Friday, October 7, 2016

குட்டி சுக்கிரன் என் வாழ்க்கையை குட்டி சுவாராக்கி விட்டது என்கின்றனர் இது உண்மையா ?


ஐயா வணக்கம்

எனது வாழ்கை ஒரு போர்க்கலமாகி விட்டது , கேட்டால் குட்டி சுக்கிரன் என்கிறார்கள் வாழ்கையில் நான் எல்லா வித துன்பம், ஏக்கம் மற்றும் ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன், அடுத்த மாதம் காசி சென்று செட்டில் ஆகபோகிறேன், 10 வகுப்பில் சிறப்பான மானவன் ஆனால் தேர்வு முடிவில் வந்த மதிப்பெண் 240 என்ன செய்வதென்ரே தெரியவில்லை, எதிர்காலம் எப்படி அமையும் ?


குட்டி சாத்தான் கேள்வி பட்டு இருக்கின்றேன், அது என்ன குட்டி சுக்கிரன், சகோதரரே தங்களின் ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒரு வகையில் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை நடத்துவது நல்லதே, இருப்பினும் தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அனைத்தும் ( 11 வீடுகள் ) பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது, மேலும் லாப மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றுள்ளது கவனிக்க தக்கது, இதனால் தங்களின் தன்னம்பிக்கை குறையும், எடுக்கும் செயல்களில் அதிர்ஷ்டமின்மையால் வெற்றிகளை பெற பல தடைகள் உருவாகும், சுய அறிவு திறன் கடுமையாக பாதிக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டத்தை குறிக்கும் கும்பம் தங்களுக்கு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது உகந்தது அல்லவே, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் 1,6,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து அதிக மன உளைச்சல், மன நிம்மதி இழப்பு, சத்ரு ஸ்தான வழியில் இருந்து உடல் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவு மூலம் நிம்மதி இன்மை, விறைய ஸ்தான வழியில் இருந்து வீண் விரையங்கள், மன உறுதி இன்மை, குழப்பங்கள், அனைவராலும் தொந்தரவுகள் என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும்.

2,4,5,7,8,10ம் வீடுகள் அனைத்தும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இரண்டாம் பாவக வழியில் இருந்து வருமானம் இன்மை, பேசும் பேச்சுகளால் இன்னல்கள், கல்வியில் தடை, என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போக வாழ்க்கைக்கு தடைகளையும், வண்டி வாகன யோகமின்மை, ஜீவிப்பதர்க்கு சரியான வீடு இல்லாமல் இன்னலுறும் தன்மை, 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் சிறப்பான முன்னேற்றம் இன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து சிறப்பு இன்மை, சுய புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாத நிலை, உதவி செய்ய யாரும் முன்வராத சூழ்நிலை என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் துன்பங்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இழப்புகள், வீண் அவ பெயர்கள், பொதுமக்கள் ஆதரவு இன்மை, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மன நோய், விபத்து, பொருள் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து ஜீவன முன்னேற்றம் இன்மையும், நல்ல வேலை வாய்ப்பு அமையாதது, கௌரவம் சார்ந்த தொந்தரவுகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

பள்ளி தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கததிர்க்கும் பட்ட படிப்பில் தோல்வியை சந்தித்ததிர்க்கும், அந்த நேரத்தில் நடைபெற்ற சனி புத்தி தங்களுக்கு 1,12,ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது.

தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதக ஸ்தானம், விறைய ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாதிக்க பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதும் தங்களின் இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது என்பதை கருத்தில் கொள்க, மேலும் இது சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட, முறையான ஜாதக ஆலோசனை பெற்று நலம் பெருக.

குறிப்பு :

எவர் ஒருவருக்கும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே ஏற்றே நவகிரகங்கள் பலாபலன்களை வழங்குகிறது, தனிப்பட்ட நன்மை தீமையை தர  நவகிரகங்களுக்கு வல்லமை இல்லை என்பதை உணருவது அவசியமாகிறது, ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் சுய ஜாதக பாவக வலிமை நிர்ணயம் செய்யபடுகிறது, பனிரெண்டு பாவகங்களுக்கு நவகிரகங்கள் வழங்கும் ஜீவா காந்த அலைகளின் அடிப்படையில் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது என்பதே உண்மை, மேலும் நன்மையையும் தீமையும் அவரவர் செய்த வினைபதிவின் தாக்கத்தின் அடிப்படியில் நவகிரகங்கள் யோக அவயோக பலாபலன்களை நிகழ்த்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.