செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஜோதிட ஆலோசனை : ஜாதகனுக்கு வயது 32 முடிய போகிறது. இன்னும் திருமணமாகவில்லை



கேள்வி :

  2ம் ஸ்தானமும் 7ம் ஸ்தானமும் கெட்டு இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு ஸ்தனங்களின் அஷ்ட வர்க்க பரல்கள் சராசரியை விட அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று தானே அர்த்தம். அப்படி இருந்தும் திருமணம் ஏன் தாமதமாகிறது? உதரணத்திற்கு (dob : 6th september 1980, 1.30 pm, Rajapalayam) இந்த ஜாதகனுக்கு வயது 32 முடிய போகிறது. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் அஷ்டவர்க்க படி 2 ,7 இடங்கள் நன்றாக உள்ளது. தாங்கள் விளக்கம் குடுங்கள் ஐயா.

 

பதில் :

 

பாராம்பரிய ஜோதிட முறைக்கும் எங்களது ஜோதிட முறைக்கும் உள்ள வேறுபாடே இதுதான் , ஒருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் வலிமையை தெளிவாக தெரிந்து கொள்ள எங்களது ஜோதிட கணிதம் மிகவும் உறுதுணையாக இருக்கும் , பாரம்பரிய ஜோதிட முறை கணிப்பு தவறிவிட வாய்ப்பு உள்ளது, ஆனால் எங்களது ஜோதிட கணிதம் எந்த சூழ்நிலையிலும் தவாறான பலனை நிச்சயம் தருவதில்லை , அஷ்ட வர்க்க பரல்களை வைத்து ஒரு பாவக வலிமையை தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை அன்பரே , மேலும் ஜாதக பலன்களை சரியாக துல்லியமாக சொல்ல பாரம்பரிய கணிப்பு முறை ஜோதிடத்தால் இயலாது , மேலும் சொல்லும் பலன் சரியாகவும் இருப்பதில்லை , இதையெல்லாம் சிலகாலங்கள் அனுபவத்தில்  பார்த்த பிறகுதான் சரியான ஜோதிடத்தை தெரிந்துகொள்ளும் ஆவலினால் எங்களது குரு மூலம் சரியான ஜோதிடத்தை முறையாக கற்றுக்கொண்டு , ஜோதிட ஆலோசனை வழங்கிவருகிறோம்.

 

தாங்கள் அனுப்பிய ஜாதக அமைப்பின் பலன்கள் சில வற்றை மட்டும் தங்களுக்கு தெரிவிக்கிறோம் , மேற்கொண்டு ஜாதக பலன்களை தெரிந்துகொள்ள முன்பதிவு பெற்று ஜாதக ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் .

 

ஜாதகனுக்கு திருமணம் தாமதத்திற்கு முக்கிய காரணம் அவரது சுய ஜாதகத்தில் லக்கினம் தனுசு ராசியாக வருகிறது, இது உபய நெருப்பு தத்துவம் என்ற அமைப்பை பெறுகிறது , பொதுவாக உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7 ம் வீடு , இவரது ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு  பாதக ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் சம்பந்தம் , களத்திர பாவகம் எனும் 7 ம் பாவகம் விரைய ஸ்தானம் எனும்  12 ம் வீட்டுடன் சம்பந்தம், பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் ஜாதகரின், குடும்ப ஸ்தானம் 200 சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது , விரைய ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் களத்திர பாவகம் 66 சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது இந்த நிலையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7 ம் பாவகமும் , குடும்ப ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் பொழுது , இந்த இரண்டு பாவகங்களும் நன்றாக இருக்கிறது என்று எப்படி சொல்ல இயலும் .

 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறவே கூடாது ஆனால் ஜாதகருக்கு மிக முக்கியமான நான்கு  பாவகங்கள் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் , மேலும் களத்திர பாவகம் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் சம்பந்தம் இது ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் அமைப்பு அல்லவா ? ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி 5 வீடுகள் கடுமையான பாதிப்பை பெற்றிருப்பது , அந்த பாவக அமைப்பில் இருந்து அதிக தீமையான பலனை அனுபவிக்க வேண்டிவரும் இந்த பாவக பலன்கள் நடக்கும் திசா புத்தி அமைப்புகளில் என்பதே 100 சதவிகித உண்மையான பலனாகும் , மேலும் நடக்கும் சுக்கிர திசை 7 ம் பாவகம்  12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது அதிக சிரமங்களை , களத்திரம் , கூட்டு தொழில் நண்பர்கள் வழியில் இருந்து தரும் என்பதே உண்மை .

 

சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெற, ஜாதகருக்கு அறிவுரை வழங்குங்கள் அன்பரே !

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக