சனி, 1 நவம்பர், 2014

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையையும், தனது திசையில் வழங்கும் பலன்களும்!




 நவகிரகங்களில் மிக அதிக வலிமை வாய்ந்ததும், தான் அமரும் பாவகத்தின் பலனை முழுவதும் தானே அதிகாரம் செலுத்தும் வல்லமை பெற்றதும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தானே ஏற்று நடத்தும், அதிகாரம் மிக்க ராகு பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்தால் மட்டும் போதாது, தனது திசையில் தான் வலிமை பெற்று அமர்ந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர், ராகு பகவான் அமைப்பில் இருந்து அவர் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், பொதுவாக ராகு பகவான் சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவகங்களில் அமர்ந்தால் மிகுந்த நர்ப்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார் என்பதை பற்றி, இதற்க்கு முன் ஜோதிடதீபம் பல பதிவுகளில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது, ராகு பகவான் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்தாலே போதும், தனது திசைகளில் யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து நடத்துவார் என்ற தவறான கருத்து உள்ளது, இது முற்றிலும் தவறான அணுகு முறை அன்பர்களே!

சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் வலிமை பெற்று அமர்ந்து இருந்தாலும் சரி, வலிமை அற்று அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார், அவர் ஏற்று நடத்து பாவகம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ? என்பதின் அடிப்படையிலேயே ஜாதகருக்கு யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது மிக தெளிவாக அன்பர்கள் புரிந்துகொள்ள இயலும், ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு பகவான் எந்த பாவகத்தில் இருக்கிறார் ? ராகு பகவான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்கும் நிலையை தருகிறார ? தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் :



லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகம் எது ?

ஜாதகர் சிம்ம லக்கினம் ராகு பகவான் அமர்ந்திருப்பது சிம்மத்தில், எனவே பொதுவாக இந்த ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்ளும் ஜோதிடர்கள் ராகு லக்கினத்தில் அமர்ந்து இருப்பதாகவே எடுத்து கொள்வார்கள், இது இந்த ஜாதகத்தை பொதுவாக காணும் பொழுது ஏற்ப்படும் பிழை, உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு பகவான் சிம்ம ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் இருக்கிறார் என்பது சரியானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் சிம்மத்தில் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் உள்ள 161:36:28 பாகையில் முடிவடைகிறது ) ஆக ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, 161:36:28 பாகையில் முடிவடைகிறது. மேற்கண்ட பாகைக்குள் ராகு பகவான் அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு ராகு பகவான் லக்கினத்தில் அமர்ந்ததாக எடுத்துகொள்ள இயலும், ஆனால் இவரது ஜாதகத்தில் ( ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகை 126:20:17 ) எனவே இந்த ஜாதகருக்கு ராகு பகவான் சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜாதக ரீதியான கணிதம், சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கும் உண்மையான பாவக நிலை, ஜாதகருக்கு ( 12ம் பாவகம் கடகத்தில் 101:41:47 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 131:32:59 பாகையில் முடிவடைகிறது ) என்பதை பார்க்கும் பொழுது ராகு  பகவான் 12ம் பாவகத்தில் தான் அமர்ந்து இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்க செய்கிறாரா ?  

பொதுவாக கேந்திர பாவகங்களில் ( பாரம்பரிய ஜோதிடத்தில் 12ம் பாவகத்தை மறைவு ஸ்தானம் என்பர்  இந்த விதி நமது உயர் கணித ஜோதிடத்தில்  பொருத்தது இங்கே 12ம் பாவகத்தை கேந்திரமாகவே எடுத்துகொள்ள வேண்டும் ) அமரும் ராகு பகவான் கேந்திர பாவகத்தை 100% வலிமை பெற செய்வார் அதன் அதிபதி சூரியன்,செவ்வாய்,தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ( 14 பாகைக்குள் சூரியனுடன் சேர்ந்து இருப்பின் ) சனி ஆகிய கிரகங்களாக இருப்பின், சிம்மத்திற்கு அதிபதி சூரியன் என்பதால் இங்கு அமர்ந்த ராகு பகவான்  ஜாதகரின் 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதும் உறுதியாகிறது, ஆக 12ம் பாவகத்தில் அமரும்  ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த இடத்தை வலிமை பெறவே செய்கிறார்  என்பது கவனிக்க தக்க விஷயம்.

ஜாதகருக்கு ராகு பகவான் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ?

இந்த விஷயத்தை தான் நாம் இங்கு மிக கவனமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ராகு 12ல் அமர்ந்து 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதை இதற்க்கு முன் பார்த்தோம், ராகு பகவான் எந்த பாவகத்தின் பலனை தனது திசையில் ஏற்று நடத்துகிறார் என்பதே ஜாதகருக்கு அவரது திசையில் தரும் யோக அவயோக பலன்களை  நிர்ணயம் செய்யும், இந்த ஜாதகருக்கு பாவகத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் ( தனது திசையில் 13,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% சதவிகித அவயோக பலன்களையே வழங்குகிறார் ) என்பது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற போதிலும், தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு யோகத்தை செய்யும் தன்மையை தனது திசையில் இழக்கிறார் என்பது  100% சதவிகிதம் உறுதியாகிறது.

எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, தனது திசையில் சுய ஜாதக அமைப்பின் படி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களும் நன்மைகளும், நவ கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவக வழியல் இருந்து  அனுபவிக்க இயலும் என்பதும், ஜாதகருக்கு குறிப்பிட்ட திசை யோக பலன்களை வழங்குகிறது என்று தெளிவாக எடுத்து உரைக்க இயலும் என்பதும் கவனிக்க தக்கவிஷ்யமாக  ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட கிரகத்தின் திசை நடைபெறும் பொழுது பாதிக்க பட்ட கிரகம் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், நிச்சயம் ஜாதகர் பாதிக்க பட்ட கிரகம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து  யோக பலன்களை அனுபவிப்பர், இதில் எந்த சந்தேகமும் இல்லை, எனவே ஒருவருக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியும் பொழுதே அந்த ஜாதகருக்கு நடைபெறும் பலன்கள் நன்மையா? தீமையா ? என்று ஜோதிடர்களால் நிர்ணயம் செய்ய இயலும், இந்த விஷயம் தெரியாத பொழுது அந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெரும் அன்பர்களின் நிலை விதி விட்ட வழி என்றுதான் சொல்லவேண்டும்.

பலரால் நாகதோஷம்,சர்ப்பதோஷம்,ராகுகேதுஜாதகம், என்று நிர்ணயம் செய்த ஜாதகங்களில் மேற்கண்ட சாய கிரகமான ராகு கேது கிரகம் நல்ல நிலையில் இருந்து, நன்மை தரும் அமைப்பை பெற்று இருப்பதை ஜோதிடதீபம் கண்டுணர்ந்து சம்பந்த பட்டவர்களுக்கு, தெளிவும் சரியான ஜாதக பலனையும்  எடுத்து உரைத்திருகின்றது, ஆக ராகு கேது கிரகங்கள் 1,2,5,6,7,8,12ல் அமர்ந்தாலே தோஷத்தை செய்யும் என்ற முட்டாள் தனமான வாதத்தை உடைத்து எறிந்திருக்கிறது அன்பர்களே! திருமணம் செய்ய  ராகு கேது தோஷம் என்று எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்காமல், ராகு கேது அமர்ந்த இடத்தை வலிமை பெற செய்கிறாரா? தனது திசா புத்திகளில் நன்மையை செய்கிறாரா? என்று சுய ஜாதக ரீதியான தெளிவு பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் என்று ஜோதிடதீபம் வாழ்த்துகிறது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. ஐயா (அண்ணன்) அவர்களுக்கு எனது வணக்கம் ..உங்களின் இந்த பணிக்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....ஐயா நான் கடந்த. ஐந்து மாதமாக ஜோதிடம் படித்து வருகிறேன். எனக்கு ஓரு சந்தேகம். லக்கினாதிபதி தனக்கு தானே தீங்கு செய்துகொள்வாரா.?ஏனென்றால் எனக்கு தற்பொழுது சனி திசா சுக்கிர (லக்கினாதிபதி) புக்தி நடைபெறுகிறது .இப்புக்தி தொடங்கியது முதல் வேலையில் சக ஊழியர்களுடன் பிரச்சினை ,அவமானம்.,ஊதியம் ஒழுங்காக கிடைப்பததில்ல....தாங்கள் தயவு கூர்ந்து பதில் கூறவும்.என்னுடை பிறந்த தேதி 21/12/1983. நேரம் 02:10AM. இடம் நாங்குநேரி.லக் -துலாம்.இராசி-மிதுணம். அரசாங்க வேலைக்கு வாய்ப்புள்ளதா? தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறென்...நன்றி .,..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி உனது லக்கினம் பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் இலக்கின வழியில் இருந்து அதிக தீமையை செய்யும், மேலும் தற்பொழுது நடைபெறும் திசை ஒரு வேலை பாதக ஸ்தான பலனையோ, 2,6,8,12ம் பாவக தொடர்பு பெற்றோ பலனை நடத்தினால் நிச்சயம் தீமையே செய்யும், ஜோதிடதீபம் இலவச ஜாதக ஆலோசனை தருவதில்லை, தங்களது ஜாதகத்திற்கு ஜோதிட ஆலோசனை தேவை எனில் முறையாக ஆலோசனை பெற்று கொள்ளுங்கள், ஜோதிடதீபம் மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

      நீக்கு