செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஜோதிட ஆலோசனை : ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா ? இல்லையா ?

  

ஜோதிடர் அவர்களுக்கு வணக்கம் ! 

எனது ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உண்டா ? இல்லையா ? நான் செவ்வாய் தோஷம்  உள்ள பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டுமா ? செவ்வாய் தோஷம் அற்ற பெண்ணை மணந்து கொண்டால் எனது வழக்கை பாதிக்க படுமா ? மேலும் எனது திருமண வாழ்க்கை எனது விருப்பபடி அமையுமா ? தங்களின் மேலான ஆலோசனைக்காக காத்திருக்கிறேன் நன்றி . 

பதில் :
தங்களின் ஜாதக அமைப்பின் படி கும்ப லக்கினத்திற்கு செவ்வாய் பாகவான், சகோதர ஸ்தான அதிபதியாகவும் , ஜீவன ஸ்தான அதிபதியாகவும் வருகிறார் , மேலும் தங்களது இலக்கின அமைப்பிற்கு செவ்வாய் பகவான் களத்திர பாவகத்தில் இருப்பதாக மேலோட்டமாக பார்த்தால் தெரியவரும் ( அதாவது மற்ற ஜோதிடர்களின் கருத்துப்படி செவ்வாய் தோஷம் ) ஆனால் உண்மையில் தங்களது ஜாதக பாவக அமைப்பின் படி செவ்வாய் பகவான் லக்கினத்திற்கு சிம்மத்தில் உள்ள 6 ம் பாவகத்தில் இருக்கிறார் என்பதே முற்றிலும் உண்மை, காரணம் தங்களது ஜாதக அமைப்பின் படி களத்திர பாவகம் சிம்மத்தில் 140:23 பாகை இருந்து கன்னியில் 175:32 பாகை வரை வியாபித்திருக்கிறது. எனவே களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் செவ்வாய் பகவான் இருந்தால் மட்டுமே செவ்வாய் களத்திர பாவகத்தில் இருப்பதாக ஏற்றுகொள்ள முடியும் , ஆனால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் 139:13 பாகையிலே இருப்பதால் செவ்வாய் சிம்மத்தில் உள்ள 6 ம் பாவகத்தில் உள்ளதாகவே நாம் எடுத்துகொள்ள முடியும். 

மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் குடும்பம் ( 2ம் பாவகம் ) களத்திரம் ( 7ம் பாவகம் ) இரண்டும் நல்ல நிலையில் இருப்பின் திருமண வாழ்க்கை சரியான பருவத்தில் , நல்லதொரு வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை , அப்படி பார்க்கும் பொழுது தங்களுடைய ஜாதக அமைப்பின் படி குடும்ப ஸ்தனாம் வெகுவாக பாதிக்க பட்டு இருக்கிறது , இதனால் தங்களுக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் இருந்து தனம் ,குடும்பம் ,வாக்கு அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும், ஆனால் களத்திர பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால், திருமணம் தாமதமாக தங்களது 31 வயதுக்கு மேல் அமையும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம், வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு நல்ல யோகத்தை தருவார் மேலும் தங்களின் விருப்ப படி திருமணம் அமையும், ஒருவகையில் தாங்கள் வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து யோக வாழ்க்கையினை பெற்றாலும் , அவர்களின் பேச்சு தங்களுக்கு அதிக மன உளைச்சலை தரக்கூடும் , இதனால் மனநிம்மதி பாதிக்க படலாம் இதற்க்கு ஒரே தீர்வு தாங்கள் வாழ்க்கை துணை என்ன பேசினாலும்  அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டு வேறு வேலையை கவனிப்பதே அதிக நன்மையை தரும்.

மேலும் தங்களது ஜாதக அமைப்பின் படி செவ்வாய் 6 ம் பாவகத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் தங்களுக்கு இல்லை என்பதே உண்மை, மேலும் ஒருவருடைய களத்திர வாழ்க்கையை செவ்வாய் பாகவான், நிர்ணயம் செய்வதில்லை , களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, எனவே தங்களது ஜாதக அமைப்பிற்கு செவ்வாய் தோஷம் பாதிப்பான பலனை தரும் என்பதெல்லாம் முற்றிலும் தவறான கருத்தாகும் .

உண்மையில் செவ்வாய் தோஷம் என்று ஒன்றும் கிடையாது , மற்ற கிரகங்கள் போல் ஜாதக அமைப்பில் அவரவர் கர்ம வினை பதிவிற்கு ஏற்றார் போல் செவ்வாய் பகவானும் தனது கிரக ஜீவ அலைகள் மூலம் நன்மை தீமை பலனை தருவார் என்பதே உண்மை. 
ஒருவேளை மற்ற ஜோதிடர்கள் கருத்துப்படி செவ்வாய் தங்களுக்கு 
7  ம் வீட்டில்இருந்து தோஷம் செய்கிறார் என்று சொன்னால் கூட அதற்கும் 
வாய்ப்பு இல்லை, காரணம் தங்களது ஜாதக அமைப்பில் செவ்வாய் சிம்மத்தில் உள்ள 6 ம் பாவகத்தில் உள்ளார் எனவே தாங்கள் செவ்வாய் தோஷத்தை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , மேலும் தங்களது திருமண தாமதத்திற்கு ஒரே காரணம் குடும்ப ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டது மட்டுமே , அதுவும் இனிவரும் ஆறுமாத காலங்களில் திருமணம் நிச்சயம் நல்ல முறையில் நடக்கும்.


மேற்கண்ட ஜாதக அமைப்பில் செவ்வாய் தோஷம் உள்ளது கணிதம் செய்வது முற்றிலும் தவறான கணிதமாகும் , மேலும் குறிப்பிட்ட ஜாதகத்தில் செவ்வாய் 6 ம் பாவகத்தில் உள்ளார் என்பதை சிகப்பு வட்டத்தின் மூலம் குறிப்பிட பட்டுள்ளது , ஒருவரது ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி கிரகங்கள் அமர்ந்துள்ள இடத்தை நிர்ணயம் செய்து பலன் காணுவதே ஜாதகத்தில் சரியான பலனை சொல்ல உதவும் , மேலும் எங்களது ஆராய்ச்சியின் படி பல ஜோதிடர்கள் செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கணித்து பலன் சொன்ன பல ஜாதகங்களில் எல்லாம் செவ்வாய் பகவான் மிகசிறப்பான பலனை தந்து கொண்டு இருக்கிறார் என்பது  அனுபவ ரீதியாக கண்ட உண்மை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

 9443355696

1 கருத்து:

  1. தங்கள் விளக்கம் அருமை. மேலும் 2ம் ஸ்தானமும் 7ம் ஸ்தானமும் கெட்டு இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு ஸ்தனங்களின் அஷ்ட வர்க்க பரல்கள் சராசரியை விட அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று தானே அர்த்தம். அப்படி இருந்தும் திருமணம் ஏன் தாமதமாகிறது? உதரணத்திற்கு (dob : 6th september 1980, 1.30 pm, Rajapalayam) இந்த ஜாதகனுக்கு வயது 32 முடிய போகிறது. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் அஷ்டவர்க்க படி 2 ,7 இடங்கள் நன்றாக உள்ளது. தாங்கள் விளக்கம் குடுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு