தங்களது கேள்வி, புதன் திசை குரு புக்தியில் நிச்சயம் தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று உறுதியாக அனைத்து ஜோதிடர்களும் கூறினார், ஆனால் புதன் திசை குரு புத்தியில் திருமணம் நடைபெறவில்லை, அதற்க்கு காரணம் என்ன? என்பதே.
முதல் காரணம்
தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு வழங்கும் பலன்களை கருத்தில் கொள்வோம், புதன் திசை தங்களுக்கு 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய ஸ்தான பலன்களை வாரி வழங்குகிறது, மேலும் தங்களின் ஜாதகத்தில் விறைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் 11ம் வீடாகவும், ஸ்திர காற்று ராசியான குமபத்தில் அமைவதும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும் அமைப்பு அல்ல, புதன் திசை தங்களுக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து இன்னல்களையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் வழங்குவது கவனிக்க தக்கது, இதனால் தங்களின் சுக போக வாழ்க்கையில் நிம்மதி இழப்பையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து காரிய தடைகள் எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வியை தரும் அமைப்பு, திட்டமிட்டு செயல்படுத்த இயலாத சூழ்நிலை என்ற வகையில் பலன்களை தருகிறது, மேலும் புதன் திசை தங்களுக்கு எவ்விதத்திலும் களத்திர ஸ்தான பலனையோ, குடும்ப ஸ்தான பலனையோ ஏற்று நடத்தவில்லை ( இருப்பினும் தங்களது ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடனே உள்ளது வரவேற்க தக்கது ) இதானால் தாங்கள் திருமணம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகளை புதன் திசை தரவில்லை என்பதே உண்மையாகிறது.
இரண்டாவது காரணம்
தங்களது ஜாதகத்தில் புதன் திசையில் குரு புத்தி ( 27/02/2012 முதல் 04/06/2014 வரை ) நடைபெற்று உள்ளது, நடைபெற்ற குரு புத்தி தங்களுக்கு 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, குரு புத்தி முழுவதும் விறைய ஸ்தான பலனையே நடத்தி இருப்பது தங்களின் வாழ்க்கையில், திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் அனைத்தையும் தோல்வி அடைய செய்து இருக்கின்றது, மேலும் குரு புத்தி காலங்களில் எவ்விதத்திலும் வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவனிக்க தக்கது, ஒருவருக்கு திருமணம் சரியான பருவ வயதில் ( 18 முதல் 23 வயதுக்குள் ) நடைபெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் 2,7,12 வீடுகள் வலிமையாக இருக்க வேண்டும் சரியான பருவ வயதில் நடைபெறும் திசையோ அல்லது புத்தியோ வலிமை பெற்ற 2,7,12ம் பாவக பலனையோ, அல்லது ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவக பலனையோ ஏற்று நடத்தினால் எந்த ஒரு தடையும் இன்றி, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
மாறாக சரியான பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனையோ, அல்லது பாதக ஸ்தான பலனையோ ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமண தடைகளை வழங்கும் என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரவில்லை ( 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தருகிறது ) புதன் திசையில் நடந்து முடிந்த குரு புத்தியும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரவில்லை ( 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தந்து இருக்கின்றது ) மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள புதன் திசை சனி புத்தியும் தங்களுக்கு சாதகமாக இல்லை ( 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தந்து இருக்கின்றது ) எனவே தங்களுக்கு புதன் திசை சனி புத்தி வரை திருமணம் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை என்பதை "ஜோதிடதீபம்" தெளிவு பட கூற விரும்புகிறது.
சரியான வயதில் திருமணம் தடையின்றி நடைபெற சுய ஜாதக அமைப்பில் உள்ள வலுமையான காரணிகள் :
1) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் வலிமையாக இருப்பது அவசியமாகிறது.
2) ஜாதகருக்கு திருமண வயதில் நடைபெறும் திசாபுத்திகள் (சனி,ராகு,கேது செவ்வாய் போன்ற பாவக கிரகத்தின் திசா புத்தி என்றாலும் கூட ) வலிமை பெற்ற 2,7,12ம் பாவக பலனையோ, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவக பலனையோ ஏற்று நடத்த வேண்டும்.
3) வலிமை பெற்ற பாவகத்திற்கு கோட்சார கிரகங்கள் மேலும் வலிமையை தமது கோட்சார சஞ்சார நிலையில் இருந்து தர வேண்டும்.
மேற்கண்ட அமைப்பு ஒருவரது ஜாதகத்தில் இருப்பின் நிச்சயம் அவர் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி திருமண வாழ்க்கையில் எவ்வித தடைகளும் இன்றி சிறப்பான தமக்கு உகந்த வாழ்க்கை துணையை பெறுவார் என்பது உறுதி.
தங்களது ஜாதகத்திற்கு திருமண வாழ்க்கை எப்பொழுது அமையும் என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே !
புதன் திசைக்கு பிறகு வரும் கேது திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை ஏற்று நடத்துவது கவனிக்க தக்கது ( எதிர்வரும் கேது தசை 5,8,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று வர்ணிக்க படும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும் ) எனவே கேது திசை, கேது புத்தியில் நிச்சயம் திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் நல்ல வெற்றிகளை தரும், மேலும் கேது திசை சுக்கிரன் புத்தி வலிமை பெற்ற 1,7 ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் திருமண வாழ்க்கை தாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெறும் என்பதை உறுதியாக ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது, நல்வழத்துகள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக