செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 2



பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 

முதல் பகுதியின் தொடர்ச்சி ...


மிதுன லக்கினம் :

2 ம் பாவகம் கடகத்தில் செவ்வாய் அமர்வது மிதுன இலக்கின ஜாதகருக்கு நல்ல சொத்து சுகத்தையும் , வண்டிவாகன யோகத்தையும் , நிலையான வருவாயினையும் , பேச்சில் இனிமையும் , குடும்ப வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியினையும் நிச்சயம் தருவார் , மேலும் கடக ராசியில் அமரும் செவ்வாய் தாய் வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை நிச்சயம் தருவார் , மேலும் ஜாதகர் நல்ல குண இயல்பினை நிச்சயம் பெற்றிருப்பார் , முக்கியமாக நிலம் , வீடு , இடம் சம்பந்த பட்ட தொழில் துறையில் ஜாதகருக்கு அபரிவிதமான யோகம் கிடைக்கும் , மேலும் சுய ஜாதகத்தில் மிதுன லக்கினத்திற்கு 2 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் இங்கு அமரும் செவ்வாய் பகவான் , 100 சதவிகிதம்  மிகுந்த யோக பலனையே நிச்சயம் செய்வார் , இந்த இடத்தில் செவ்வாய் பகவானால் எவ்வித பாதிப்பும் நிச்சயம் ஏற்ப்பட வாய்ப்பு இல்லை .

4 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு சிறு  முதலீடு செய்யும் தொழில்களில் அபரிவிதமான முன்னேறத்தை தருகிறார் , மேலும் நிலையான உடல் வலிமையையும் மன  வலிமையையும் அதிக அளவில் தந்துவிடுகிறார் , முக்கியமாக வட்டிக்கு பணம் தரும் தொழில்கள் , நகையின் பேரில் வட்டிக்கு பணம்தரும் தொழில்கள் , ஜாதகர்ருக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை தருகிறது , மேலும் ஜாதகர் வண்டி வாகனத்தின் பேரில் கடன் தருவது , வீடு நிலத்தின் பேரில் கடன் தருவது போன்ற தொழில்கள் சிறப்பாக அமைகிறது , நல்ல குடும்ப வாழ்க்கை ஜாதகருக்கு அமைய இந்த இடத்து செவ்வாய் பகவான் அருள் புரிகிறார் , மேலும் இந்த இடத்தில் அமரும் செவ்வாய் கணவன் மனைவி ஒற்றுமையுடன் குடும்பம் நடத்த உதவி செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் , எனவே செவ்வாய் பாகவான் மிதுன லக்கினத்திற்கு 4 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

7 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் , ஜாதருக்கு 6 ம் பாவகத்திர்க்கும் , 7 ம் பாவகத்திர்க்கும் , 11 ம் பாவகத்திர்க்கும் மேலும்  ஜாதகருக்கும் நன்மையை தருவதில்லை , மிதுன இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு இந்த இடத்தில் செவ்வாய் அமர்வது உடல் மன ரீதியாக தொந்தரவுகளையும்  , கடன் தொந்தரவுகளையும் , தேவையில்லாமல் மற்றவரை பகைத்துக்கொள்ளும் சூழ்நிலையையும் , தீய நண்பர்கள் சேர்க்கையையும் , வாழ்க்கை துணையின் வழியில் அதிக துன்பத்தையும் , முன் கோபத்தால் ஜாதகருக்கு அதிக இளைப்பையும் , பிடிவாத குணத்தால் தனக்கு கிடைக்க வேண்டிய யோக நிலையினை உதறும் சூழ்நிலையையும் தந்துவிடுகிறது , ஒருவேளை மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறிதளவு நன்மை நடக்க வாய்ப்பு உண்டு, இல்லை எனில் ஜாதகர் இந்த பாவக வழியில் இருந்து நன்மையை நிச்சயம் பெற முடியாது .

8 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரும் செல்வந்தன் ஆகும் யோகத்தை தருகிறது , தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து அதிக செல்வ வளத்தை தருகிறது , திருமணத்திற்கு பிறகு ஜாதகருக்கு மிகசிறப்பான யோக வாழ்க்கையினை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கி விடுகிறது , நண்பர்களாலும் , உறவினர்களாலும் அதிக நன்மையையே ஜாதகருக்கு கிடைக்கின்றது , திருமண வாழ்க்கையில் அதிக மன மகிழ்வுடன் இருக்கும் தம்பதியர் என இவர்களை சொல்ல இயலும் , மேலும் ஜாதகுக்கு தனது தகப்பானார் வழியில் இருந்தும் அதிக யோக பலன்களே கிடைக்க பெறுவார் இல்லை எனில் ஜீவன வழியில் அபரிவிதமான யோகம் ஏற்படுகிறது , எனவே செவ்வாய் பாகவான் மிதுன லக்கினத்திற்கு 8 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

12 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு மனநிம்மதியை கெடுத்து விடுகிறார் , மேலும் முதலீடு செய்யும் தொழில்களில் அதிக இழப்புகளையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக துன்பங்களையும் , வருமான பற்றாக்குறையையும் ஏற்ப்பட செவ்வாய் பகவான் காரணம் ஆகி விடுகிறார் , ஒருவகையில் ஜாதகர் புதிய முயற்ச்சிகளில் அதிக லாபத்தையும் , புதிய கண்டுபிடிப்புகள் , புதிதாக சந்தைக்கு வரும் பொருட்களை விற்பனை செய்வதால் அபரிவிதமான செல்வ நிலையை தருகிறார் , வரும் செல்வங்கள் அனைத்தையும் ஜாதகர் கவனமாக சேமித்து வைக்க வில்லை எனில் , அனைத்தும் விரையம் ஆகிவிட வாய்ப்பு உண்டு , மேலும் ஜாதகருக்கு அதிக கோப உணர்வை தந்து தனது வாழ்க்கையில் முன்னேற்ற தடைக்கு தானே காரணமாக வாய்ப்பை ஏற்ப்படுத்திவிடுகிறார் ,மிதுன லக்கினத்திற்கு 12 ல் ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது அதிக  நன்மையை செய்வதில்லை .



கடக லக்கினம் :

2 ம் பாவகம் சிம்மத்தில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு வாழ்க்கை துணையின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தருகிறார் , ஆனாலும் வருமான ஆதாயத்தை அதிகம் தந்துவிடுகிறார் , மேலும் தனது பூர்விக அமைப்பில் பல இன்னல்களை தந்து ஜாதகரின் முன்னேறத்தை தடுத்து விடுகிறார் , மேலும் குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் இருந்தாலும் வெளியில் தெரியாமல் குடும்பம் நடத்தும் யோகம் ஜாதகருக்கு உண்டு , சில நேரங்களில் வாக்கு தவறி நடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் , எனவே ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது , கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியாமாகிறது . தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானங்கள் நல்ல வலிமையுடன் இருக்கும் ஜாதகமாக பார்த்து தேர்வு செய்வது ஜாதகரின் வாழ்க்கையை இனிமையாக இருக்க வழி வகுக்கும் .

4 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமரும் செவ்வாய் பகவான் ஜாதகருக்கு பூர்விக அமைப்பில் இருந்தும் , தொழில் , குடும்ப அமைப்பில் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தருகிறது , தனது பூர்விகத்தில் ஜாதகர் குடியிருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தருகிறது , ஜீவன வழியில் படிப்படியான முன்னேற்றமும் , அளவில்லா சொத்து சுக வாழ்க்கையையும் தந்து அருள் புரிகிறார் செவ்வாய் பகவான் , மேலும் ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து நல்ல ஆதரவை இறுதிவரை ஜாதகருக்கு தருவது செவ்வாய் தரும் நன்மையான பலன் , மேலும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டம்மிக்கவர்களாக காணப்படுகின்றனர் . எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 4 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் .

7 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் பகவான் , கடக இலக்கின ஜாதாருக்கு மிகுந்த அதிர்ஷ்ட வாழ்க்கையையே தருகிறார் , குறிப்பாக சுய தொழில் செய்வதால் அதிக லாபத்தையும் , கூட்டு தொழிலால் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியையும் , களத்திர வழியில் இருந்து மன ரீதியாக ஆதரவையும் , பொருளாதார உதவியையும் , மக்கள் செல்வாக்கால் அதிகார பதவியையும் , நிலையான மக்கள் ஆதரவையும் , நண்பர்கள் வழியில் இருந்து அதிக நன்மைகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறார் , பொதுவாக இங்கு அமரும் செவ்வாய் ஜாதகருக்கு விரைவான முன்னேற்றத்தையும் , வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து யோக வழ்வினையுமே தருகிறார் என்பதே உண்மை எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 7 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் . 

8 ம் பாவகம்  கும்பத்தில்  அமரும் செவ்வாய் பகவான் , கடக இலக்கின ஜாதகருக்கு பூர்விக அமைப்பில் இருந்து 100 சதவிகித தீமையான பலன்களையே தருகிறார், ஆனால் ஜீவன வழியில் இருந்து 200 சதவிகித நன்மையை செய்கிறார் , யாருடைய உதவியும் இன்றி சுயமாக வாழ்க்கையில் தொழில் ரீதியாக வெற்றி பெரும் ஜாதக அமைப்பில்,  இந்த நிலை அதிகம் காணப்படுகிறது , மேலும் குடும்ப வாழ்க்கையில் எவ்வித சிக்கலையும் தருவதில்லை இந்த கும்ப செவ்வாய் , களத்திர வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்ப்படாமல் நன்மையே தருகிறார் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் தனது பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் பெறுவதில்லை என்பதை தவிர வேறு எந்த குறையும் செவ்வாய் பகவானால் ஏற்படுவதில்லை .

12 ம் பாவகம்  மிதுனத்தில் அமரும் செவ்வாய் பகவான் , ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையிலும் , களத்திர வாழ்க்கையிலும் அதிக நன்மைகளையே தருகிறார் , மேலும் வாழ்க்கை துணையின் சகோதர வழியில் இருந்து நல் ஆதரவினையும் , அவர்கள் உதவியால் ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பினையும் தருகிறார் , மன நிம்மதியான வாழ்க்கையினையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும் , எடுக்கும் முயற்ச்சிகளில் நல்ல வெற்றியினையும் இங்கு அமரும் செவ்வாய் பகவான் தர தவறுவதில்லை , தனது சிந்தனை ஆற்றலால் எவ்வித சூழ்நிலையையும் ஜாதகர் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடுகிறது , மேலும் தனது சகோதர அமைப்பிற்கு அதிக உதவிகளை செய்யும் யோகமும் ஜாதகருக்கு கிடைக்கின்றது , சமுதாயத்தில் நல்ல மதிப்பு ,மரியாதை ,செல்வாக்கு ஏற்ப்படுகிறது , ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கின்றது ,எனவே செவ்வாய் பாகவான் கடக லக்கினத்திற்கு 12 ம் பாவகத்தில் அமரும் பொழுது  100 சதவிகிதம்  யோக பலனையே  தருகிறார் . 



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக