை தரும் திசாபுக்திகள் எவை? என்பதனையும், தீமைகளை தரும் திசாபுக்திகள் எவை? என்பதனையும் விளக்கம் தர வேண்டுகிறேன்.

பதில் :

சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒருவருக்கு தனிப்பட்ட ஆளுமையின் கீழ் பலாபலன்களை வழங்க இயலாது, தங்களின் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே, யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், குறிப்பாக நவகிரகங்களில் சுப கிரகங்களின் திசா புக்திகள் நன்மையையும் யோகத்தையும் வழங்கும் என்பதும், அசுப கிரகங்களின் திசா புக்திகள் தீமையையும் அவயோகத்தையும் வழங்கும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே, நமது சுய ஜாதகத்தில்  உள்ள பாவகங்களின் வலிமையின் தன்மையையே நவகிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது, இதில் நமது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் சம்பந்தப்பட்ட பாவக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகின்றது, வலிமை அற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தீமைகளும் அவயோகங்களும்சம்பந்தப்பட்ட பாவக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகின்றது.

 எனவே சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்னவோ அதுவே திசாபுக்திகளில் நடைமுறைக்கு வரும் என்பதே  உண்மை, மாறாக நவகிரகங்களின் திசா புக்திகள் தனிப்பட்ட முறையில் பலாபலன்களை வழங்குவதில்லை, மேலும் ஒருவர் பிறக்கும் பொழுதே இவருக்கு இதுதான் என்று விதி வழியில் சுயஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது, தங்களது கேள்விக்கு வருவோம் தங்களுக்கு சுய ஜாதக படி நவ கிரகங்களின் திசாபுக்திகள் வழங்கும் பலாபலன்கள் பற்றி விளக்கம் தேவை, அதைப்பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தங்களுக்கு நவ கிரகங்களின் திசாபுக்திகள் நன்மையையும் யோகத்தையும் தருவது எவை? தீமையையும் அவயோகத்தையும் தருவது எவை என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : மகம் 2ம் பாதம்

தங்களது ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக  தொடர்புகள் :

1,3,4,9,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் : 

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

நன்மைகளை தரும் பாவகங்கள் :

மேற்கண்டவற்றில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகளான 1,3,4,9,12ம் வீடுகள் வழியில் இருந்து 100% விகித நன்மைகள் தங்களுக்கு நடைபெறும்.

5ம் பாவக வழியில் இருந்து 70% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

6,10ம் பாவக வழியில் இருந்து 40% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

7ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

தீமைகளை தரும் பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு 2,8ம் வீடுகள் வழியில் இருந்து 70% விகித தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும்.

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும்.

வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தங்கள் எவ்வித யோகங்களை பெறுவீர்கள் என்பதை பற்றியும், வலிமையற்ற பாவக வழியில் இருந்து தங்கள் எவ்வித அவயோகங்களை பெறுவீர்கள் என்பதை பற்றியும் நேரில் " ஜாதக ஆலோசனை " பெரும் பொழுது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அடுத்து நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் எந்த? பாவக பலனை ஏற்று  நடத்துகிறது ? என்பதை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம்.

தங்களது ஜெனன காலத்தில் கேது திசை நடைமுறையில் இருந்திருக்கின்றது, இந்த கேது திசை தங்களுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது யோகம் தரும் அமைப்பாகும், இதனால் தங்களின் குழந்தை பருவம் சிறப்பாக இருந்திருக்கும், குறிப்பாக உடல்  ஆரோக்கியம் மற்றும் வளரும் சூழ்நிலை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

2வதாக நடைபெற்ற சுக்கிரன் திசை 20 வருட காலம் தங்களுக்கு வலிமை பெற்ற ( 6,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் )  பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்தியிருக்கின்றது, எனவே தங்களின் கல்வி காலமும், இளமை பருவம் சிறப்பாக சென்று இருக்கும், மேலும் தங்கள் இந்த காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்திருக்கும், ஆன்றோர் பெரியோர் ஆதரவு வெகுவாக தங்களுக்கு நன்மைகளை வழங்கி இருக்கும்.

3வதாக தற்போழுது நடைபெறும் சூரியன் திசை தங்களுக்கு வலிமை அற்ற ( 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது, தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கிய பொழுதும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும், உடல் நல குறைவையும் தவிர்க்க இயலாது, மேலும் குடும்ப வாழ்க்கையிலும், வருமானம் சார்ந்த விஷயங்களிலும் இன்னல்கள் அதிக அளவில் வர வாய்ப்புண்டு.

ஆனால் 4வதாக நடைபெற இருக்கின்ற சந்திரன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது சிறப்பான எதிர்காலத்தையும், 5வதாக நடைபெற இருக்கின்ற செவ்வாய் திசை தங்களுக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத யோகங்களையும், 6வதாக நடைபெற இருக்கின்ற ராகு திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தொழில் ரீதியான வெற்றிகளையும், 7வதாக நடைபெற இருக்கின்ற குரு திசை தங்களுக்கு வலிமை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும், வாரி வழங்கும். இதில் மேற்கண்ட திசைகள் மட்டுமல்ல புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களும் மேற்கண்ட பாவக தொடர்பு வழியில் இருந்து நன்மைகளையே செய்யும்.

ஆனால் 8வதாக வரும் சனி திசை தங்களுக்கு ( திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ) வலிமை அற்ற பாதக ஸ்தான (11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்) பலனை  ஏற்று நடத்துவது தங்களுக்கு 11ம் பாவக வழியில் இருந்து கடுமையான 200% விகித இன்னல்களை வாரிவழங்கும், எனவே சனி திசை மற்றும் மற்ற திசைகளில் வரும் சனிபுத்தி,சனிஅந்தரம் மற்றும் சனிசூட்சமங்கள் தங்களுக்கு மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கு ஆளாக்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கும்.

9வதாக வரும் புதன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன்களையும், வலிமை அற்ற ஆயுள் பாவக பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் ஜீவன ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும், ஆயுள் பாவக வழியில் இருந்து தீமைகளையும் அவயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தங்களுக்கு வழங்கும் நன்மை தீமைகள் பற்றியும், யோக அவயோகங்கள் பற்றியும் துல்லியமாகவும், விளக்கமாகவும் தெரிந்து கொள்ள நேரில் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு :

தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் தங்களுக்கு நடைபெறும் நவகிரகங்களின் திசாபுக்திகள் எதுவாயினும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலு குறைவாக இருந்தாலோ, பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருந்து நடைபெறும் திசாபுக்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசை சுபக்கிரகத்தின் திசை என்றாலும் அதற்க்கு விதிவிலக்கு கிடையாது, தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து  நிச்சயம் அவயோக பலன்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக