பின்தொடர...

Sunday, August 13, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( ரிஷப லக்கினம் )


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

ரிஷப லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 2ம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் ராகு பகவானும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் வீர்ய ஸ்தான சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முன்னேற்றம் சார்ந்த திட்டமிடுதல்கள் யாவும் முழு அளவிலான நன்மைகளை தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதாராவும், உதவிகளும் தேடி வரும், ஜாதகரின் தனிப்பட்ட அபிலாசைகள் யாவும் நிறைவேறும், குறிப்பாக காதல் வெற்றி பெற்று இனிமையான இல்லற வாழ்க்கை அமையும், தெவீக பலம் கூடுவதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஜாதகருக்கு எதிர்பால் இன சேர்க்கை மூலம் லாபங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் உண்டு, ரிஷப லக்கின அன்பர்களின் மனபயம் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் மூலம் ஜாதகரின் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த ராகு சஞ்சாரம் அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை மேலோங்கும், வண்டி வாகனம் மற்றும் சொத்து வீடு ஆகியவற்றின் மூலம் ஜாதகர் தொடர் லாபங்களை பெரும் யோகத்தை தரும், தனம் சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஏற்றமிகு சிறப்புகளை வாரி வழங்கும், முன்னேற்றத்தின்பால் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் ( ரிஷப லக்கின ) அபரிவிதமான வளர்ச்சியை தற்போழுது நிகழ்ந்துள்ள ராகு பகவானின் கடக ராசி சஞ்சாரம் தட்டாமல் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை ரிஷப லக்கி அன்பர்களே!

கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு உகந்த நன்மைகளை தருமா ? என்றால் அது கேள்விக்குறியே, கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சற்று கடுமையான விளைவுகளை தங்களுக்கு தர கூடும் என்பதால் எந்த ஓர் விஷயத்தையும் சற்று ஆலோசனை செய்து வயதில் பெரியோர் வார்த்தைகளை மதித்து செயல்படுவது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், இதில் சற்று கவனம் இன்றி செயல்பட்டால் வீண் அவ பெயரும் கௌரவ குறைவும் உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை, மனதில் நினைத்தவுடன் திரு தளங்களுக்கு சென்று வந்துவிடுவது தங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும், தொழில் சார்ந்த நடவடிக்கைகளில், நல்ல ஆலோசகர் மற்றும் அனுபவஸ்தர் அறிவுரைபடி நடந்துகொள்வது தங்களுக்கு வீண் செலவினங்களை குறைக்க உதவும், நீடித்த தொழில் வெற்றிக்கு இதுவே உகந்த நன்மைகளை தரும், பொறுப்பு மிக்க செயல்பாடுகள் மூலம் தங்களுக்கு வரும் அவபெயரில் இருந்து தாங்கள் விடுபடலாம், தொழில் துறை கூட்டு தொழில் அல்லது சுய தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதிக பொறுப்புடனும், நாவடக்கத்துடனும் நடந்துகொள்வது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை உள்ளோர் குல தேவதை வழிபாட்டையும், பித்ரு வழிபாட்டையும் முறையாக செய்வது பாக்கிய ஸ்தான கேது சஞ்சார நிலையால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கையை நிலை நிறுத்தும், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் சற்று இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, முறையான ராகுகேது பிரீதி பாரிகாரங்கள் சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696


No comments:

Post a Comment