ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜாதகருக்கு சுப யோகங்களையும், சிறந்த வாழ்க்கை பாதையினையும் அமைத்து தரும் கோண பாவகங்கள் !


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று "

என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கு இணங்க புகழ் மிக்க வாழ்க்கையை வாரி வழங்கும் வல்லமை கொண்டவை கோண பாவகங்கள் எனும் 1,5,9ம் பாவகங்கள் என்றால் அது மிகையில்லை, ஓர் ஜாதகருக்கு வாழ்க்கை இறைவன் விதித்த தர்மத்தின் படி நடைபெறுகிறது என்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது என்பதே சத்தியம், இதை எவராலும் மறுக்க இயலாது, இது ஜாதகர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் தாக்கத்தையும், ஜாதகரின் பெற்றோர் மற்றும் முன்னோர் செய்த பாக்கியத்தின் தாக்கத்தையும் ஒன்றிணைத்து தரும் சுபயோக பலாபலனாகும், ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தர்மத்தின் வழியில் நடந்து பெற்ற "தவபலன்" என்றே சொல்லலாம் அனபர்களே.

 கோண பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரின் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் தொலைந்து ஓடும், தர்ம தேவதைகளின் அருட்காப்பில் ஜாதகருக்கு சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும் குறிப்பாக ஜாதகருக்கு நல்ல உடல் மற்றும் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆசிர்வாதம் மூலம் நல்ல கல்வி ஞானம் உண்டாகும், நல்லோர் சேர்க்கையின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பாதையை சிறப்பாக அமைத்துகொள்ளும் யோகம் உண்டாகும், தீயவைகள் யாவும் விலகி நன்மைகள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆத்ம ஞானமும், நல்லறிவும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்கும், ஜாதகரின் நல்ல எண்ணங்கள் யாவும் வாழ்க்கையாக விரிவடையும், லட்சியங்கள் கைகூடி வரும், தனக்கு வரும் சவால்களை ஜாதகரே தனது சுய அறிவு திறன் கொண்டு வெற்றி வாகை சூடுவார், எவர் உதவியும் இன்றி வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வார் என்பதுடன் தர்மத்தை போற்றி காக்கும் ஒழுக்கசீலராகவும் திகழ்வார் மேலும் தர்ம தேவதை ஜாதகரை எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : கடகம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் எனும்  முதல் ( கோணம், கேந்திரம் எனும் சம வீடு ) வீடு  கடக ராசியில் 118.55.30  பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 148.16.46 பாகையில் முடிவடைகிறது எனவே ஜாதகருக்கு லக்கினம் கடகம் என்ற போதிலும் கடக ராசியில் 01.05.30 பாகை மட்டும் கொண்டுள்ளது சிம்மத்தில் 28.16.46 பாகையை பெற்றுள்ளது என்பதால் ஜாதகரின் குணாதிசயம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான ( பூர்வ புண்ணிய ஸ்தானம் )  சிம்மத்தின் தத்துவ ஆளுமையின் கீழ் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஜாதகர் சர லக்கினத்தை பெற்ற போதிலும், ஸ்திர நெருப்பு ராசியின் தன்மையையே முழு அளவில் பெற்று இருப்பர் என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம், மேலும் ஜாதகரின் முதல் வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பதும், ஜாதகரின் 9ம் வீடு மீன ராசியில் 359.41.25 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 30.54.50 பாகையில் முடிவடைகிறது, எனவே ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் என்பது மீன ராசியில் இறுதி பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசி முதல் பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியின் தன்மையை முழு அளவில் பெற்று இருப்பது கண்கூடான உண்மை, எனவே லாக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 9ம் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசியான மேஷமாகவும், மேலும் மேஷ ராசியின்  குணமான, சத்தியத்தை மதித்தல், நேர்மை, உண்மை மாறாத குணம், சுய கட்டுப்பாடு, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை, சிறந்த ஆளுமை திறன், செய்யும் பணியில் நேர்த்தி, சிறந்த அறிவு திறன், மிதம்மிஞ்சிய தொழில்நுட்ப அறிவு, லட்ச்சியத்தை பூர்ணமாக அடையும் யோகம், என்ற வழியிலும் ஜாதகர் பாக்கிய ஸ்தான பலனை லக்கின வழியில் இருந்து அனுபவிப்பார் என்பது மிக துல்லியமான ஜாதக பலாபலன்கள், எனவே ஜாதகரின் முதல் கோண வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான சுபயோகங்களை நல்கும்.

இரண்டாம் கோண வீடான 5ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் இரண்டாம் கோண பாவகமான 5ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் ( 240.39.12 பாகையில் ஆரம்பித்து 269.35.31 பாகையில் முடிவடைகிறது ) 29 பாகையை கொண்டு  வியாபித்து நிற்பது ஜாதகரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் கல்வி அறிவு மிதம்மிஞ்சி நிற்கும், அனுபவ அறிவு ஜாதகரின் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை தரும், அதிபுத்திசாலித்தனமும், சமயோசித அறிவாற்றலும் ஜாதகருக்கு வரும் இன்னல்களை தடுத்து நிறுத்தும் கேடயமாக விளங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னிலை மறவாத மன நிலையை ஜாதகர் பெற்று இருப்பர், மேலும் ஜாதகரின் அறிவு எவர் போற்றுதலுக்கும் மயங்காது, பதவி வரும் பொழுது பணிவும் வரவேண்டும், நல்ல துணிவும் வரவேண்டும் என்ற கவிஞரின் வாக்கிற்க்கு பொருத்தமான செயல்பாடுகளை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் வழங்கும், மேலும் ஜாதகரின் நுண்ணறிவு என்பது..

" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு "

என்பதற்கு இணங்க மெய்பொருள் காணும் அறிவை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது  கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல யோகமுடன் திகழும் என்பதுடன் "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என புகழ் பெற்று கீர்த்தியுடன் வாழும் யோகத்தை தரும், தெய்வீக நம்பிக்கை ஜாதகருக்கு அதிக அளவில் அமைந்திருக்கும் என்பதுடன், குல தேவதையின் ஆசிர்வாதத்துடன் ஜாதகர் சுப யோகங்களையும் பெறுவார் என்பது ஜாதகரின் சிறப்பு அமசமாகும்.

மூன்றாம் கோண வீடான 9ம் வீடு ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் மூன்றம் கோண பாவகமான 9ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, 9ம் பாவகத்தை பற்றி விரிவாக லக்கினத்துடன் தொடர்பு பெரும் பாக்கிய ஸ்தானம் என்ற பத்திகளில் விரிவாக பார்த்து விட்டதால், இனி பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி மட்டும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஆராய்ச்சி கல்வியில் நல்ல வெற்றிகளை தரும், ஆன்மீக பெரியோரின் சந்திப்பின் மூலம் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை பெறுவார், எதிர்ப்புகளை கடந்து சிகரம் தொடும் யோகம் உண்டாகும், ஜாதகரின் அறிவு திறனின் வீச்சு பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் வல்லமை கொண்டதாக திகழும், நல்ல ஆன்மிகம் மற்றும் யோக மார்க்கம் ஜாதகருக்கு பிறவி பயனை அடைய செய்யும், அனைத்திற்க்கும் சரியான தீர்வு சொல்லும் ( தர்மத்தின் படி ) வல்லமை கொண்டவராக திகவார்கள், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண வீடுகளான 1,5,9ம் வீடுகள் மிக மிக வலிமையாக காணபடுவது, ஜாதகரின் சிறப்புகளை கால ஓட்டத்தில் இந்த பூஉலகம் புரிந்து செயலாற்றும், இறைஅருள் அதற்க்கான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக