திங்கள், 10 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மிதுனம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .

மிதுன லக்கினம் :

மிதுன லக்கினத்திற்கு 6ல் அமர்ந்த சனிபகவான் விபரீத ராஜ யோக பலன்களை வாரி வழங்க இருக்கிறார், உடல் ரீதியான சில பிரச்சனைகளால் பாதிக்க பட்டு இருந்த அன்பர்களுக்கு தற்பொழுது அதில் இருந்து குணம் பெரும் யோகத்தை தருகிறார், சிறு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பெரிய தன வரவை பெரும் யோக காலமாக இந்த இரண்டரை வருட காலத்தை கருதலாம், மேலும் வெளிநாடுகளில் இருந்து திடீர் தனவரவை பெரும் யோகமும், புதிய பொருட்கள் வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், எதிர்பாராத புதிய உறவுகளின் ஆதரவு, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும்  மனமகிழ்வு மற்றும் பொருளாதார உதவிகள், புதிய தொழில் துவங்கும் யோகம், மக்கள் தொடர்புள்ள தொழில்களில் இருப்பவர்களுக்கு அபரிவிதமான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும்  யோக காலமாக மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி இருக்கும்  என்பதை மறுப்பதற்கு இல்லை.

மிதுன லக்கினத்திற்கு 6ம் பார்வையாக 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகளும் , முயற்சிகளும் எளிதில் வெற்றி பெரும் யோக காலம் இது, ஜாதகரின் உடல் நலம் மற்றும் மன நலம் மிகவும் சிறப்பாக இருக்கும், நீடித்த அதிர்ஷ்டத்தை தொடர்ந்து வழங்கிய வண்ணம் சனிபகவான் இருப்பார், ஜாதகரின் சுறுசுறுப்பான செயல்கள் யாவும் புதிய வாய்ப்புகளை  வாரி வழங்கும், மேஷம் சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்கள் யாவும் வெகு விரைவாக  குறுகிய காலத்தில் கிடைக்கும், ஜாதகரின் நம்பிக்கைகள் யாவும் அபரிவிதமான வெற்றியை பெரும் யோக காலம் இது, ஜாதகர் எந்த ஒரு   காரியத்திலும் மன உறுதியாக செயல்பட்டு பல சாதனைகளையும், அதிர்ஷ்டங்களையும், பெரும் யோக காலம் இதுவென்றால் அது மிகையில்.

மிதுனலக்கினத்திற்கு 7ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆகாத  மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு உடனடியாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவர், இதுவரை வருமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அன்பர்களுக்கு நிலையான நீடித்த வருமான வாய்ப்பை தொழில் மூலமாக வாரி வழங்குவார், ஜாதகரின் பேச்சு திறமையும், தீர்க்கமான வாதமும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தரும், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி பொங்கும், முதலீடு செய்த அமைப்பில் இருந்து எதிர்பாராத  தன வரவை பெறுவார்கள், வட்டி தொழில் மிகுந்த லாபத்தை தரும், ஜாதகரின் பண தேவைகள் யாவும் இனி வரும் காலங்களில் பூர்த்தியாகும், சிலருக்கு புதியதாக வீடு கட்டும் யோகம் அல்லது வாங்கும் யோகம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகமும் பல வகையான வருமான வாய்ப்புகளும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியான தன்னிறைவையும், மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையையும் வாரி வழங்கும்.

மிதுன லக்கினத்திற்கு 10ம் பார்வையாக 3ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆனா தம்பதியருக்கு உடனடியாக புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்குகிறார், தனது குலம் செழிக்க நல்ல வாரிசு அமையும், குழந்தை பிறந்த நேரம் அனைவருக்கும் யோக காலத்தை வாரி வழங்கும், தற்பொழுது நடைபெற்ற  சனிபெயர்ச்சி மிதுன லக்கினத்தாருக்கு ஏஜென்சி துறையில் புகழ்பெற்ற வெற்றி வாய்ப்ப்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல அந்தஸ்தை நிலையாக பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவாற்றலும் சிந்தனைகளும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்ப்பையும்,சமூக  கௌரவம் மரியாதையை பெரும் யோகத்தை தரும், புதிய பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், அரசியல் ரீதியான வெற்றிகள், மக்கள் ஆதரவை பெற்று தரும் யோக காலமாக இதை  கருதலாம்.

மிதுன இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 9 நவம்பர், 2014

எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் !



வணக்கம் அய்யா !

ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி, பல ஜோதிடர்கள்  புத்தகம் எழுதியுள்ளனர். எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள், பற்றி தங்களின் கருத்து என்ன ?


வணக்கம் அன்பரே !

அடிப்படையில் ஜோதிடதீபம் தங்களுக்கு ஒரு சிறு விளக்கத்தை தர விரும்புகிறது, பொதுவாக பாரம்பரிய ரீதியாக ஜாதக பலன் காணும் ஜோதிடர்கள் அனைவரும், ராசிகளுக்கு கோட்சார கிரகங்களை தொடர்பு படுத்தி பலன் சொல்வார்கள் ( குறிப்பாக சனி, குரு, ராகு கேது ) இது எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம், பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்திற்கு பலன் காண வேண்டுமெனில் அந்த ஜாதகரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடத்தின் அடிப்படையில் கணிக்தம் செய்து ஜாதகரின் லக்கினம் என்ன? என்பது முதலில் நமக்கு தெரிய வேண்டும், இரண்டாவதாக ஜாதகருக்கு லக்கினத்தின் அடிப்படையில் 12 பாவக நிலைகளை பற்றிய தெளிவு வேண்டும், மூன்றாவதாக தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் 12 பாவகங்களில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் எவ்வித பலன்களை தருகிறது? என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நாம் சரியான ஜாதக பலன்களை தெளிவாக மற்றும் துல்லியமாக கணிதம் செய்து சொல்ல இயலும் அன்பரே!

சந்திரன் நின்ற அமைப்பை வைத்து ( அதாவது ராசி பலன் ) ஒரு ஜாதகருக்கு பலன் சொல்வது என்பது ஏற்புடையதாக இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதவில்லை, ஏனெனில் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற விஷயம் தெரியாத பொழுதே மேற்கண்ட ( ராசிகளுக்கு சனி பெயர்ச்சி பலன் காணும் ) குழப்பம் ஏற்படும், மேலும் ராசிகளுக்கு கோட்சார பலன் காணும் முறை வெகு காலமாக இருந்து வருகிறது, அந்த காலத்தில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஜாதகம் இருந்தது, பல நபர்களுக்கு பிறந்த நேரம் என்ற ஒரு விஷயமே தெரியாது, ஏன் சிலருக்கு பிறந்த தேதி என்ன ? என்பது கூட தெரியாது, இதை தங்களின் பெற்றோரை விசாரித்தலே தெரிந்துவிடும்.

எனவே ஜாதகம் இல்லாத நபர்கள் ஜோதிடரிடம், தமக்கு இனி என்ன பலன்கள் நடைபெறும் என்று கேள்வியை முன்வைக்கும் பொழுது, ஜோதிடர் அவரின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு நட்சத்திரம் அறிந்து அதற்க்கு உண்டான ராசியை தெரிந்து, தற்பொழுது நடைமுறையில் உள்ள கோட்சார கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப ராசி பலன்களை சொன்னார்கள், இந்த வழக்கம் அப்படியே தொடர்ந்தது, தற்பொழுதும் ராசி பலன் காணும் முறை  நடைமுறையில் இருப்பதிற்கு இதுவே காரணமாக இருக்கும், ஆக ஒரு ஜாதகருக்கு பிறந்த நேரம் தெரியாமல், அவரது ஜாதகம் தெரியாமல் நட்சத்திரம் மற்றும் ராசி அமைப்பை வைத்து பலன் அறிந்துகொண்ட முறை, தற்பொழுது உள்ள நவீன உலகத்திற்கு எப்படி பொருந்தும்.

அந்த காலங்களில் நிலத்தில் உளவு செய்ய கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையை நாடினர், ஆனால் தற்பொழுது நிலத்தில் உளவு செய்ய டிராக்டர் போன்ற அதி நவீன கருவிகளை பயன்படுத்துகிறோம், அதெல்லாம் முடியாது  நான் கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையைதான் பயன்படுத்துவேன் என்றா சொல்கிறோம், இதை போன்றுதான் இருக்கிறது ராசி பலன் காணும் முறையும், தற்பொழுது ஒருவரின் பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்துகொள்ள நமக்கு வாய்ப்புகள் அதிகம், இதை கொண்டு ஒருவரின் ஜாதகத்தை மிக துல்லியமாக எடுக்க இயலும், ஒருவேளை பிறந்த நேரத்தை தவறாக சொல்லி இருந்தாலும் கூட நமது ஜாதக கணித முறை கொண்டு குறிப்பிட்ட ஜாதகருக்கு சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக எடுக்க இயலும் அன்பர்களே !

ஆக சனி பெயர்சி பலன், குரு பெயர்சி பலன், ராகு கேது பெயர்சி பலன் என்பதெல்லாம் ஒரு ஜாதகரின் லக்கினம் என்னவென்பது தெரியாத நிலையிலும், தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலும், அப்படி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன் என்ன ? என்பது தெரியாத பொழுது சரியாக இருக்கும், துல்லியமாக ஜாதக கணிதம் செய்யும் ஜோதிடர்களுக்கு இந்த மேற்கண்ட குழப்பம் வர வாய்ப்பே இல்லை என்பதால், ஒருவரின் சுய ஜாதகத்திற்கு  லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும்  என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் நிதர்சனமாக வலியுறுத்துகிறது.

மேலும் கோட்சார கிரகங்களுக்கு  பரிகாரம் என்ற பெயரில் பரிகார திரு தளங்களில் சிலர் செய்யும் தவறுகளை இங்கே ஜோதிடதீபம் சுட்டிகாட்ட விரும்புகிறது, திரு தளங்களுக்கு செல்லும் அன்பர்கள் அங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி தமது ஆடைகளை அந்த தீர்ததிலேயே விட்டு சென்றுவிடுகின்றனர் , இது சரியானதல்ல என்று ஜோதிடதீபம் கருதுகிறது, திருநள்ளாறு திருத்தலத்தில் நள மகராஜா தனது சொத்து சுகம், வீடு, மக்கள் அரசு பதவி அனைத்தையும் இழந்து, அங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடும் பொழுது அவரின் அரைஞான் கயிறும் அறுந்து, ஆடையும் இழந்து பிறப்பில் குழந்தையின்  தன்மையை அடைந்த பொழுது, சனி பகவானின் அருட்பார்வை  மூலம் சகல நன்மைகளும் பெற்றதாக புராணங்கள் எடுத்துரைக்கிறது என்பதால், இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைத்து தீர்த்தத்தில் தமது ஆடைகளை விட்டு செல்கின்றனர், கோவில் வழிபாட்டில் கோவிலை தூய்மையாக  வைத்திருப்பதே சரியான பரிகாரமாக இருக்க கூடும் அன்பர்களே! இதை போன்று கோவிலை அசுத்தம் செய்வது பாவ வினைகளை அதிகரிக்குமோ தவிர , பரிகாரமாக அமையாது என்பதால் இதை கருத்தில் கொண்டு கோவிலை பரிசுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.

மேலும் எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் என்பது சுய ஜாதகத்தில்  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவக அமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை செய்யும், ராசிக்கு பலன் காணும் பொழுது நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக எடுத்து உரைக்க  இயலாது என்பதுமட்டும் உண்மை என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 8 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - ரிஷபம்




சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .

ரிஷப லக்கினம் :

ரிஷப லக்கினத்திற்கு 7ல் அமர்ந்த நிலையில் சனிபகவான் ஜாதகருக்கு திடீர் என திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவார், சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு சனி பெயர்ச்சி ஆனா சில நாட்களில் உடனடியாக கிடைக்கும், இதன் மூலம் ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கை அமையும், தொழில் ரீதியான வெற்றிகள் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து கிடைக்க கூடும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும், தொழில் விருத்தி மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஆண்கள் என்றால் பெண்கள் வழியில் இருந்தும், பெண்கள் என்றால் ஆண்கள் வழியில் இருந்தும், வருமான வாய்ப்புகள் அமையும் யோகம் உண்டாகும், ஜாதகரின் மன நிலையில் சிறந்த மாற்றங்களும், மன மகிழ்வுக்கு உண்டான புதிய சூழ்நிலைகளும் இந்த சனிபெயர்சி காலத்தில் நிச்சயம்  உருவாகும், ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள் 7ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை அனுபவிக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது என்று ஜோதிடதீபம் கட்டியம்  கூறுகிறது வாழ்த்துகள்.

ரிஷப லக்கினத்திற்கு 6ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான் ஜாதகருக்கு முதலீடு செய்த அமைப்பில் இருந்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டிதருவார், குறிப்பாக கட்டுமான துறை அமைப்பில் இருந்தும், மருத்துவ துறை அமைப்பில் இருந்தும் மிகப்பெரிய லாபம் கிடைக்க பெரும், இந்த இரண்டு துறையை சார்ந்தவர்களுக்கு இனிவரும் இரண்டரை வரும் மிகவும் சிறப்பாக இருக்கும், பொதுவாக 12ம் பாவகம் முதலீடு மற்றும் ஆன்மீக வெற்றி என்ற அமைப்பில்  பலன் தரும் என்பதால் ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் இதுவரை நல்ல தூக்கம் இல்லாமல் தவித்து வந்த ரிஷப லக்கினத்தாருக்கு நல்ல உறக்கமும், நிம்மதியான வாழ்க்கையும் கிட்டும், இதன்மூலம் ஜாதகர் எவ்வித குழப்பமும் இல்லாத மன நிலையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பை தரும், நெடுநாள் கனவுகள் ரிஷப இலக்கின ஜாதகர்களுக்கு பலிதம் பெரும் காலம் இதுவென்பதால், இவர்களின் செயல்பாடுகள்  இனிவரும் காலங்களில் புதிய உத்வேகத்துடன் இருக்கும், சிறந்த வெற்றிகளை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

 ரிஷப லக்கினத்திற்கு 7ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கும் சனிபகவான், நேற்று வரை வருமானத்திற்காக போராடி கொண்டிருந்த நபர்களுக்கு, இன்றுமுதல்  ஸ்திரமான வருமானத்தை பெரும் யோகத்தை தருவார், ஏதாவது ஒரு வகையில் ஜாதகர்களுக்கு  வருமானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், செய்யும் தொழில் ஸ்திர தன்மையுடன் செயல்பட ஆரம்பிக்கும், அதன் வழியில் இருந்து நல்ல வருமானம் கிடைக்க ஆராம்பிக்கும், ஜாதகரின் பேச்சு திறமை பலர் மெச்சும் வண்ணம் அமையும், செய்யும் தொழில் மேன்மை தீர்க்கமான வாதத்திறமை ஆகியவை ஜாதகருக்கு நிலையான வாழ்க்கையை அமைத்து தரும், இதுவரை திருமணம் ஆகாத  அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் சிறப்பாக திருமணம் நடக்கும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நிச்சயம் அமையும் என்பதால் உடனடியாக ரிஷப இலக்கின அன்பர்கள் திருமணதிற்கு உண்டான முயற்சிகளில் இறங்கலாம், இனி வரும் காலம் சனிபகவான் ரிஷப லக்கினத்தாருக்கு சனிபெருக்கமாக  யோகங்களை வாரி வழங்குவார், வாழ்த்துகள் .

ரிஷப லக்கினத்திற்கு 10ம் பார்வையாக 4ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான் இறை அருளின் அனுகிரகத்தல் சகல விதமான சுக வாழ்க்கையையும் அனுபவிக்கும் வல்லமையை தருகிறார், ஜாதகரின் குல தெய்வத்தின் அருளால் தனது  அறிவாற்றலின் தன்மையினாலும், சமயோசிதான புத்திசாலிதனத்தால் சாதிக்க முடியாது என்று நினைத்த நிகழ்வுகளை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், புதியதாக வீடு வாங்கும் யோகம் அல்லது கட்டும் யோகத்தை தரும், புதிய வண்டி வாகனம், சொத்து, புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு என ஜாதகருக்கு யோக பலன்களை சனிபகவான் தொடர்ந்து வழங்கி வண்ணமே இருப்பார் என்பதால் ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள், இனிவரும் நல்ல வாய்ப்புகளை  சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து கொண்டு இருப்பார்கள் என்பது ஒரு நல்ல விஷயம், உதவி என்று எங்கு சென்றாலும்  ஜாதகருக்கு நிச்சயம் நினைத்தததை விட மிக அதிகமாகவே உதவிகள் கிடைக்கும், இங்கே சனிபகவான் ஜாதகர்களுக்கு சோம்பேறி தனத்தை தருவதால் சற்றே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.

ரிஷப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,4,7,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,4,7,12ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 7 நவம்பர், 2014

திருமண தடையும், நடைபெறும் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைமுறையில் இருக்கும் திசை பாதக ஸ்தான பலன்களை வழங்கினால், அவரது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் வழியில் இருந்து கூட எவ்வித நன்மையையும் பெற இயலாது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் அல்ல, நடைமுறையில் வரும் திசாபுத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சிறந்த நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், பலரது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும், ஆனால் நடைமுறையில் இருக்கும் திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், இதன் காரணமாக ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் பெற இயலாத சூழ்நிலையில் ஜீவனம் செய்யும் தன்மையை பெற்று இருப்பார், இந்த அமைப்பை நாம் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,5ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு 90% யோக பலன்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும்.

ஜாதகத்தில் வலிமை இழந்த பாவகங்கள் :

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட  பாவக வழியில் இருந்து 70% இன்னல்களையும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 200% இன்னல்களை ஸ்திரமாக வாரி வழங்கும் .

ஜாதகிக்கு கடக லக்கினம், தற்பொழுது நடைபெறும் குரு திசை, குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்து ( லக்கினம் கடகத்தில் 111:07:10 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 139:46:42 பாகையில் முடிவடைகிறது, குரு பகவான் சிம்மத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட 135:29:40 பாகையில் அமர்ந்திருக்கிறார் ) மேற்கண்ட அமைப்பை  பார்க்கு அனைத்து பாரம்பரிய ஜோதிடர்களும், குரு பகவான் அமர்ந்து இருக்கும் நிலையை வைத்து குரு திசை யோக பலன்களை தருவதாக சொல்வார்கள், ஆனால் உண்மையில் ஜாதகிக்கு குரு லக்கினத்தில் அமர்ந்தாலும், தான் ஏற்று நடத்தும் பாவகம், பாதக ஸ்தானமாக இருப்பதால் ஜாதகி குரு திசையில் எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க வில்லை, மேலும் ஜாதகியில் பாதக ஸ்தானம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2 மற்றும் 3ம் வீடாக வருவது ஜாதகிக்கு மண் தத்துவ அமைப்பில் இருந்து சிறு உடல் நல குறைவினையும், 3ம் வீடு அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் பெரிய தோல்வியை வாரி வழங்கியது .

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் அமர்ந்து இருக்கும் இடத்தின் பலனை  தனது திசையில் தரும் என்று  கருதி பலன் காண்பது உண்மைக்கு மாறான பலன்களை ஜாதகருக்கு சொல்ல வேண்டிய சூழ்நிலையை தந்துவிடும் , ஒரு கிரகம் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை உணர்ந்து பலன் சொன்னால் மட்டுமே, அது சரியான ஜாதக கணித பலன்களாக  இருக்கும் , இந்த ஜாதகிக்கு குரு திசை முழுவதும் ( 03/07/2009 முதல் 03/07/2025 வரை ) பாதக ஸ்தான பலனை தருவதால் ஜாதகியின் வாழ்க்கை கல்வி,வேலை,திருமணம் எனும் அனைத்து  விஷயங்களும் சரியாக அமையாமல், தனது வீட்டில் சூழ்நிலை கைதியாக முடங்கும்  தன்மையை தருகிறது, ஜாதகியின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாமல் மனோ ரீதியான போராட்டங்களையும், மன அழுத்தத்துடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது , இதைவிட கொடுமையானது இதற்க்கு முன் நடந்த  ராகு திசையும் ( ஜாதகி ஜெனனம் முதல் ) பாதக ஸ்தான பலனை தந்ததே  அதிக வருத்தத்திற்கு உரியாது , 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் செயல்படாமல் துரதிர்ஷ்டம் பலனை தந்து ஜாதகியின் வாழ்க்கையில் அதிக இன்னல்களுக்கு ஆளாக்கியது என்றே சொல்லலாம்.

ஜாதகிக்கு தற்பொழுது  திருமணம் செய்வதற்காக கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்துகொண்டு இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள், ஜாதகிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருந்த போதிலும் தற்பொழுது  நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று   நடத்துவதால் ஜாதகிக்கு வரும் வரங்கள் யாவும் தட்டி போகிறது, அல்லது இவர்கள் தட்டி கழிக்கிறார்கள், இதனால் ஜாதகிக்கு அவரின் பெற்றோர்கள் எடுக்கும்  திருமண முயற்ச்சிகள் யாவும் இறுதியில் தோல்வி என்ற நிலையையே தருகிறது, ஜாதகி பாதக ஸ்தான வழியில் இருந்து எவ்வித அவயோக பலன்களை  எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை இனி சிந்திப்போம்  அன்பர்களே !

ஜாதகியின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பகிர்ந்து நிற்பதால் , ரிஷப ராசி அமைப்பில் இருந்து ஸ்திர மண்  தத்துவ அமைப்பிலும், மிதுன ராசி அமைப்பில் இருந்து உபய காற்று தத்துவ அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , அதாவது ஜாதகிக்கு ரிஷப அமைப்பில் இருந்து சிறந்த குடும்பம் அமைவதற்கு உண்டான வாய்ப்பை குறைக்கிறது, கல்வியில் தடை, வருமான  வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலை, மற்றவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை, மற்றவரை கடுமையாக விமர்சித்தல் போன்ற செய்கைகளால் ஜாதகியின் நர்ப்பெயர் வெகுவாக பாதிக்க படுகிறது, மிதுன அமைப்பில் இருந்து  ஜாதகியின் அறிவு திறன் வெகுவாக பாதிக்க படுகிறது, எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக ஆராயாமல் முட்டாள் தனமான செய்கையினால் , தனக்கு வரும் நல்ல வாய்ப்பினை தானே உதறித்தள்ளும்  தன்மையை இந்த அமைப்பு தருகிறது.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 8,11ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களுக்கு  மிகவும் நல்ல நிலையில் வலுவாகவே இருந்த போதிலும், ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசையும் சரி, இதற்க்கு முன் நடந்த ராகு திசையும் சரி ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் பாதக ஸ்தான பலனை மட்டுமே அனுபவிக்கும் தன்மையை தருகிறது, எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில்  பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டும் நன்மையை தர வாய்ப்பில்லை, நடைமுறையில் வரும் திசை புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக பலன்களும், நன்மைகளும் நடைமுறைக்கு வரும், இதற்க்கு மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்களும், நடைபெறும் திசா புத்திகள் அமையும் பொழுது, ஜாதகர் யோக வாழ்க்கையை பற்றி கற்பனையில் மட்டுமே வாழ இயலும், நடைமுறையில் எவ்வித யோக பலன்களும் வர வாய்ப்பில் என்பது முற்றிலும் உண்மை.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 6 நவம்பர், 2014

"குரு பார்க்க கோடி நன்மை" திரிகோண வீடுகளுக்கு குரு பகவான் வழங்கும் யோக பலன்கள் !



பிரகஸ்பதி என்று தேவர்களால் அலைக்கபெரும் ராஜ கிரகமான குரு பகவான், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார், பொதுவாக ஜோதிடர்கள் குரு பகவானை பற்றி சிலாகித்து பேசுவது அவரின் பார்வை பலன்களை பற்றியதாகவே இருக்கும், குறிப்பாக " குரு பார்க்க கோடி நன்மை " என்ற வாசகம் அறியாத ஜோதிட ஆர்வலர்கள் இல்லை எனலாம், இந்த ஒரு வார்த்தையிலேயே குரு பகவான் பார்வை தன்மையின் வலிமையை உணரலாம் அன்பர்களே!

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5,7,9ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் குரு பகவான் எந்த நிலையில் ( அதாவது பாவகத்தில் ) அமர்கிறார் என்பதை வைத்தே குரு பார்வையின் தன்மையை நிர்ணயம் செய்ய வேண்டும், குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ? அல்லது தீமை நடைபெறுமா ? என்று நிர்ணயம் செய்வது அவசியம், பொதுவாக பல ஜோதிடர்கள் குரு பார்வை நன்மை மட்டுமே வழங்கும் என்று சொல்வதுண்டு, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் குரு பகவான் 1,3,5,9,11ம் பாவகங்களில் அமரும் பொழுது அந்த ஜாதகர் மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த பாவக  வழியில் இருந்தும், குரு பகவானின் பார்வை பெரும் பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களையே பெறுவார்கள், இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் இதை தவிர்த்து வேறு பாவகங்களில் ( 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில்) அமரும் பொழுது ஜாதகருக்கு அமர்ந்த நிலையிலும் சரி, கோட்சார நிலையிலும் சரி ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் பாவக அடிப்படையில் நன்மையை மட்டுமே செய்வார் என்ற கருத்து நிச்சயம் தவறும் வாய்ப்பு உள்ளது.

 குரு பார்வை என்பது சுய ஜாதகத்தில் 1,3,5,9,11ம் வீடுகளில் அமர்ந்து, 1,3,5,9,11ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும், மாறாக வேறு பாவகங்களில் அமரும் பொழுது முரண்பட்ட பலன்களையே தருகிறது என்பது, 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில் அமர்ந்த ஜாதகரை பார்த்தல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் மேலும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான் நிச்சயம் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களுக்கு நன்மையை செய்ய வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி அன்பர்களே !

குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு கோண வீடுகளாக ( 1,5.9 ) அமைந்து அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 100% நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் " குரு பார்க்க கோடி நன்மை " எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் 100% பொருத்தமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து  மேஷம் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் உடல் வலிமை மனோ வலிமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு ஜாதகர் நல்ல முன்  உதாரணமாக இருப்பார், சர நெரப்பு தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் பலர் மெச்சும் வண்ணம் அமைந்திருக்கும் குறிப்பாக, ஜாதகர் நல்ல மேலாண்மை திறனை பெற்று இருப்பார், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் தன்மையையும், சுய கட்டுபாடுடன்  கூடிய ஒழுக்க சீலராக காணப்படுவார், ஜாதகர் தான் நினைக்கும்  செயல்களை யாவும் முடிக்கும் வல்லமையை பெற்று இருப்பார், குறிப்பாக ஜாதகரின் பாதுகாப்பில் அனைவரும் நலமாக இருக்கும் யோகத்தை தரும், ராணுவம், காவல் துறை, நீதி துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மைய தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்று இருக்கும், அதிகார தோரணையும் அடக்கியாளும் யோகமும் பெற்றவர்கள், தனது செயல்களில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் மதிப்பு மிக்க மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

சிம்மத்தில்  குரு பகவான் அமர்ந்து  சிம்மம்  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும், பல ஆன்மீக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், மனிதாபிமானம் அற்ற சமுதாயத்தை மற்றும் தன்மையையும், உலகுக்கு சமாதானத்தை எற்ப்படுத்து யோகமும் பெற்றவர்கள், மருத்துவ துறை, ஆன்மீகம், மன நலம், ஜீவ காருண்யா யோகம் போன்றவற்றில் வெற்றி பெரும் அன்பர்கள், இவர்களின் அறிவு திறனும் நல்லெண்ண செயல்பாடுகளும் பூஉலகில் சாமாதான தூதுவர் என்ற நற்ப்பெயரை பெற்று தரும், இந்த ராசி ஸ்திர ராசி அமைப்பில் வருவதால் ஜாதகர் இருள் அடைந்த உலகில்  அருள் விளக்கேற்றும் சிறந்த ஆன்மீக வாதியாகவும், இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொதுநல புரட்சியாளனாகவும், உலகத்தை அன்பின் வழியில் நடத்தி செல்லும் நல்ல மக்கள் நல  விரும்பியாவும் தனது அறிவின் வழியில் ஜாதகரை பிரகாசிக்க செய்யும்.

தனுசுவில்  குரு பகவான் அமர்ந்து  தனுசு  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் எண்ணங்களின் தன்மை உலகில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், ஜாதகர்  ஒரு புதுமை விரும்பியாகவும், சமூகத்திலும் மக்களின் மனதில் புதிய சிந்தனைகளை புகுத்தும் வல்லமையும், மக்கள் அறிவின் வழியில் செயல்படும் தன்மையை பெற தேவையான கல்வியில் அனைத்து நிலைகளிலும் சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்கள், இவர்களின் சிந்தனை  எண்ணம் யாவும் இவர்கள் மறைந்த போதிலும் உலகில் நடைமுறையில் இருக்கும், மக்கள் அனைவருக்கும் வற்றாத செல்வத்தை தரும் காமதேனுவை போல் நீடித்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும், ஒருவருக்கு ஏற்ப்படும் சந்தேகம் எதுவென்றாலும் இவர்களிடம் நிச்சயம்  சரியான  பதில் இருக்கும் என்பதால், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிக்கும் அமுத சுரபி என்று இவர்களை வர்ணிக்கலாம், மேலும் இந்த ராசி உபய நெருப்பு தத்துவ அமைப்பில் யோகங்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்கும்.

இதை போன்றே ஒருவரின் சுய ஜாதகத்தில் கோட்சார அமைப்பில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சில எதிர்பாராத யோக அமைப்புகளை பெற வைப்பது 1,5,9ம் பாவக வலிமை பெற்ற அமைப்பின் தன்மையே என்றால், அது மிகையாகாது. குருபகவான் குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் உயிர்களை உய்விக்கும் தன்மை கொண்ட நெருப்பு தத்துவ அமைப்பில் சரம்,ஸ்திரம்,உபயம் என்ற வழியில் ஜீவன்களுக்கு நன்மைகளையும், யோகங்களையும் ராஜ கிரகமான குரு பகவானின் அமர்ந்த, பார்த்த அமைப்பில் இருந்து வாரி வழங்குகிறது, மேலும் மற்ற பாவகங்களில் குரு பகவான் வழங்கும் நன்மையை கருத்தில் எடுத்து கொள்ளும் பொழுது, மேற்கண்ட  1,5,9ம் பாவகங்களுக்கும், மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகளில் 100 மடங்கு அதிகமாக செயல்படுவதை இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் யோக வாழ்க்கையை  வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 4 நவம்பர், 2014

சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்களும்!


ஜாதக பொது பலன்கள் 

இன்றைய பதிவில் நமது வாசகரின் சுய ஜாதக ரீதியாக 12 பாவகங்களின் வலிமையை பற்றியும், தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாவக வழி பலன்களை பற்றியும், அந்த பாவகங்களுக்கு கேட்சார கிரகங்கள் தரும், யோக அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில், நாம் மிக தெளிவாக இந்த பதிவில் காண்போம் அன்பர்களே !

நமது வாசகரின் ஜாதக நிலை :


ஜாதகரின் லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

( தனுசு  ராசியில் 254:28:19 பாகையில் ஆரம்பித்து  மகர ராசியில் 284:37:29 பாகையில் முடிவடைகிறது )

லக்கினம் ஆரம்பிக்கு பாகையையும், முடிவடையும் பாகையையும் இங்கு ஏன் ஜோதிடதீபம் குறிப்பிடுகிறது என்றால், நவ கிரகங்கள் இவரது ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்து  இருக்கின்றனர் என்ற தெளிவு பெறவே, நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே ஜாதகருக்கு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இல்லை எனில் குத்து மதிப்பாக ராசி கட்டத்தை பார்த்து நவகிரகங்கள் இந்த பாவகத்தில் தான் உள்ளது என்று தவறாக நிர்ணயம் செய்து, ஜாதகருக்கு முரண்பட்ட பலன்களை தெரிவிக்க வேண்டி வரும், உதாரணமாக இவரது ஜாதகத்தில் ராகு கேது எனும் சாய கிரகங்கள் மேலோட்டமாக காணும் பொழுது லக்கினம் மற்றும் 7ம் பாவகத்தில் இருப்பதை போல் தோன்றும், இதை பார்க்கும் பல ஜோதிடர்கள் உடனடியாக ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் எனவும், ( ராகு கேது கிரகங்களுக்குள் அனைத்து கிரகமும் அடக்கம் என்பதால்),  ராகு கேது ஜாதகம் எனவும் முடிவு செய்து விடுவார்கள்.

ஆனால் ஜாதகரின் லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது ராகு மிதுன ராசியில் உள்ள 6ம் பாவகத்திலும், கேது தனுசு ராசியில் உள்ள 12ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது புலனாகும், அப்படி அமரும் ராகு 6ம் பாவகத்திர்க்கு 30% தீமையையும், கேது 12ம் பாவகத்திர்க்கு 30% தீமையையும் தருகிறார்கள் என்பது உறுதியாகிறது, மேலும் பாவக அமைப்பில் மற்ற கிரகங்கள் 7ம் எந்த எந்த பாவகங்களில் அமர்ந்து இருக்கின்றனர் என்பதை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

சந்திரனும் புதனும் கன்னி ராசியில் உள்ள 9ம் பாவகத்திலும், சூரியன்,சுக்கிரன், கிரகங்கள் கன்னி ராசியில் உள்ள 10ம் பாவகத்திலும், சனி துலாம் ராசியில் உள்ள பத்தாம் பாவகத்திலும், லக்கினாதிபதி ஆனா குரு துலாம் ராசியில் 11ம் பாவகத்திலும், செவ்வாய் விருச்சிக ராசியில்  12ம் பாவகத்திலும், பாவக முறையே அமர்ந்து இருப்பது 12 பாவகங்களும் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக வைத்து காணும் பொழுது மிக தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் அன்பர்களே !

இனி ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜாதகத்தில் வலிமை பெற்று நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 65% வலிமையுடனும்,

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 85% வலிமையுடனும்,


6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 50% வலிமையுடனும்,

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% வலிமையுடனும், மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

ஜாதகத்தில் வலிமை அற்று பாதிக்கபட்டு இருக்கும் பாவகங்கள் :

இவரது ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 50% வலிமையற்று இருப்பது மட்டுமே குறையாக காணப்படுகிறது, இருப்பினும் ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும்.


இனி 12 பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் பலன்களை பற்றி பார்ப்போம் அன்பர்களே !

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து கல்வியில் வெற்றி, மண் மனை வண்டி வாகன யோகம், தாய் வழியில் இருந்து சொத்து கிடைத்தல், ஜாதகரின் நுண்ணறிவு மூலம் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளும் வாய்ப்பு, அறிய கலைகளில் அதிக ஆர்வத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுய முயற்சியால், மண் மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம், பின் யோகம், மகிழ்சியான வாழ்க்கை, பொதுமக்கள் பெண்கள் ஆதரவு, போட்டி பந்தையங்களில் வெற்றி, பேப்பர், எழுத்து புத்தகம் மூலம் அபரிவிதமான வருமானம், கால் நடைகள் வீட்டு மிருகங்கள் மூலம் நல்ல லாபம், போக்குவரத்து ஏஜென்சி மூலம் சிறப்பான வருமானம், விவசாயத்தில் நல்ல லாபம், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் நல்ல லாபம், என்ற வகையில் நன்மையை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மண் மனை வண்டிவாகன யோகம் எளிதில் கிட்டும் அமைப்பு, சொந்த ஊரில் இருப்பதால் நல்ல வெற்றி வாய்ப்பு, வீடு நிலம் சார்ந்த வியாபாரங்கள் செய்வதால் நல்ல யோகம், அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு, கட்டுமான துறை சார்ந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்வதால் குறுகிய கால முன்னேற்றத்தை தரும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றி வாய்ப்பு உண்டாகும், பொருளாதார ரீதியான தன்னிறைவு ஏற்ப்படும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் , நண்பர்கள் உதவி, செல்வ செழிப்பு மற்றும் மருத்துவ உபகரணம், மருந்து, ரசாயன உரம், இயற்க்கை உரம் போன்ற விவசாய பொருட்களை வியாபாரம் செய்வதால் அபரிவிதமான வருமானம் கிட்டும், மேலும் உணவு உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிட்டும், 5ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் யோகம், பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம், தனது புத்திசாலிதனத்தால் ஆதாயம், எப்போதும் மகிழ்ச்சி, குழந்தை மனைவி குடும்பத்தாருடன் நல்லுறவு, தனது பூர்வீகத்தில் இருப்பதால் மட்டுமே யோக வாழ்க்கையை பெரும் தன்மையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீடித்த அதிர்ஷ்டம், அனைத்திலும் லாபம், நல்ல குணம் என்ற வகையில் ஜாதகருக்கு நன்மையை தரும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணங்களால் நல்ல லாபம், சமாதான முறையில் வெற்றி, எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை, உடல் ஆரோக்கியம், புகழ் பரிசு பெரும் யோகத்தை தரும்,9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், பயணங்களில் விருப்பம், பெரிய மனிதர்கள், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, திடீரென சூழ்நிலை மாறும் அமைப்பு என யோக பலன்களையும், 12ம் பாவக வழியில் இருந்து, வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், உல்லாசமான வாழ்க்கை முறை, தொழில் மற்றும் இருப்பிடத்தை அடிக்கடி மற்றும் அமைப்பை தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், திருமணதிற்கு பிறகு வரும் அபரிவிதமான வெற்றி வாய்ப்புகள், நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணை, அரசியலிலும், வியாபாரத்திலும் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகள், கூட்டு தொழில் செய்வதால் வரும் அபரிவிதமான யோக வாழ்க்கை, சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, சமூகத்தில் மதிப்பு மரியாதை, கௌரவம் அந்தஸ்து என்ற வகையில் மிக பெரிய யோகத்தை தரும், 10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், கம்பீரமான வாழ்க்கை, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் மன அமைப்பு, வேலைக்கு செல்வதை விட ஜாதகர் தொழில் செய்வதாலேயே மிகப்பெரிய முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தரும்.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூரண ஆயுளை தரும், இருப்பினும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை தரும், துயரம், விபத்து, வியாதி எதிர்க்கும் வல்லமை இல்லாத தன்மை, திருப்தி இல்லாமல் வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.


12 பாவக வழியில் இருந்து ஜாதகர் மேற்கண்ட வகையில் பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

இனி ஜாதகருக்கு இதற்க்கு முன் நடந்த திசைகள், தற்பொழுது நடைபெறும் திசை, இனி வரும் திசைகள் மேற்கண்ட 12 பாவகங்களில், எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது? நடத்துகிறது ? நடத்தும் ? என்பதை தெளிவாக காண்போம் அன்பர்களே! ஜாதக அமைப்பிலேயே, நவ கிரகங்களின் திசைகள் எந்த பாவகங்களின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதே ஒருவரின் வாழ்க்கையில் வரும் யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கிறது என்பதால், இந்த பதிவில் " எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு ஒப்பாக விளங்குகின்றது, ஏனெனில் நடைபெறும் திசை ஒரு ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரிய வில்லை எனில், அந்த ஜாதகருக்கு நாம் ஜோதிட கணிதம் செய்து சொல்லும் பலன்கள் யாவும், பொதுவானதாக அமைந்துவிடும், ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பது தெளிவாக தெரியும் பொழுது ஜாதகர் அந்த குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து எவ்வித பலன்களை ( யோக அவயோக ) வழங்குகிறது என்பதை துல்லியமாக எடுத்து கூற முடியம், ஜாதகர் அதன் வழியில் வாழ்க்கையை செம்மையாக நடத்த வழிகோல இயலும்.

ஜாதகருக்கு பிறப்பில் நடைபெற்ற திசை சந்திரன் திசை 12/07/1985 வரை நடைபெற்றது, இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தந்து.

2வதாக நடைபெற்ற செவ்வாய் திசை ( 12/07/1985 முதல் 12/07/1992 வரை ) ஜாதகருக்கு 1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தந்தது.

3வதாக நடைபெற்ற ராகு திசை ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலன்களை ராகு திசை முழுவதும் தந்தது, ஜாதகருக்கு 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக, சர நீர் தத்துவ அமைப்பில் பலனை தந்தது, ராகு திசை 18 வருடங்களும் ஜாதகருக்கு அளவில்லா துன்பத்திற்கு ஆளாக்கியது, குறிப்பாக ஜாதகரின் கல்வி காலத்தில் ராகு திசை திடீர் இழப்பை தரும் 8ம் பாவக பலனை தந்ததால், ஜாதகரின் கல்வி கேள்விக்குறியானது ? கல்வி பாதியிலேயே தடை பெற்றது, அடுத்ததாக ஜாதகரின் தொழில் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தந்தது, நிலையான தொழில் அமையாமல் ஜாதகரின் போராட்டம் ஆரம்பம் ஆனது, நிலையான வருமானம் அமையாமல் ஜாதகர் அதிக அளவில் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையை தந்தது, " கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை " என்ற ஒவ்வையின் வாக்கிற்கு இணங்க ஜாதகருக்கு இளமையில் வறுமையை ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) நடைபெற்ற ராகு திசை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக வழியில் இருந்தும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான 4ம் பாவக அமைப்பில் சர நீர் தத்துவ அமைப்பில் தந்தது , ஜாதகரை விரக்தியின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியது, சர ராசி என்பது தான் கொடுக்க வேண்டிய நன்மையையோ ? தீமையையோ ? 100% தங்கு தடையின்றி தரும் என்பதால் ஜாதகரால் ராகு திசையில் அதிக சிரமத்திற்கும் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது.


3வதாக நடைபெற்ற ராகு திசை ஜாதகரை போட்டு வாட்டி வதைத்தது என்றே சொல்லாம், இளமையில் ஒருவர் எவ்வித கஷ்டங்களை அனுபவிக்க கூடாதோ ? அந்தனை கஷ்டங்களையும் ஜாதகர் அனுபவித்தார், 8ம் பாவகம் சர நீர் ராசி என்பதாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதாலும், ஜாதகரின் வசதி வாய்ப்புகளை இழக்க வைத்து மனதளவில் அதிக போராட்டத்தையும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது என்பதால் ஜாதகருக்கு ராகு திசை மிகுந்த அவயோக பலன்களையே தங்கு தடையின்றி கொடுத்தது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயமே.

4வதாக நடைபெற்று வரும் குரு திசை ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை )  2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த யோக அமைப்பை தரும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து, அதாவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அளவில்லா வருமானத்தை பொதுமக்கள் வழியில் இருந்து பெற்று தரும் ஏனெனில் 2ம் வீடு தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன், இந்த 11ம் பாவகம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைகிறது, துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகமாக வருவதால் ( 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பொதுமக்கள்,கூட்டாளி,வாழ்க்கை துணை, வெளிநாடு, வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் போன்றவற்றை குறிக்கும், மேலும் துலாம் ராசி சர காற்று தத்துவ அமைப்பை பெறுவதால் தனது அமைப்பில் இருந்து 100% யோகத்தை தரும் என்பதை இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புகிறது ) ஜாதகரின் அறிவாற்றல் மிகசிறப்பாக செயல்படும், இனி வரும் காலங்களிலேயே ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை துணை கிடைக்கும், நல்ல தொழில் முறை கூட்டாளிகளை தரும், சிறந்த நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும், ஜாதகர் ராகு திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு , இரட்டிப்பான நன்மைகளையும், யோக அமைப்புகளையும் குறுகிய காலத்தில் அனுபவிக்கும் தன்மையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குழந்தைகள், சிறந்த ஆண் வாரிசு அமையும், ஜாதகரின் புத்திசாலிதனமும் அறிவு திறனும் வியாபாரத்தில் பன்மடங்கு லாபத்தை பெற்றுத்தரும், எங்கு சென்றாலும் ஜாதகருக்கு நல்ல வரவேற்ப்பு கிட்டும், சர காற்று தத்துவமான துலாம்  ராசியுடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் ஜாதகர் தனது பூர்விகத்திர்க்கு உற்பட்ட பகுதிகளில் ஜீவனம் மேற்கொண்டால் மட்டுமே யோக பலன்கள் 100% கிடைக்கும் என்பதை ஜாதகர் நினைவில் நிறுத்துக, ஒரு வேலை ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் ஜீவனம் மேற்கொண்டால் , 11ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களின் தன்மை வெகுவாக குறையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு குரு திசை முழுவதும் நீடித்த அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனையும், நேர்மறையான எண்ணங்களும் ஜாதகரை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும், ஜாதகர் வியாபாரம் செய்வதால் அளவில்லா லாபம் வந்து குவியும், சுயமாகவோ ? கூட்டாகவோ ? ஜாதகர் தொழில் செய்வது சால சிறந்தது, மற்றவரிடம் பணியாற்றினால் ஜாதகரின் யோக பலன்கள் யாவும், தடைபட கூடும் என்பதால், ஜாதகர் தனது முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம் ஆகிறது .

கோட்சார கிரகங்களின் தொடர்பு அவை தரும் பலன்கள் :

குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே நடத்துவதால், இந்த 11ம் பாவகத்துடன்  நீண்ட நாள் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மற்றும் குருபகவானின் தொடர்புகள்  தற்பொழுது இல்லாத காரணத்தால், மேற்கண்ட கிரகங்கள் அமைப்பில் இருந்து ஜாதகர் எவ்வித யோக அவயோக பலன்களையும் பெறவில்லை, ஒருவேளை இனி வரும் காலங்களில் நவகிரகங்கள் சம வீடான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் அந்த பாவகத்திர்க்கு 100% கோட்சார நன்மையை செய்வதால் ஜாதகர் கோட்சார கிரகங்கள் பற்றிய பயம் கொள்ள தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , வாழ்த்துகள் .

ஒருவரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பில் முறையாக ஜாதக கணிதம் செய்து பலன்களை தெளிவாக கூறும் பொழுது, ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்வார் என்பது உறுதி என்று, ஜோதிடதீபம் 100% திடமாக நம்புகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 3 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மேஷம்






 சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

உதாரணமாக மேஷ லக்கினம் உள்ள ஒருவருக்கு தற்பொழுது நடைபெறுவது குரு திசை என்று வைத்துகொள்ளுங்கள் குரு பகவான் ஜாதகருக்கு 1,2,5,8 ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் ஜாதகருக்கு கோட்சார முறையே 8ம் பாவகத்திர்க்கு அமர்ந்த முறையிலும், 1ம் பாவகத்திர்க்கு  தனது 6ம் பார்வையாக பார்த்த முறையிலும், 2ம் பாவகத்திர்க்கு  தனது 7ம் பார்வையாக பார்த்த முறையிலும், 5ம் பாவகத்திர்க்கு  தனது  10ம் பார்வையாக பார்த்த முறையிலும், யோக அவயோக பலன்களை தருவார், ஒருவேளை இந்த ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை 9 ம் பாவக பலனை நடத்துகிறது எனில் தற்பொழுது நடைபெற்ற சனி பெயர்ச்சியால் ஜாதகருக்கு எவ்வித கோட்சார பலன்களும் நடைமுறைக்கு வாராது என்பதை நினைவில் கொள்க, எனவே எந்த ஒரு லக்கினத்தை சார்ந்தவருக்கும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் என்ன பாவகமாக வருகிறதோ, அந்த பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு கோட்சார சனி பகவான் யோக அவயோக பலனை தருவார் என்பதை நினைவில் நிறுத்துங்கள், இதை அடிப்படையாக கொண்டே இனி வரும் சனி பெயர்ச்சி பலன்களை புரிந்து கொள்ளுங்கள், அதுவே தங்களது லக்கினத்திற்கு சரியான பலன்களை தெரிந்துகொள்ள ஏதுவாக அமையும்.

மேஷ லக்கினம் : 

8ம் பாவகத்தில் நின்ற அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு அதிக அளவில் ஸ்திரமான மன போராட்டத்தை தருகிறார், ஜாதகருக்கு திடீர் என நிகழும் நிகழ்வுகளால், அதிக மன உளைச்சலும், மன போராட்டத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு எதிர் பாரத திடீர் இழப்புகள் வர கூடும், விபத்து மருத்துவ சிகிச்சை பெறுதல், வீண் விரையம், பங்கு வர்த்தகத்தில் திடீர் இழப்பு, அனைவராலும் அதிக தொல்லை, மனதை கேட்டும் செய்யும் செயல்கள் யாவும் பெரும் தோல்வி, தனது முன்னே நிற்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மன தைரியம் இல்லாத நிலை, வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், வியாதிகளால் மனம் உடல் பாதிக்கும் நிலை என்ற வகையில் நிச்சயம் அதிக பாதிப்பையே தருகிறது .

1ம் பாவகத்தை 6ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு வியாதியை எதிர்க்கும் தன்மையை இழக்க செய்கிறார், ஜாதகருக்கு பித்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும், ஜாதகர் வளரும் சூழ்நிலையில் அல்லது தற்பொழுது குடியிருக்கும் அமைப்பில் இருந்து சூழ்நிலை மாற்றம் உண்டாகும் , ஜாதகரின் வரட்டு பிடிவாதமும், அவசர கதியில் செய்யும் காரியங்கள் ஜாதகருக்கு அதிக பதிப்பை தரும், ஜாதகருக்கு மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகள், புத்திமதிகள் யாவும் பயன் அற்றதாக போகும், தான் செய்வதே சரியென்று வாதிடும் தன்மையை தீர்க்கமாக தரும், அரசு துறை சார்ந்த பணியில் இருக்கும் நபர்கள் அதிக கவனமுடன், பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் சூழ்நிலை கைதியாக வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.

2ம் பாவகத்தை 7ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு அளவில்லா வருமானத்தை வாரி வழங்குகிறார், ஸ்திரமான வருமானம் ஜாதகருக்கு இனி வரும் காலங்களில் குறுகிய காலத்தில் அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தனது சுய வருமானத்தில் ஜாதகர் நிலையான சொத்து , புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், ஜாதகர் வட்டிக்கு பணம் கொடுத்தல் நல்ல வருமானத்தை தரும், கையில் நல்ல பண வரவு சரளாமக நடைபெறும், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும், ஜாதகருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், திருமணம் தாமதமான அன்பர்களுக்கு உடனடியாக திருமணம் வெகு விமர்சையாக நடைபெறும் , இந்த சனிபெயர்ச்சி ஜாதகருக்கு கை நிறைவான பண வரவையும், அளவில்லா தன சேர்க்கையையும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் நிச்சயம் தரும் என்பது உறுதி.

5ம் பாவகத்தை 10ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு நிறைய நியாபக மறதியை தருகிறார், கடவுள் வழிபாடு செய்வதில் அதிக தடைகளையும், தனது பூர்வீகத்தில் இருப்பதால் ஜாதகருக்கு வரும் வெற்றி வாய்ப்பை குறைப்பார், இந்த நேரங்களில் ஜாதகர் முடிந்த அளவிற்கு மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது ஜாதகரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வாராமல் இருக்கும், மேலும் ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் பல முறை சிந்தித்து செயல்படுவது சிறந்தது, எவ்வளவு அவசரமான காரியம் என்றாலும் சரி மிக நிதானமாக பொறுமையாக கையாள்வது ஜாதகருக்கு மிகப்பெரிய நன்மையை வாரி வழங்கும்.

குறிப்பு : 

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளின் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இல்லையெனில் ஜாதகருக்கு கோட்சார ரீதியான, சனி பகவானின் யோக அவயோக பலன்களோ நடைமுறைக்கு வராது என்பதால் ஜாதகர் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

" மறைந்த புதன் நிறைந்த கலை " என்பதற்கு ஏற்ப சுய ஜாதகத்தில் புதன் பலன் தருமா ?



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக வருவது கன்னி ராசி இதன் அதிபதி புதன், இங்கு புதன் ஆட்சி மற்றும் உச்ச நிலையை பெறுகிறார், மேலும் உபய மண் தத்துவ அமைப்பை கன்னி ராசி பெறுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தை மறைவு ஸ்தானமாக பாவிப்பார்கள், மேலும் 6ம் பாவகம் சத்ரு ஸ்தானமாக வர்ணிப்பதும் உண்டு, சுய ஜாதகத்தில் ஒருவரின் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியையும், பங்கு பெரும் போட்டி பந்தையங்களில் எதிர்பாராத வெற்றியையும், எதிரிகளின் சதியை முறியடிக்கும் அபரிவிதமான ஆற்றலையும், வழக்குகளில் பெரும் வெற்றியையும் குறிக்கும், மேலும் ஜாதகர் அரியகலைகளில் அபரிவிதமான அறிவு திறனையும், செயல் திறனையும் வாரி வழங்கும், இந்த விஷயம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக கன்னி ராசி வருவதாலும், இங்கே உபய மண் தத்துவம் சிறப்பாக செயல்பட்டு, புதன் ஆட்சி உச்சம் பெறுவதாலும் " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு பொருத்தமானதாகவே இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.


ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் 6ம் பாவகத்தில் அமர்வது அந்தஜாதகருக்கு பலவகையான தனி திறமைகளை வாரி வழங்கி விடுகிறார் ( 6ம் பாவகம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ) மேலும் ஜாதகருடன் தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள்,உறவுகள், எதிர்பாலினரின் தன்மையை தெளிவாக தெரிவிப்பது, ஜாதகரின் 6ம் பாவகமே, மேலும் ஜாதகரின் சூட்சம அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை இந்த ஆறாம் பாவகத்திர்க்கே உண்டு என்பதால், நுண்ணறிவுக்கு அதிபதியான புதன் இங்கு வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சிந்தனை,அறிவாற்றல்,செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் மெச்சும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 6ம் பாவகத்தில் அமரும் புதன் ஜாதகருக்கு தனது வழியில் இருந்து எவ்வித யோகங்களை வழங்குகிறார், என்பதை இனி சிந்திப்போம்.

6ம் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் துரித கதியில் மிக சிறப்பாக செயல்படும், 6ம் பாவகம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நிதானமாக ஸ்திர தன்மையுடன் நீண்ட நாட்கள் பலன் தரும் அமைப்பில் செயல்படும், 6ம் பாவகம் உபய ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் தனக்கும் மற்றவருக்கும் குறுகிய காலத்திற்கு மட்டும் பலன்தரும் அமைப்பை தரும், இந்த விஷயம் சுய ஜாதகத்தில் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப சில மாறுபட்ட பலன்களை தந்த போதிலும், அதிக சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கின்றது.

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு நெருப்பு தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு அரிய கலைகளில், போர் முறைகள் சார்ந்த விசயங்களில் ஞானம் உண்டாகும், எதிரிகளை தாக்கும் சூட்சம கலைகளில் சிறந்து விளங்குவார்கள், குறிப்பாக வில் அம்பு எய்தல், துப்பாக்கி சுடுதல், ரகசிய போர் முறைகளை அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், வீரம் சார்ந்த ரகசிய கலைகளில் அபரிவிதமான தேர்சியை தரும், தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும்  வல்லமை ஜாதகருக்கு மிக எளிதாக கைவர பெறுவார், நெருப்பு தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்களை வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் மண் தத்துவமாக இருப்பின் ஜாதகர் மருத்துவ கலையில் சிறந்து விளங்குவார் , ஒருவரை பார்த்த உடனே அவரின் உடல் நிலையை மிக சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும், மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பல மூலிகை ரகசியங்களை அறிந்திருக்கும் பலரது ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை பார்க்க முடிகிறது, மேலும் சித்த மருத்துவ முறையில் சிறந்த வைத்திய  ரகசியங்களை அறிந்துகொள்ளும் யோகத்தையும் இங்கு அமரும் புதன் வாரி வழங்கி விடுகிறார்.

6ம் பாவகம் காற்று தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு கணிதம்,ஜோதிடம்,எதிர்காலத்தை  துல்லியாமாக கணிதம் செய்யும் அனைத்து ஜோதிட கலைகளிலும் அபரிவிதமான ஞானத்தையும், தெளிவான கலை நுணுக்கத்தையும் வழங்குகிறது, மேலும் எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து போன்ற  கலைகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தருகிறது, மேலும் இயல் இசை நாடகம் மற்றும் சிற்ப கலையில் சிறந்து விளங்கும் நுண் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது, ஜாதகரின் அறிவாற்றல் பலரது வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் தன்மையை, காற்று தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் நீர் தத்துவமாக இருப்பின் ஜாதகர் சிறந்த மனோதத்துவ நிபுனாராக விளங்குவார், ஜாதகரின் மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியும் தன்மையை சிறு வயதிலேயே பெற்று விடும், குறிப்பாக நல்ல மனோதத்துவ நிபுணர் தனது மனதை ஒருநிலை படுத்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளுணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார், சரித்திரத்தில் சில பாத்திரங்களை மிருக பாஷை அறிந்தவராக சிததரித்து இருப்பார்கள், அதற்க்கு பொருத்தமானவர்கள் என்று இவர்களை சொல்லலாம், டெலிபதி, கிரகங்களின் தன்மையை உள்ளுணர்வாக புரிந்து கொள்ளும் மன ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேலும் மண்ணில் புதையுண்ட ரகசியங்களை அறிந்துகொள்ளும் தன்மையையும், பின்னல் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்து கூறும் வல்லமையை, நீர் தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

மேலும் சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தில் சாய கிரகமான ராகு அல்லது கேதுவோ ஆளுமை செய்து 6ம் பாவகத்தை வலிமை பெரும் தன்மையில் இருக்குமாயின், புதனின் அபரிவிதமான சக்தியை சாயா கிரகங்கள் பெற்று பன்மடங்கு அதிகரித்து தரும் என்பது குறிப்பிட தக்கது, ராகு கேதுவுடன் சேர்ந்த புதனின் தன்மை பன்மடங்காக அதிகரிக்கும், குறிப்பக கேதுவுடன் சேரும் பொழுது அபரிவிதமான அறிவாற்றலையும், ராகுவுடன் சேரும்பொழுது அளவில்லா உடல் வலிமையையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறது  என்பது கவனிக்க தக்க ஒரு சிறப்பு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

எனவே " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு நிச்சயம் உண்மையானதே, இதை வேறுஒரு பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு உறுதி செய்வோம் அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 1 நவம்பர், 2014

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையையும், தனது திசையில் வழங்கும் பலன்களும்!




 நவகிரகங்களில் மிக அதிக வலிமை வாய்ந்ததும், தான் அமரும் பாவகத்தின் பலனை முழுவதும் தானே அதிகாரம் செலுத்தும் வல்லமை பெற்றதும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தானே ஏற்று நடத்தும், அதிகாரம் மிக்க ராகு பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்தால் மட்டும் போதாது, தனது திசையில் தான் வலிமை பெற்று அமர்ந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர், ராகு பகவான் அமைப்பில் இருந்து அவர் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், பொதுவாக ராகு பகவான் சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவகங்களில் அமர்ந்தால் மிகுந்த நர்ப்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார் என்பதை பற்றி, இதற்க்கு முன் ஜோதிடதீபம் பல பதிவுகளில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது, ராகு பகவான் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்தாலே போதும், தனது திசைகளில் யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து நடத்துவார் என்ற தவறான கருத்து உள்ளது, இது முற்றிலும் தவறான அணுகு முறை அன்பர்களே!

சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் வலிமை பெற்று அமர்ந்து இருந்தாலும் சரி, வலிமை அற்று அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார், அவர் ஏற்று நடத்து பாவகம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ? என்பதின் அடிப்படையிலேயே ஜாதகருக்கு யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது மிக தெளிவாக அன்பர்கள் புரிந்துகொள்ள இயலும், ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு பகவான் எந்த பாவகத்தில் இருக்கிறார் ? ராகு பகவான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்கும் நிலையை தருகிறார ? தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் :



லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகம் எது ?

ஜாதகர் சிம்ம லக்கினம் ராகு பகவான் அமர்ந்திருப்பது சிம்மத்தில், எனவே பொதுவாக இந்த ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்ளும் ஜோதிடர்கள் ராகு லக்கினத்தில் அமர்ந்து இருப்பதாகவே எடுத்து கொள்வார்கள், இது இந்த ஜாதகத்தை பொதுவாக காணும் பொழுது ஏற்ப்படும் பிழை, உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு பகவான் சிம்ம ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் இருக்கிறார் என்பது சரியானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் சிம்மத்தில் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் உள்ள 161:36:28 பாகையில் முடிவடைகிறது ) ஆக ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, 161:36:28 பாகையில் முடிவடைகிறது. மேற்கண்ட பாகைக்குள் ராகு பகவான் அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு ராகு பகவான் லக்கினத்தில் அமர்ந்ததாக எடுத்துகொள்ள இயலும், ஆனால் இவரது ஜாதகத்தில் ( ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகை 126:20:17 ) எனவே இந்த ஜாதகருக்கு ராகு பகவான் சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜாதக ரீதியான கணிதம், சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கும் உண்மையான பாவக நிலை, ஜாதகருக்கு ( 12ம் பாவகம் கடகத்தில் 101:41:47 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 131:32:59 பாகையில் முடிவடைகிறது ) என்பதை பார்க்கும் பொழுது ராகு  பகவான் 12ம் பாவகத்தில் தான் அமர்ந்து இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்க செய்கிறாரா ?  

பொதுவாக கேந்திர பாவகங்களில் ( பாரம்பரிய ஜோதிடத்தில் 12ம் பாவகத்தை மறைவு ஸ்தானம் என்பர்  இந்த விதி நமது உயர் கணித ஜோதிடத்தில்  பொருத்தது இங்கே 12ம் பாவகத்தை கேந்திரமாகவே எடுத்துகொள்ள வேண்டும் ) அமரும் ராகு பகவான் கேந்திர பாவகத்தை 100% வலிமை பெற செய்வார் அதன் அதிபதி சூரியன்,செவ்வாய்,தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ( 14 பாகைக்குள் சூரியனுடன் சேர்ந்து இருப்பின் ) சனி ஆகிய கிரகங்களாக இருப்பின், சிம்மத்திற்கு அதிபதி சூரியன் என்பதால் இங்கு அமர்ந்த ராகு பகவான்  ஜாதகரின் 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதும் உறுதியாகிறது, ஆக 12ம் பாவகத்தில் அமரும்  ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த இடத்தை வலிமை பெறவே செய்கிறார்  என்பது கவனிக்க தக்க விஷயம்.

ஜாதகருக்கு ராகு பகவான் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ?

இந்த விஷயத்தை தான் நாம் இங்கு மிக கவனமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ராகு 12ல் அமர்ந்து 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதை இதற்க்கு முன் பார்த்தோம், ராகு பகவான் எந்த பாவகத்தின் பலனை தனது திசையில் ஏற்று நடத்துகிறார் என்பதே ஜாதகருக்கு அவரது திசையில் தரும் யோக அவயோக பலன்களை  நிர்ணயம் செய்யும், இந்த ஜாதகருக்கு பாவகத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் ( தனது திசையில் 13,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% சதவிகித அவயோக பலன்களையே வழங்குகிறார் ) என்பது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற போதிலும், தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு யோகத்தை செய்யும் தன்மையை தனது திசையில் இழக்கிறார் என்பது  100% சதவிகிதம் உறுதியாகிறது.

எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, தனது திசையில் சுய ஜாதக அமைப்பின் படி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களும் நன்மைகளும், நவ கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவக வழியல் இருந்து  அனுபவிக்க இயலும் என்பதும், ஜாதகருக்கு குறிப்பிட்ட திசை யோக பலன்களை வழங்குகிறது என்று தெளிவாக எடுத்து உரைக்க இயலும் என்பதும் கவனிக்க தக்கவிஷ்யமாக  ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட கிரகத்தின் திசை நடைபெறும் பொழுது பாதிக்க பட்ட கிரகம் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், நிச்சயம் ஜாதகர் பாதிக்க பட்ட கிரகம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து  யோக பலன்களை அனுபவிப்பர், இதில் எந்த சந்தேகமும் இல்லை, எனவே ஒருவருக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியும் பொழுதே அந்த ஜாதகருக்கு நடைபெறும் பலன்கள் நன்மையா? தீமையா ? என்று ஜோதிடர்களால் நிர்ணயம் செய்ய இயலும், இந்த விஷயம் தெரியாத பொழுது அந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெரும் அன்பர்களின் நிலை விதி விட்ட வழி என்றுதான் சொல்லவேண்டும்.

பலரால் நாகதோஷம்,சர்ப்பதோஷம்,ராகுகேதுஜாதகம், என்று நிர்ணயம் செய்த ஜாதகங்களில் மேற்கண்ட சாய கிரகமான ராகு கேது கிரகம் நல்ல நிலையில் இருந்து, நன்மை தரும் அமைப்பை பெற்று இருப்பதை ஜோதிடதீபம் கண்டுணர்ந்து சம்பந்த பட்டவர்களுக்கு, தெளிவும் சரியான ஜாதக பலனையும்  எடுத்து உரைத்திருகின்றது, ஆக ராகு கேது கிரகங்கள் 1,2,5,6,7,8,12ல் அமர்ந்தாலே தோஷத்தை செய்யும் என்ற முட்டாள் தனமான வாதத்தை உடைத்து எறிந்திருக்கிறது அன்பர்களே! திருமணம் செய்ய  ராகு கேது தோஷம் என்று எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்காமல், ராகு கேது அமர்ந்த இடத்தை வலிமை பெற செய்கிறாரா? தனது திசா புத்திகளில் நன்மையை செய்கிறாரா? என்று சுய ஜாதக ரீதியான தெளிவு பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் என்று ஜோதிடதீபம் வாழ்த்துகிறது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696