வெள்ளி, 7 நவம்பர், 2014

திருமண தடையும், நடைபெறும் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைமுறையில் இருக்கும் திசை பாதக ஸ்தான பலன்களை வழங்கினால், அவரது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் வழியில் இருந்து கூட எவ்வித நன்மையையும் பெற இயலாது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் அல்ல, நடைமுறையில் வரும் திசாபுத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சிறந்த நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், பலரது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும், ஆனால் நடைமுறையில் இருக்கும் திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், இதன் காரணமாக ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் பெற இயலாத சூழ்நிலையில் ஜீவனம் செய்யும் தன்மையை பெற்று இருப்பார், இந்த அமைப்பை நாம் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,5ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு 90% யோக பலன்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும்.

ஜாதகத்தில் வலிமை இழந்த பாவகங்கள் :

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட  பாவக வழியில் இருந்து 70% இன்னல்களையும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 200% இன்னல்களை ஸ்திரமாக வாரி வழங்கும் .

ஜாதகிக்கு கடக லக்கினம், தற்பொழுது நடைபெறும் குரு திசை, குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்து ( லக்கினம் கடகத்தில் 111:07:10 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 139:46:42 பாகையில் முடிவடைகிறது, குரு பகவான் சிம்மத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட 135:29:40 பாகையில் அமர்ந்திருக்கிறார் ) மேற்கண்ட அமைப்பை  பார்க்கு அனைத்து பாரம்பரிய ஜோதிடர்களும், குரு பகவான் அமர்ந்து இருக்கும் நிலையை வைத்து குரு திசை யோக பலன்களை தருவதாக சொல்வார்கள், ஆனால் உண்மையில் ஜாதகிக்கு குரு லக்கினத்தில் அமர்ந்தாலும், தான் ஏற்று நடத்தும் பாவகம், பாதக ஸ்தானமாக இருப்பதால் ஜாதகி குரு திசையில் எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க வில்லை, மேலும் ஜாதகியில் பாதக ஸ்தானம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2 மற்றும் 3ம் வீடாக வருவது ஜாதகிக்கு மண் தத்துவ அமைப்பில் இருந்து சிறு உடல் நல குறைவினையும், 3ம் வீடு அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் பெரிய தோல்வியை வாரி வழங்கியது .

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் அமர்ந்து இருக்கும் இடத்தின் பலனை  தனது திசையில் தரும் என்று  கருதி பலன் காண்பது உண்மைக்கு மாறான பலன்களை ஜாதகருக்கு சொல்ல வேண்டிய சூழ்நிலையை தந்துவிடும் , ஒரு கிரகம் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை உணர்ந்து பலன் சொன்னால் மட்டுமே, அது சரியான ஜாதக கணித பலன்களாக  இருக்கும் , இந்த ஜாதகிக்கு குரு திசை முழுவதும் ( 03/07/2009 முதல் 03/07/2025 வரை ) பாதக ஸ்தான பலனை தருவதால் ஜாதகியின் வாழ்க்கை கல்வி,வேலை,திருமணம் எனும் அனைத்து  விஷயங்களும் சரியாக அமையாமல், தனது வீட்டில் சூழ்நிலை கைதியாக முடங்கும்  தன்மையை தருகிறது, ஜாதகியின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாமல் மனோ ரீதியான போராட்டங்களையும், மன அழுத்தத்துடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது , இதைவிட கொடுமையானது இதற்க்கு முன் நடந்த  ராகு திசையும் ( ஜாதகி ஜெனனம் முதல் ) பாதக ஸ்தான பலனை தந்ததே  அதிக வருத்தத்திற்கு உரியாது , 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் செயல்படாமல் துரதிர்ஷ்டம் பலனை தந்து ஜாதகியின் வாழ்க்கையில் அதிக இன்னல்களுக்கு ஆளாக்கியது என்றே சொல்லலாம்.

ஜாதகிக்கு தற்பொழுது  திருமணம் செய்வதற்காக கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்துகொண்டு இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள், ஜாதகிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருந்த போதிலும் தற்பொழுது  நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று   நடத்துவதால் ஜாதகிக்கு வரும் வரங்கள் யாவும் தட்டி போகிறது, அல்லது இவர்கள் தட்டி கழிக்கிறார்கள், இதனால் ஜாதகிக்கு அவரின் பெற்றோர்கள் எடுக்கும்  திருமண முயற்ச்சிகள் யாவும் இறுதியில் தோல்வி என்ற நிலையையே தருகிறது, ஜாதகி பாதக ஸ்தான வழியில் இருந்து எவ்வித அவயோக பலன்களை  எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை இனி சிந்திப்போம்  அன்பர்களே !

ஜாதகியின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பகிர்ந்து நிற்பதால் , ரிஷப ராசி அமைப்பில் இருந்து ஸ்திர மண்  தத்துவ அமைப்பிலும், மிதுன ராசி அமைப்பில் இருந்து உபய காற்று தத்துவ அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , அதாவது ஜாதகிக்கு ரிஷப அமைப்பில் இருந்து சிறந்த குடும்பம் அமைவதற்கு உண்டான வாய்ப்பை குறைக்கிறது, கல்வியில் தடை, வருமான  வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலை, மற்றவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை, மற்றவரை கடுமையாக விமர்சித்தல் போன்ற செய்கைகளால் ஜாதகியின் நர்ப்பெயர் வெகுவாக பாதிக்க படுகிறது, மிதுன அமைப்பில் இருந்து  ஜாதகியின் அறிவு திறன் வெகுவாக பாதிக்க படுகிறது, எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக ஆராயாமல் முட்டாள் தனமான செய்கையினால் , தனக்கு வரும் நல்ல வாய்ப்பினை தானே உதறித்தள்ளும்  தன்மையை இந்த அமைப்பு தருகிறது.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 8,11ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களுக்கு  மிகவும் நல்ல நிலையில் வலுவாகவே இருந்த போதிலும், ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசையும் சரி, இதற்க்கு முன் நடந்த ராகு திசையும் சரி ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் பாதக ஸ்தான பலனை மட்டுமே அனுபவிக்கும் தன்மையை தருகிறது, எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில்  பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டும் நன்மையை தர வாய்ப்பில்லை, நடைமுறையில் வரும் திசை புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக பலன்களும், நன்மைகளும் நடைமுறைக்கு வரும், இதற்க்கு மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்களும், நடைபெறும் திசா புத்திகள் அமையும் பொழுது, ஜாதகர் யோக வாழ்க்கையை பற்றி கற்பனையில் மட்டுமே வாழ இயலும், நடைமுறையில் எவ்வித யோக பலன்களும் வர வாய்ப்பில் என்பது முற்றிலும் உண்மை.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக