வியாழன், 6 அக்டோபர், 2016

பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் படும் அவஸ்தைகள் !


கேள்வி :

பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி, பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம், பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு அதிக அளவில் இன்னல்களை மட்டுமே வழங்குமா?

பதில் :

இது ஒரு சிறந்த கேள்வியாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி, பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம், பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு அதிக அளவில் இன்னல்களை மட்டுமே தரும் என்பது முற்றிலும் சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் வாதமாகவே கருதலாம், இதை பற்றி சற்று விளக்கமாக இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

பாதக ஸ்தானம் :

சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்கு 7ம் வீடும் பாதக ஸ்தானங்களாக அமையும், ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள், அந்த லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தால் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள், அந்த லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வீடுகளோ தொடர்பு பெறுமாயின், தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து பாதக ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரும்.

பாதக ஸ்தான அதிபதி :

ஒரு ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியை நிர்ணயம் செய்ய சில விதி முறைகள் உண்டு, மேலும் பாதக ஸ்தான அதிபதி என்றாலே அவர் இன்னல்களை மட்டும் தருவார் என்று கருதுவது, சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாக அமையும் என்பதை கருத்தில் கொள்க, சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதி சுப தொடர்பு பெற்றால் அவரும் நன்மையை தரும் அருகதை உள்ளவராகிறார்.

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு :

பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம் அல்லது வீடு ஒருவருக்கு இன்னல்களை தரும் என்று கருதுவதும், ஜாதக உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு சுப பாவக தொடர்பை பெற்றால் நிச்சயம் மிகுந்த நன்மைகளையே செய்யும் என்பதை கருத்தில் கொள்க.

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் :

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை இன்னல்களை தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறான கருத்தே, ஏனெனில் பாதக ஸ்தான அதிபதியின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று பலனை தந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் மற்றும்  வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களே நடைமுறைக்கு வரும்.

மேற்கண்ட விஷயங்களை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


பாதக ஸ்தானம் :

மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் 11ம்  பாவகம் ஆகும், இந்த பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 5,11 ம் வீடுகள் ஆகும், எனவே ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், இதனால் ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து 2௦௦ சதவிகித இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான அதிபதி :

மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியாக பொறுப்பு வகிப்பவர் கேது பகவன் ஆவார், இவர் தனது திசையில் வலிமை பெற்ற லக்கினம் மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாகும்.

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு :

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகமாகும், சுய ஜாதகத்தில் நான்காம் வீடு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், எனவே பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடும் ஜாதகருக்கு மிகவும் வலிமையான சுக போகங்களை வாரி வழங்குகிறது.

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் :

பாதக ஸ்தான அதிபதியான கேது பகவானின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் அனைத்தும் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஆனால் இந்த ஜாதகத்தில் முழு சுபர் என்று ஜோதிடர்களால் வருணிக்கப்படும் குரு பகவான் 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது குரு  திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் அனைத்திலும் பாதக ஸ்தான பலனை முழு வீச்சில் வழங்கும் என்பதை கவனிக்கவும், பாரம்பரிய முறைபடி எடுத்து கொண்டாலும் பாதக ஸ்தான அதிபதியாக கருதும் சுக்கிரன் தனது  திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் காலத்தில் விறைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே நடத்துகிறார், அதுவும் 3௦ சதவிகித இன்னல்களை மட்டுமே தருகிறார் என்பது கவனிக்க தக்கது, எந்த விதத்திலும் பாதக ஸ்தான பலனை தரவில்லை என்பதை சற்று ஆய்வு செய்தால் தெளிவாக தெரிய வரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக