பின்தொடர...

Saturday, August 26, 2017

திசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் தற்போழுது " திசாசந்திப்பு " எனும் புதுவித பொறுத்த நிர்ணயம் மிக பிரபல்யம் அடைந்து வருகின்றது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இது அவசியம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றனர், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அடிப்படையாக நட்ச்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் கண்டு, ஜாதகத்தில் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் களத்திர தோஷம் என்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏக காலத்தில் ஒரே திசை நடைமுறைக்கு வரும்பொழுது திசாசந்திப்பு எனும் விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதாவது இருவருக்கும் ஒரே திசை சில வருடங்கள் முன்பின் நடைபெற்றால் தம்பதியர் வாழ்க்கை இன்னலுறும் என்பதும், இதனால் திருமண பொருத்தம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒருவேளை தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஏக காலத்தில் இன்னல்களையும், ஏக காலத்தில் நன்மைகளையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்வியாகவும் இருக்கின்றது, உதாரணமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் முன்பின் குரு திசை நடைபெறும் காலத்தில் தம்பதியர் இருவரும் நன்மைகளையும், சனி திசை நடைபெறும் காலத்தில் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்ற கருத்தை வரன் வதுவின் பெற்றோர்கள்  முன் வைக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதனை இன்றைய பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம்


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம்


வது ஜாதகம்


லக்கினம் : விருச்சிகம்
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : ரோஹிணி 4ம் பாதம்

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசை, திருமணம் 2015ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது, தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் குரு திசை நடைபெறுவதால் திருமணம் செய்ய வேண்டாம் என்ற கருத்தை அதிகம் பேர் பரிந்துரை செய்து இருக்கின்றனர், இருப்பினும் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!  தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம? என்றால் அது சரியாக வர வாய்ப்பில்லை காரணம் தம்பதியரில் வதுவுக்கு நடைபெறும் குரு திசை 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தந்து கொண்டு இருக்கின்றது, வரனுக்கோ 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலனை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது,  எனவே குரு  திசை இருவருக்கும் நன்மையை செய்யும் என்ற வாதம் முற்றிலும் தவறாக போகிறது, அடுத்து வரும் சனி திசை தம்பதியர் இருவருக்கும் தரும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 26/02/2031 வரை நடைபெறும் குரு திசை தனது திசையில் 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகின்றது, ஜாதகருக்கு குரு திசை 09/04/2018 வரை நடைபெற்று 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருகின்றது, இருவருக்கும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும் தருகின்றது, ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஒரு வகையில் நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிதம்மிஞ்சிய சுக போகங்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தர தயார் நிலையில் உள்ளது, சனி திசை காலத்தில் ஜாதகி பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் அனுபவிப்பார், ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்தும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிப்பார் இதுவே மேற்கண்ட தம்பதியர் ஜாதகத்தில் சனி திசை தரும் பலாபலனாகும்.

மேற்கண்ட  தம்பதியர் இருவரது சுய ஜாதகப்படியும் நடைபெறும் குரு மற்றும் சனி திசை தம்பதியரின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இல்லை என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( அதாவது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு ) தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும், மேற்கண்ட தம்பதியர் இருவரது சுய  ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை, குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான இல்லற வாழக்கையை  தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வரும் அது எதார்த்தமான விஷயம், ஆனால் பிரிவு என்ற நிலையை தரும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

உதாரண ஜாதகத்தில் நடைபெறும் ஏக திசை எனும் திசா சந்திப்பு  என்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை "  ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் திசாசந்திப்பு, ஏக திசை நடப்பு என்பதெல்லாம் வரன் வதுவுக்கு நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றது என்ற உண்மை தெரியாத  நிலையிலும், தம்பதியரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகளின் வலிமை நிலை அறியாத நிலையிலும் கூறப்படும் கற்பனை கதையே அன்றி உண்மையில்லை என்பதனை அன்பர்கள் அனைவரும் உணர்வது அவசியமாகிறது, திருமண பொருத்தம் காணும்  பொழுது நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷங்களுக்கு முன்னுரிமை தாராமல், வரன் வதுவின் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பொருத்தம் காணும் பொழுதும், தம்பதியருக்கு திசாசந்திப்பு எனும் ஏக திசை நடைபெற்ற போதிலும் கிரகங்களின் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின்  வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே திருமண வாழ்க்கையை  வெற்றிகரகமாக அமைத்து தரும்.

குறிப்பு :

 திசாசந்திப்பு என்பது தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றி தெளிவு இல்லாத நிலையில் கூறப்படும் கற்பனையே, இதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே! திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வதுவுக்கு ஏக திசை நடைபெற்ற போதிலும் நடைபெறும் ஏக திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று  நடத்தினால் தம்பதியர் வாழ்க்கையில் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதனை நினைவில் கொள்க, திருமண வாழ்க்கை வெற்றி பெற்ற தாம்பத்திய வாழ்க்கையாக மாற வரன் வதுவின் சுய ஜாதகத்தில்  உள்ள 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையே என்பதில் கவனத்தில் கொண்டு திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment