வியாழன், 6 நவம்பர், 2014

"குரு பார்க்க கோடி நன்மை" திரிகோண வீடுகளுக்கு குரு பகவான் வழங்கும் யோக பலன்கள் !



பிரகஸ்பதி என்று தேவர்களால் அலைக்கபெரும் ராஜ கிரகமான குரு பகவான், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார், பொதுவாக ஜோதிடர்கள் குரு பகவானை பற்றி சிலாகித்து பேசுவது அவரின் பார்வை பலன்களை பற்றியதாகவே இருக்கும், குறிப்பாக " குரு பார்க்க கோடி நன்மை " என்ற வாசகம் அறியாத ஜோதிட ஆர்வலர்கள் இல்லை எனலாம், இந்த ஒரு வார்த்தையிலேயே குரு பகவான் பார்வை தன்மையின் வலிமையை உணரலாம் அன்பர்களே!

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5,7,9ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் குரு பகவான் எந்த நிலையில் ( அதாவது பாவகத்தில் ) அமர்கிறார் என்பதை வைத்தே குரு பார்வையின் தன்மையை நிர்ணயம் செய்ய வேண்டும், குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ? அல்லது தீமை நடைபெறுமா ? என்று நிர்ணயம் செய்வது அவசியம், பொதுவாக பல ஜோதிடர்கள் குரு பார்வை நன்மை மட்டுமே வழங்கும் என்று சொல்வதுண்டு, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் குரு பகவான் 1,3,5,9,11ம் பாவகங்களில் அமரும் பொழுது அந்த ஜாதகர் மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த பாவக  வழியில் இருந்தும், குரு பகவானின் பார்வை பெரும் பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களையே பெறுவார்கள், இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் இதை தவிர்த்து வேறு பாவகங்களில் ( 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில்) அமரும் பொழுது ஜாதகருக்கு அமர்ந்த நிலையிலும் சரி, கோட்சார நிலையிலும் சரி ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் பாவக அடிப்படையில் நன்மையை மட்டுமே செய்வார் என்ற கருத்து நிச்சயம் தவறும் வாய்ப்பு உள்ளது.

 குரு பார்வை என்பது சுய ஜாதகத்தில் 1,3,5,9,11ம் வீடுகளில் அமர்ந்து, 1,3,5,9,11ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும், மாறாக வேறு பாவகங்களில் அமரும் பொழுது முரண்பட்ட பலன்களையே தருகிறது என்பது, 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில் அமர்ந்த ஜாதகரை பார்த்தல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் மேலும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான் நிச்சயம் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களுக்கு நன்மையை செய்ய வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி அன்பர்களே !

குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு கோண வீடுகளாக ( 1,5.9 ) அமைந்து அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 100% நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் " குரு பார்க்க கோடி நன்மை " எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் 100% பொருத்தமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து  மேஷம் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் உடல் வலிமை மனோ வலிமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு ஜாதகர் நல்ல முன்  உதாரணமாக இருப்பார், சர நெரப்பு தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் பலர் மெச்சும் வண்ணம் அமைந்திருக்கும் குறிப்பாக, ஜாதகர் நல்ல மேலாண்மை திறனை பெற்று இருப்பார், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் தன்மையையும், சுய கட்டுபாடுடன்  கூடிய ஒழுக்க சீலராக காணப்படுவார், ஜாதகர் தான் நினைக்கும்  செயல்களை யாவும் முடிக்கும் வல்லமையை பெற்று இருப்பார், குறிப்பாக ஜாதகரின் பாதுகாப்பில் அனைவரும் நலமாக இருக்கும் யோகத்தை தரும், ராணுவம், காவல் துறை, நீதி துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மைய தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்று இருக்கும், அதிகார தோரணையும் அடக்கியாளும் யோகமும் பெற்றவர்கள், தனது செயல்களில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் மதிப்பு மிக்க மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

சிம்மத்தில்  குரு பகவான் அமர்ந்து  சிம்மம்  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும், பல ஆன்மீக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், மனிதாபிமானம் அற்ற சமுதாயத்தை மற்றும் தன்மையையும், உலகுக்கு சமாதானத்தை எற்ப்படுத்து யோகமும் பெற்றவர்கள், மருத்துவ துறை, ஆன்மீகம், மன நலம், ஜீவ காருண்யா யோகம் போன்றவற்றில் வெற்றி பெரும் அன்பர்கள், இவர்களின் அறிவு திறனும் நல்லெண்ண செயல்பாடுகளும் பூஉலகில் சாமாதான தூதுவர் என்ற நற்ப்பெயரை பெற்று தரும், இந்த ராசி ஸ்திர ராசி அமைப்பில் வருவதால் ஜாதகர் இருள் அடைந்த உலகில்  அருள் விளக்கேற்றும் சிறந்த ஆன்மீக வாதியாகவும், இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொதுநல புரட்சியாளனாகவும், உலகத்தை அன்பின் வழியில் நடத்தி செல்லும் நல்ல மக்கள் நல  விரும்பியாவும் தனது அறிவின் வழியில் ஜாதகரை பிரகாசிக்க செய்யும்.

தனுசுவில்  குரு பகவான் அமர்ந்து  தனுசு  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் எண்ணங்களின் தன்மை உலகில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், ஜாதகர்  ஒரு புதுமை விரும்பியாகவும், சமூகத்திலும் மக்களின் மனதில் புதிய சிந்தனைகளை புகுத்தும் வல்லமையும், மக்கள் அறிவின் வழியில் செயல்படும் தன்மையை பெற தேவையான கல்வியில் அனைத்து நிலைகளிலும் சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்கள், இவர்களின் சிந்தனை  எண்ணம் யாவும் இவர்கள் மறைந்த போதிலும் உலகில் நடைமுறையில் இருக்கும், மக்கள் அனைவருக்கும் வற்றாத செல்வத்தை தரும் காமதேனுவை போல் நீடித்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும், ஒருவருக்கு ஏற்ப்படும் சந்தேகம் எதுவென்றாலும் இவர்களிடம் நிச்சயம்  சரியான  பதில் இருக்கும் என்பதால், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிக்கும் அமுத சுரபி என்று இவர்களை வர்ணிக்கலாம், மேலும் இந்த ராசி உபய நெருப்பு தத்துவ அமைப்பில் யோகங்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்கும்.

இதை போன்றே ஒருவரின் சுய ஜாதகத்தில் கோட்சார அமைப்பில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சில எதிர்பாராத யோக அமைப்புகளை பெற வைப்பது 1,5,9ம் பாவக வலிமை பெற்ற அமைப்பின் தன்மையே என்றால், அது மிகையாகாது. குருபகவான் குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் உயிர்களை உய்விக்கும் தன்மை கொண்ட நெருப்பு தத்துவ அமைப்பில் சரம்,ஸ்திரம்,உபயம் என்ற வழியில் ஜீவன்களுக்கு நன்மைகளையும், யோகங்களையும் ராஜ கிரகமான குரு பகவானின் அமர்ந்த, பார்த்த அமைப்பில் இருந்து வாரி வழங்குகிறது, மேலும் மற்ற பாவகங்களில் குரு பகவான் வழங்கும் நன்மையை கருத்தில் எடுத்து கொள்ளும் பொழுது, மேற்கண்ட  1,5,9ம் பாவகங்களுக்கும், மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகளில் 100 மடங்கு அதிகமாக செயல்படுவதை இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் யோக வாழ்க்கையை  வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக