பின்தொடர...

Sunday, November 12, 2017

யோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த இல்லற வாழ்வும் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பது முற்றிலும் உண்மையே, சாதாரண நிலையில் உள்ள ஓர் ஆண் மகனின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தருவது ஓர் யோகமிக்க வாழ்க்கை துணையே என்றால் அது மிகையில்லை, அதைப்போன்றே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையும் மண்ணோடு மண்ணாக மாற்றும் வல்லமையும் ஓர்  பெண்ணின் ஜாதகத்திற்க்கு உண்டு, எனவே ஆண் என்றாலும் பெண் என்றாலும் தனது வாழ்க்கை துணையை பொருத்தமற்று தேர்வு செய்தால் அவர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிடும், குறிப்பாக ( 2,5,7,8,12 ) ம் பாவகங்கள் வலிமை அற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்தாலோ, நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்தாலோ, தேர்வு செய்யும் அன்பரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்ற, நடைமுறை மற்றும் எதிர் வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம், ஏனெனில் வலிமை பெற்ற ஜாதகத்தை கொண்டுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்யம் அன்பர்களின் வாழ்க்கையும் யோகம் மிக்கதாக மாறிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம் 

ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்களில், 8,12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை யோகம் மிக்கதாக மாற்றும், ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை அற்ற 6,11 மற்றும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது திருமண தாமதத்ததை தந்த போதிலும், எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகிக்கு சிறந்த இல்லற வாழ்க்கையை அமைத்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை, சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறந்த இல்லற வாழ்க்கையை அமைத்து தரும் குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2,7ம் வீடுகள்  ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சந்தோசம் மிக்க குடும்ப வாழ்க்கையையும், கவுரவம் மற்றும் அந்தஸ்து மிக்க வாழ்க்கை துணையையும் தேடி தரும், ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவே அமைவது இல்லற வாழ்க்கையில் மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும்.

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும்   2,5,7,8,12ம் பாவகங்களில், 8,12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் சுபத்துவத்தை தரும் அம்சமாகும், ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு சாதகம் இன்றி இருப்பது திருமண வாழ்க்கையில் தாமத்ததை தருகின்றது, ஆனால் எதிர்வரும் குரு மற்றும் சனி திசைகள் இரண்டும் 1,2,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையே தருவதால் ஜாதகியின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் நல்ல புத்திரபாக்கியம் கிட்டும், 1,2,4,7,10ம் பாவக வழியில் இருந்து சுகபோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக அனுபவிக்கும் நிலையை தரும், ராகு திசையை தவிர, எதிர்வரும் திசைகளான குரு மற்றும் சனி திசைகள் ஜாதகிக்கு 2,7ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க ஓர் இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது ஜாதகத்தில் வரவேற்கத்தக்க ஓர் சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சதேகம் இல்லை.

 மேற்கண்ட ஜாதகியை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யம் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்றால் அது மிகையல்ல, வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ( வரன் அல்லது வது ) அவர்களது ஜாதகத்தில் அடிப்படையில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள்  2,5,7,8,12ம் பாவகங்கள் ஆகும், இந்த பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று, எதிர் வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் வகையிலான ஜாதகங்களை தமது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பர்களின் வாழ்க்கை மிகவும் யோகம் மிக்கதாக அமையும், தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது, இதற்க்கு நேர் மாறாக அமைந்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது இல்லற வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை அன்பர்களே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment