பின்தொடர...

Tuesday, January 31, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் சிம்மம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சிம்மம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஐந்தாம் ராசியான சிம்ம ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், சிம்ம லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இறை அருளின் பரிபூர்ண கருணையையும், மிதம்மிஞ்சிய புத்திக்கூர்மையையும் ஒருங்கே அமைய பெற்று, இந்த பூவுலகில் அறிய பல சாதனைகளை புரியும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இதுவரை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சரித்த சனி பகவானால், சுகபோகங்களை துறந்து, ஒருவிதமான மனசஞ்சலத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வந்த தங்களுக்கு, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கு சனிபகவானால் சிறு சிறு இன்னல்கள் வந்த போதிலும், பெரும்பாலான நன்மைகளும் நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறு தாமதங்களை தர கூடும், தங்களின் வெகுநாள் திட்டமிடுதல்கள் மிக மெதுவாக வெற்றிபாதையை நோக்கி நகர ஆரம்பிக்கும், வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு என்பதால் அவர்களது வாழ்க்கையில் சிறிது அக்கறை கொள்வது நலம் தரும், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், சுயமுன்னேற்றம் பெறுவதற்கு உண்டான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில ரகசியங்களை காப்பது தங்களுக்கும், தங்களது முன்னேற்றத்திற்கும் பேருதவிகளை தரும், மேலும் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும், மற்றவர்கள் விஷயங்களில் தாமாக முன்வந்து தலையீடு செய்வது தங்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே சாலச்சிறந்தது, தன்னம்பிக்கையை  அதிக அளவில் வளர்த்துக்கொள்வதும், எதையும் சமாளிக்கும் மனதைரியத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது, தங்களுக்கு உகந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்களது குல தேவதை வழிபாடு சகல நிலைகளில் இருந்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், சனி மாற்றத்தால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தங்களது பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆலோசனையை பரிசீலனை செய்வது தங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதிய தொழில் வாய்ப்புகளையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்குவார், மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், இதுவரை திருமண தடைகளை சந்தித்து வந்த வரனுக்கும், வதுவுக்கும் பொருத்தமான துணை வந்து சேரும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், உடல் ரீதியாக கடினமான இன்னல்களை சந்தித்து வந்த அன்பர்களுக்கு, சரியான மருத்துவரிடம் சென்று தனது உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவ சிகிசிச்சையை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும், உடல் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடும் யோகமும் உண்டாகும், வட்டி தொழில், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகத்தை தரும், பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பாராத அளவிற்கு வாரி வழங்கும், தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் நேரமாக இந்த சனிபெயர்ச்சி விளங்கும் என்பதில் மாறு கருத்து இல்லை, எனவே சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான வெற்றி உறுதி என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

11ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை தனது அறிவு திறன் மூலம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து, வெற்றிகரமான வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை இனிவரும் காலங்களில் சனி பகவான்  தனது திருஷ்ட்டி மூலம் வழங்குகிறார், இனிவரும் காலங்களில் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் பிரகாசிக்கும், தான்  நினைத்ததை சாதிக்கும் வல்லமை உண்டாகும், எதிர்கால திட்டமிடுதல்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், தனது சமயோசித அறிவு திறன்  மற்றும் புத்திசாலித்தனம் சிம்மலக்கின அன்பர்களுக்கு  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பொதுக்காரியங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும், கமிஷன்,தரகு மற்றும் பங்கு வர்த்தக துறையில்  உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும், தனது அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வதற்கு உண்டான  சந்தர்ப்பங்கள் இயற்கையாக இவர்களுக்கு தேடிவரும், அதிகார பதவி,  மக்கள் ஆதரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம், உலக புகழ், பிரபல்ய யோகம் என சிம்ம லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தில் பல படிக்கட்டுகளை மிக எளிதாக கடக்கவும், அதன் வழியில் யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளையும் சனி பகவான்  சம சப்த 7ம் பார்வை வாரி வழங்கும், உண்மையில் சனி பகவானின் பார்வையின் மூலம் சகல யோகத்தையும் பெரும் அன்பர்கள் சிம்ம லக்கினத்தை, தனது ஜென்ம லக்கினமாக பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

2ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா வருமான வாய்ப்புகளை தொடர்ந்து வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையான தாம்பத்திய வாழ்க்கையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு சகல மரியாதையும் கிடைக்கும், மக்களை வசீகரிக்கும் யோகம் உண்டாகும், தனது வாக்கை தொழிலாக கொண்டவர்களுக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் காலம் இது, தன்னிறைவான பண வசதி, குறுகிய காலங்களில் நல்ல தன சேர்க்கையை பெரும் யோகம், எதிர்ப்புகளை களைந்து வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம், சகல விதங்களில் இருந்தும் மிகப்பெரிய நன்மைகளை பெரும் யோகம், தனது பரோபகார செயல்களால், சமூக மதிப்பு கூடும், ஜாதகர் ஈடுபடும் போட்டி பந்தயம், தேர்வு, தேர்தல் என அனைத்திலும் வெற்றிவாய்ப்பினை வாரி வழங்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து மற்றும் அரசியல் பதவிகளை வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, திட்டமிட்ட செயல்பாடுகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மன நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு இறை அருள் தந்த " நன்கொடை " என்றால் அது மிகை அல்ல, மேலும் தற்போழுது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், சிம்மலக்கின அன்பர்களுக்கு சகல விதங்களில் இருந்தும், 2ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகின்றார் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 5,10,11,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  5,10,11,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


No comments:

Post a Comment