செவ்வாய், 14 நவம்பர், 2017

தொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்புகள் !

 
 
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் ஒருவர் தனது தொழிலை நிர்ணயம் செய்வது என்பது, ஜாதகர் தனது வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கான ஸ்திரமான அடித்தளம் என்றால் அது மிகையில், தமக்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகர் தமது வாழ்க்கையில் அதிக அளவிலான போராட்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளவதற்கான ஆயத்த பணி இதை அனுபவித்தவர்களுக்கு தெளிவாக புரியும், தமது ஜாதக வலிமைக்கு உகந்த தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது ஜாதகரின் உழைப்பு, அறிவு திறன், முன்னெற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவு அனைத்தும் ஒரு நேர்கோட்டில் இயங்கி தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை பரிபூர்ணமாக பெற வழிவகை செய்யும், மாறாக சுயஜாதக வலிமைக்கு சற்றும் பொருந்தாத தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது அடிப்படையில் நேர விரையம் என்பது அதிகரிக்கும், ஆர்வம் குறையும், உழைப்பின் தரம் குறையும், நம்பிக்கை அற்ற தன்மை  தொழில் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும், குறுகிய காலத்தில் பெறவேண்டிய நன்மைகளை ஜாதகர் நெடுங்காலம் காத்திருந்து சிறிய அளவில் அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் தொழில் வல்லமை " குடத்தில் இட்ட விளக்கு போல் பிரகாசம் இன்றி " அவதியுற நேரும், தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வது என்பது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அமைவதே ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும்.

சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை தடை செய்யும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை கேள்விக்குறியாக மாற்றும் ஜாதகருக்கு ஓர் நல்ல வேலை அல்லது தொழில் அமைவது என்பதே குதிரை கொம்பாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்வது  நல்லது பெரும்பாலான அன்பர்கள் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அற்று காணப்படுவதாலேயே சுய தொழில் முயற்சி செய்து பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் சந்திக்கின்றனர்.

ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் ஸ்தான அமைப்பில் இருந்து  ஜாதகருக்கு தொழில் முன்னேற்றங்களை நல்குகின்றதோ ? அதை போன்றே களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் கூட்டு தொழில் அமைப்பை நிர்ணயம் செய்கின்றது, பெரும்பாலும் 7ம் வீடு வலிமை அற்ற தன்மையில் அமைந்து கூட்டு தொழில் செய்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளம் எனலாம், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை அற்று இருக்கின்றது என்றால், எக்காரணத்தை கொண்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் கூட்டு தொழில் முயற்சியில் இறங்குவது என்பது சரியானது அல்ல இதை உதாசீன படுத்தினால் ஜாதகர் " புலிவாலை பிடித்த கதைதான் " குறிப்பாக 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஜாதகர் கூட்டு தொழில் செய்வது என்பது மடியில் கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், ஜாதகர் இதில் இருந்து மீண்டு வருவது என்பது மிக மிக சிரமமே, எனவே சுய தொழில் கூட்டு தொழில் நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.

 கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை கொண்டு ஜீவன ஸ்தான வலிமையை பற்றியும் , ஜாதகர் அதன் வழியில் இருந்து பெரும் தன்னிறைவான வருமான வாய்ப்புகளை பற்றியும் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம்2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது மிக வலிமையுடன் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது, ஓர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது என்பது ஜாதகருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஓர் இடத்தில் பணிபுரியவும், சுய தொழில் செய்யவும் முழு தகுதி உடையவர் என்பதை ஜீவன ஸ்தான வலிமையே உறுதிப்படுத்தும். 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது அதாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் கீழ்கண்டவாறு அமைகிறது.

1,3,6,7,9,12ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், சிறந்த மனநிலை, வளரும் சூழ்நிலையில் அதிர்ஷ்டம் தெளிந்த நல்லறிவு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மாறாத தன்மை, முழு முயற்சியுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுதல், சகல சௌபாக்கியம், சிறந்த வியாபார அறிவு, செய்யும் காரியங்களில் நேர்மை, தொழில் வழியில் சத்தியத்தை கடைபிடித்தல், மக்களின் நம்பிககையை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், 6ம் பாவக வழியில் இருந்து குறிகிய கால வருமான  வாய்ப்புகளை பெறுதல், எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைத்தால், நல்ல வேலைஆட்கள், வாங்கி உதவி, கேட்கும் இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவி என்றவையில் நன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் பொருளாதர உதவிகளை பெறுதல், கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைத்தால், மக்கள் செல்வாக்கு , பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் தனசேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் சொத்து மற்றும் முன்னோர்கள் சொத்துக்களை பெறுதல், நற்பெயர், ஸ்திரமான தொழில் முன்னேற்றம் நிறைவான வருமானம் என்ற வகையில் சிறப்பை தரும், 12ம் பாவக வழியில் இருந்து நன்றாக சேமிக்கும் வல்லமை, சிக்கன பேர்வாழி, லட்சியத்தின்  வழியில் பெரும் தனசேர்க்கையை பெரும் யோகம், நல்ல மனநிம்மதி திருப்தியான யோக வாழ்ககையை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன யோகம், சொத்து  சுக சேர்க்கை, வீடு மனை யோகம், அது சார்ந்த தொழில் வழியில் லாபம் மற்றும் சுய முயற்சியின் மூலம் பெரிய சொத்துக்களை பெரும் அமைப்பை தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல பொருளாதார முன்னேற்றத்தை சுக ஸ்தான வழியில் இருந்து தரும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் குறையாத தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் மற்றும் சிறந்த நிர்வாக திறமை, சமூக அந்தஸ்து, பல தொழில் செய்யும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8 பாகையும், புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகரத்தில் 22 பாகையும் கொண்டு இருப்பது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், ஜாதகர் உபய நெருப்பு மற்றும் சர மண் தத்துவ அமைப்பில் இருந்து தொழில் விருத்தியை பெறுவதை உறுதி செய்கிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சமயோசித புத்திசாலித்தனத்தை தரும், இது சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் சரியான நேரத்தில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் தொழில் ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக இதை கருதலாம், ஜாதகர் எது செய்தாலும் அதனால் ஏற்படும் நன்மைகளை ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் அனுபவிக்க சுய ஜாதகத்தில் லாபம் மற்றும் அதிஷ்டம் என்று அலைக்கும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இது வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க இயலாது, மேற்கண்ட ஜாதகருக்கு 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ஸ்தான யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகரின் உழைப்பும் யோகமும் மற்றவர்களால் சுவீகரிக்க படும் என்பது கவனிக்கத்தக்கது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும் நம்பிக்கையின் பெயரில் செய்யும் அதிக முதலீடுகள் கடுமையான நஷ்டங்களை ஏற்படுத்தும், தனது மேற்பார்வையின் கீழ் இல்லாத தொழில் வழியில் இருந்து நஷ்டங்களே உண்டாகும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மற்றவர்கள் வழியிலான நஷ்டங்கள் என சற்று பாதிப்பை தரக்கூடும்.

2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப செலவினங்களை அதிகரிக்கும், தொழில் வழியிலான ஆதரவு ஜாதகருக்கு குடும்பத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை, சில நேரங்களில் பணத்திற்க்காக பெரிய அளவிலான திண்டாட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், வாக்கு வன்மை எதிர்பாராத இன்னல்களை உருவாக்கும்.

மேற்கண்டவை சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகள் தீமைகள், ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுப யோக பலன்களை தருவது எப்பொழுது? அவயோக பலன்களை தருவது எப்பொழுது? என்று நிர்ணயம் செய்வது நவகிரகங்களின் திசா புத்திகளே, அதை உணர்ந்து ஜாதகர் செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகள் கைகூடி வரும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்றுநடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் நல்ல பலன்களையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் அவயோக பலன்களையும் தரும், தற்போழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம், வருமானம் மற்றும் தொழில் சார்ந்த அமைப்பில் இருந்து வீண் விரயங்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதகம் மிகுந்த வலிமையுடன் காணப்பட்டாலும், நடைபெறும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை பெற இயலாமல் போராடும் சூழ்நிலையே தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகர் சுய தொழில் அல்லது கூட்டு தொழில்  செய்ய முழு தகுதியை பெற்ற போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை சாதகம் இன்றி இருப்பது " கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த " கதையாவே உள்ளது, எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக