பின்தொடர...

Friday, March 3, 2017

சுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழிமுறைகள்..


ஒருவரது சுய ஜாதக பலன் பற்றி தெளிவு பெற நிறைய கணிதங்களும், ஜோதிட கணிதத்தில் நல்ல புலமையும் தேவை, கிரகங்கள் நின்ற நிலையை வைத்தும், நடைபெறும் திசைபுத்தியை வைத்தும், சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரக சஞ்சார நிலையை வைத்தும் பலன் சொல்லிவிட முடியும் என்று நினைப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, கிழ்கண்ட முறையை கையாண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான ஜாதக பலாபலன்கள் காண இயலும் என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

சுய ஜாதக பலன் காண :

1 சம்பந்தப்பட்ட ஜாதகரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை தெளிவாக தெரிவது மிக முக்கிய அமசமாகும்.

2 ஜாதகரின் பிறந்த குறிப்பின் அடிப்படையில், அவர் பிறந்த நேரம் சரியானதா ? என்பதில் தெளிவு பெறுவது ஜோதிடர்களின் கணித திறமை உள்ளது.

3 ஜாதகரின் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் ஆரம்பிக்கும் நிலை, பாவங்கள் முடிவு பெரும் பாகை ஆகியவை பற்றி தெளிவு வேண்டும்.

4 ஜாதகரின் பாவக நிலை உணர்ந்து நவகிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றது ( கிரகங்கள் பாவக மாறுதல் அடைந்திருக்க கூடும் என்பதால் ) என்ற தெளிவு பெறுவது மிக மிக முக்கியமாக அமைகிறது.

5 ஜாதகருக்கு ( ஜெனன நேரத்தில் ) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமை, வலிமை அற்ற நிலை பற்றி துல்லியமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது, ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலே ஜாதக யோக அவயோக பலன்களை அனுபவிக்க அருகதை உடையவர் ஆகிறார்.

6 நவகிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற மிக முக்கியமான விஷயம் தெரிந்திருப்பது ஜோதிடனுக்கு மிக முக்கிய தகுதியாக அமைகிறது ( பெரும்பாலும் இந்த இடத்தில் தவறு நடப்பதால் சுய ஜாதக பலன்கள் துல்லியமாக காண இயலாமல் போய்விடும் ) மேலும் நவ கிரகங்கள் திசாபுத்திகள் தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த இடத்தில் ஜாதக பலன் கூறும் பொழுது யாதொரு தவறும் நடைபெறாமல் பார்த்து கொள்வது அவசியமாகிறது.

7 நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சாரத்தில் நவகிரகங்கள் தரம் பலாபலன்களை கருத்தில் கொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு முக்காலங்களையும் துல்லியமாக உணர்த்த இயலும், இந்த இடத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை உணர்வது அவசியமாகிறது.

8 கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சுய ஜாதக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கு உண்டான தொடர் பற்றியும் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல வழிகளில் இருந்தும் முன்னேற்றங்களை பெற ஆலோசனை வழங்க முடியும்.

9 கிரக தத்துவம், காலபுருஷ தத்துவம் ஆகியவற்றில் தெளிவு பெற்று இருப்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உடல்நலம், மனநலம்,கல்வி,பொருளாதாரம்,வேலை,தொழில்,ஜீவனம்,வாழ்க்கை துணை, குழந்தைகள், வீடுசொத்துசுகம், வண்டிவாகனம்,யோகம்,அவயோகம்,நோய்நொடி,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகியவற்றில் மிக துள்ளியாமான பலாபலன்களை எடுத்து உரைக்க உதவி புரியும்.

10 மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும் மிக சரியான கால நேரத்தையும், பாவகங்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெற முறையான தீர்வுகளையும் மிக துல்லியமாக வழங்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

"ஜோதிடம்" என்பது விளையாட்டு காரியமல்ல என்பதில் அனைவரும் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் நமது வாழ்க்கையை சிறப்பிக்க இறையருளால் வழங்கப்பட்ட ஓர் அட்சய பாத்திரம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே! தங்களுக்கு நல்ல "ஜோதிடம்" கிடைப்பதே இறை அருளின் கருணை என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதக வலிமையை உணர்ந்து செயல்படுங்கள், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment