பின்தொடர...

Thursday, November 16, 2017

ஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் ! எதிர்காலத்தை பற்றியும், நிகழ்கால நடைமுறைகளை பற்றியும், தனது சுய முன்னேற்றம் பற்றியும் ஜாதகரின் கேள்விகள் நமது சிந்தனையை தூண்டும்விதமாக அமைவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயத்த நிலையில் ஜாதகர் இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது, " வாழ்த்துக்கள் " அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 1ம் பாதம்

ஜாதகரின் கேள்விகள் என்ன? அதற்க்கான விளக்கம் மற்றும் பதில்கள் என்ன? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் :

தங்களின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், தங்களது சுய ஜாதகத்திற்கு ஜீவன ஸ்தானமான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் சுய தொழில் செய்வதற்கான முழு தகுதியை பெற்று இருக்கின்ரீர்கள் என்பதை உறுதிபட சொல்ல இயலும், மேலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது தங்களின் சுய  தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும், குறிப்பக தங்களின் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் சார்ந்த தொழில் வழியில் இருந்து பரிபூர்ண வெற்றிகளை தடையின்றி பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம்,சுகம்,களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு கேந்திர பாவகங்களும் வலிமையுடன் இருப்பது தங்களை ஓர் தொழில் அதிபராக முன்னெடுத்து செல்லும் என்பதால் தங்கள் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை "ஜோதிடதீபம்" உறுதியாக பதிவு செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை, சனி புத்தி சொந்த தொழில் செய்ய சாதகம் இன்றி இருக்கின்றது, எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி சுய தொழில் செய்ய முழு வலிமையை தருகின்றது என்பதால், புதன் புத்தியில் தாங்கள்  சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.

தாங்கள் செய்யும் தொழில் நீடித்து நின்று விருத்தி பெரும் என்பதை தங்களின்  ஜீவன ஸ்தான வலிமையையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியின் வலிமையையும் தெளிவாக உறுதி செய்கிறது.

கேள்வி :

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,
என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் 7,10ம் வீடுகள் ஆகும், எனவே தாங்கள் FMCG சார்ந்த அணைத்தது தொழில்களும் சரியாக வரும், உணவகம், துணி கடை, வண்டி வாகன தொழில், பால் பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் நல்ல முன்னேற்றத்தை தரும் மேலும் தாங்கள் கூறியபடி டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங் தொழில்களும் நல்ல விருத்தியை தரும், மக்கள் தொடர்புள்ள அணைத்து தொழில்களும் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கையில் காசு தங்குவது சற்று சிரமம்தான் எனவே செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகரிப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் 2ம் வீடு வலிமை அற்று இருப்பது நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் அற்றவர் என்பதை தெளிவாக கூறுகிறது, கையில் இருக்கும் பணம் தங்களுக்கு வீண் விரையம்  ஆகும் என்பதால், வங்கியில் பணத்தை வைத்து கையாள்வதே தங்களின் தனம் சார்ந்த இன்னல்களுக்கு தீர்வாக அமையும், தங்கள் மன உறுதியுடன் சேமித்தால் நிச்சயம் சேமிப்பு தங்களை தேடி வரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்
பங்கு  மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

தங்களுக்கு 4,10ம் வீடுகள்  ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான யோகத்தை தரும் நிலையாகும், குறிப்பாக 4ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த வீடு மற்றும்  நிலபுலன்கள் வாங்கும் யோகம், வண்டி வாகன தொழில் வழியில் இருந்து வருமானம், நல்ல குணம், தாயார் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, சுய சம்பாத்தியம், நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகுதல், சிறந்த நிர்வாக திறமை மூலம் பல தொழில் நிர்வகிக்கும் வல்லமை, பெரிய சொத்துக்கள், அரசு கவுரவம், சமூகம் மற்றும் அரசியலில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து  நல்ல உத்தியோகம், வியாபர விருத்தி, செய்யும்  தொழில் வழியில் இருந்து முன்னேற்றம், கம்பீரமான நிர்வாக திறமை, சுய தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் பெரும் அமைப்பு, சிறந்த வாத திறமை மூலம் சாதகமான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புக்களை தரும், கவுரவம் குறையாத யோக  வாழ்க்கையை தரும், தங்களின் பரந்த மனப்பக்குவம் அனைவராலும் கவரப்பட்டு தொழில் ரீதியான நன்மைகளை தரும்,  ஜீவன ஸ்தானம்  என்பது சர நீர் தத்துவ ராசியில் அமைவதால், தங்கள் மனதில் என்ன நினைக்கிண்றீர்களோ அதுவே நடைமுறைக்கு வரும், எனவே தங்களின் எண்ணத்தின் வலிமையை அதிகரித்துக்கொள்வது  சகல சௌபாக்கியங்களையும்  தரும், நீர்த்துவம் சார்ந்த தொழில் வழியில் இருந்து தங்களுக்கு  அபரிவிதமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால், நீர்த்தத்துவம் சார்ந்த தொழில்களை சுவீகரித்து 100% விகித நன்மைகளை பெறுங்கள், வாழ்த்துக்கள்.

பங்கு வர்த்தக தொழில் தங்களை படுகுழியில் தள்ளிவிட்டுவிடும் என்பதால் அதன் சுவாசம் கூட படாமல் தாங்கள் நடந்துகொள்வது நல்லது, பங்கு வர்த்தக துறையில் வெற்றி பெறுவதற்கான பாவக வலிமை தங்களது ஜாதகத்தில் சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" தங்களை எச்சரிக்கை செய்கிறது.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சொந்தவீடு கட்ட எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி வழிவகை செய்யும், வடக்கு, தெற்கு சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டை நிர்ணயித்து சகல நலன்களையும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :

சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும்  இன்னல்களை ஏற்று அது சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்து நலம் பெறுங்கள் உதாரணமாக, உடன் பிறப்பு, குழந்தைகள், பித்ருக்கள், இளைய சகோதரம் என்ற வகையில் கர்மா வினை பாதிப்பை கழித்துக்கொள்வது நல்லது.

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் :

ராகு கேது முழு வீச்சில் சுபயோக பலன்களை 4,10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்குகிறது , சனி பெயர்ச்சி யாதொரு பலாபலன்களை தங்களுக்கு தற்போழுது  தரவில்லை என்பதே உண்மை நிலை.

கேள்வி :

தொழில் ஸ்தான வலிமையும், நான் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் ! வெளிநாட்டில் தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?

பதில் :

தொழில் ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பதும் சிறப்பாக சீரிய முறையில் படிப்படியாக  அமையும், தங்களுக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமையுடன் இருப்பது வெளிநாட்டில் தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது  மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை தாங்கள் தேர்வு செய்து வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றங்களை பெறலாம்.

கேள்வி :

கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா?

பதில் :

கூட்டு தொழில் வெளிநாடுகளில் செய்வது சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதும் தங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தையே வாரி வழங்கும்  என்பதால், சுய தொழில் செய்யவும், கூட்டு தொழில்  செய்யவும் தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது தங்களின் விருப்பம் எதுவோ ? அதை தேர்வு செய்து வெற்றி காணலாம்.

கேள்வி :

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டுல்லதா?

பதில் :

குடும்ப ஸ்தானம் மட்டும் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து  100% விகித சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும்.

கேள்வி :

சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவதால், லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை பெற முடியுமா?

பதில் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், நிச்சயம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் 3,5,9,11ம் பாவாக வழியில் இருந்து தங்களால் சுபயோக பலன்களை பெற இயலாது, எனவே மேற்கண்ட பாவக  பலனை ஏற்று நடத்தும் ராகு,சனி திசா புத்திகளில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது தங்களுக்கு நன்மையை தரும்.

கேள்வி :

சனி திசை  தொழில் முன்னேற்றமும் எப்படி அமையும் ?

பதில் :

சனி திசையில் சனி புத்தி மற்றும் ராகு புத்தியை தவிர மற்ற புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவதால், தங்களின் தொழில் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே அமையும், மேலும் தாங்கள் சனி திசையில் சனி புத்தி, ராகு  புத்தியில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல விதங்களில் நன்மையை  தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment