திங்கள், 3 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மேஷம்






 சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

உதாரணமாக மேஷ லக்கினம் உள்ள ஒருவருக்கு தற்பொழுது நடைபெறுவது குரு திசை என்று வைத்துகொள்ளுங்கள் குரு பகவான் ஜாதகருக்கு 1,2,5,8 ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் ஜாதகருக்கு கோட்சார முறையே 8ம் பாவகத்திர்க்கு அமர்ந்த முறையிலும், 1ம் பாவகத்திர்க்கு  தனது 6ம் பார்வையாக பார்த்த முறையிலும், 2ம் பாவகத்திர்க்கு  தனது 7ம் பார்வையாக பார்த்த முறையிலும், 5ம் பாவகத்திர்க்கு  தனது  10ம் பார்வையாக பார்த்த முறையிலும், யோக அவயோக பலன்களை தருவார், ஒருவேளை இந்த ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை 9 ம் பாவக பலனை நடத்துகிறது எனில் தற்பொழுது நடைபெற்ற சனி பெயர்ச்சியால் ஜாதகருக்கு எவ்வித கோட்சார பலன்களும் நடைமுறைக்கு வாராது என்பதை நினைவில் கொள்க, எனவே எந்த ஒரு லக்கினத்தை சார்ந்தவருக்கும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் என்ன பாவகமாக வருகிறதோ, அந்த பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு கோட்சார சனி பகவான் யோக அவயோக பலனை தருவார் என்பதை நினைவில் நிறுத்துங்கள், இதை அடிப்படையாக கொண்டே இனி வரும் சனி பெயர்ச்சி பலன்களை புரிந்து கொள்ளுங்கள், அதுவே தங்களது லக்கினத்திற்கு சரியான பலன்களை தெரிந்துகொள்ள ஏதுவாக அமையும்.

மேஷ லக்கினம் : 

8ம் பாவகத்தில் நின்ற அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு அதிக அளவில் ஸ்திரமான மன போராட்டத்தை தருகிறார், ஜாதகருக்கு திடீர் என நிகழும் நிகழ்வுகளால், அதிக மன உளைச்சலும், மன போராட்டத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு எதிர் பாரத திடீர் இழப்புகள் வர கூடும், விபத்து மருத்துவ சிகிச்சை பெறுதல், வீண் விரையம், பங்கு வர்த்தகத்தில் திடீர் இழப்பு, அனைவராலும் அதிக தொல்லை, மனதை கேட்டும் செய்யும் செயல்கள் யாவும் பெரும் தோல்வி, தனது முன்னே நிற்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மன தைரியம் இல்லாத நிலை, வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், வியாதிகளால் மனம் உடல் பாதிக்கும் நிலை என்ற வகையில் நிச்சயம் அதிக பாதிப்பையே தருகிறது .

1ம் பாவகத்தை 6ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு வியாதியை எதிர்க்கும் தன்மையை இழக்க செய்கிறார், ஜாதகருக்கு பித்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும், ஜாதகர் வளரும் சூழ்நிலையில் அல்லது தற்பொழுது குடியிருக்கும் அமைப்பில் இருந்து சூழ்நிலை மாற்றம் உண்டாகும் , ஜாதகரின் வரட்டு பிடிவாதமும், அவசர கதியில் செய்யும் காரியங்கள் ஜாதகருக்கு அதிக பதிப்பை தரும், ஜாதகருக்கு மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகள், புத்திமதிகள் யாவும் பயன் அற்றதாக போகும், தான் செய்வதே சரியென்று வாதிடும் தன்மையை தீர்க்கமாக தரும், அரசு துறை சார்ந்த பணியில் இருக்கும் நபர்கள் அதிக கவனமுடன், பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் சூழ்நிலை கைதியாக வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.

2ம் பாவகத்தை 7ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு அளவில்லா வருமானத்தை வாரி வழங்குகிறார், ஸ்திரமான வருமானம் ஜாதகருக்கு இனி வரும் காலங்களில் குறுகிய காலத்தில் அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தனது சுய வருமானத்தில் ஜாதகர் நிலையான சொத்து , புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், ஜாதகர் வட்டிக்கு பணம் கொடுத்தல் நல்ல வருமானத்தை தரும், கையில் நல்ல பண வரவு சரளாமக நடைபெறும், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும், ஜாதகருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், திருமணம் தாமதமான அன்பர்களுக்கு உடனடியாக திருமணம் வெகு விமர்சையாக நடைபெறும் , இந்த சனிபெயர்ச்சி ஜாதகருக்கு கை நிறைவான பண வரவையும், அளவில்லா தன சேர்க்கையையும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் நிச்சயம் தரும் என்பது உறுதி.

5ம் பாவகத்தை 10ம் பார்வையாக பார்த்த அமைப்பில் சனி பகவான் ஜாதகருக்கு நிறைய நியாபக மறதியை தருகிறார், கடவுள் வழிபாடு செய்வதில் அதிக தடைகளையும், தனது பூர்வீகத்தில் இருப்பதால் ஜாதகருக்கு வரும் வெற்றி வாய்ப்பை குறைப்பார், இந்த நேரங்களில் ஜாதகர் முடிந்த அளவிற்கு மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது ஜாதகரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வாராமல் இருக்கும், மேலும் ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் பல முறை சிந்தித்து செயல்படுவது சிறந்தது, எவ்வளவு அவசரமான காரியம் என்றாலும் சரி மிக நிதானமாக பொறுமையாக கையாள்வது ஜாதகருக்கு மிகப்பெரிய நன்மையை வாரி வழங்கும்.

குறிப்பு : 

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளின் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இல்லையெனில் ஜாதகருக்கு கோட்சார ரீதியான, சனி பகவானின் யோக அவயோக பலன்களோ நடைமுறைக்கு வராது என்பதால் ஜாதகர் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக