ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

திருமண தடைகளும் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்புகளும் !


இன்றைய சூழ்நிலையில் திருமணம் செய்வதென்பது சற்று கடினமான காரியமாகவே படுகிறது, இதற்க்கு நாம் பல காரணங்களை அடுக்கினாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று காணப்படும் பொழுதே, இதை போன்ற திருமண தடைகளையும், தாமதத்தை ஜாதகரோ ஜாதகியோ எதிர்கொள்ளும் சூழ்நிலையை பெறுகின்றனர், ஒருவருக்கு திருமண வாழ்க்கை சரியான வயதில் அமையாமல் பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து, சமுதாயத்தில் விரக்தி மன நிலையுடன் ஜீவித்திருக்கும் தன்மையை சுய ஜாதக நிலையே வழங்குகிறது, எந்த ஒரு ஜாதகருக்கும் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும் பாதிக்க படாமல் இருப்பது ஜாதகருக்கு இளம் வயதில் திருமண வாழ்க்கையை மிக சிறப்பாக நடத்தி வைக்கும், தம்பதியரின் திருமண வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமைந்து, வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழையடி வாழையாக செழித்து வாழ்வார்கள்.

இதற்க்கு மாறாக சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ, அல்லது களத்திர ஸ்தானமோ, பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது, மேலும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் ஒருவேளை தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை அதோ கதிதான், ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு பாவகமும் 200% விகித இன்னல்களை தனது பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : மீனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், மீன லக்கினத்திற்கு ( உபய லக்கினம் ) பாதக ஸ்தானமாக வருவது 7ம் பாவகம், இந்த ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறும் வீடுகள் 1,3,4,7,9,11,12 வீடுகள் என 7 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து ஜாதகிக்கு 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருக்கிறது, குறிப்பாக இலக்கின வழியில் இருந்து ஜாதகி சரியான சில முடிவுகளை எடுக்க இயலவில்லை, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர வழியில் உதவ ஆளில்லை, எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வி,4ம் பாவக வழியில் இருந்து தகப்பனாரின் ஆதரவில்லை, தனது பெயரில் எவ்வித சொத்து வீடு, வண்டி வாகனம் இல்லை.

 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, உறவுகளுடனும் இணக்கம் இல்லை, 9ம் பாவக வழியில் இருந்து வீண் அவ பெயர்களை சந்திக்கும் தன்மை, பெரிய மனிதர்களின் பேச்சை கேட்டு நடப்பதில்லை, பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை தருவதில்லை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத நிலை, ஜாதகிக்கு பிற்போக்கு தனமுடன் மூடநம்பிக்கையில் பற்று அதிகம், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு திருப்தியற்ற மன நிலையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசை மேக்கண்ட பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது கவலைக்குரிய விஷயமாகவே படுகிறது, ஜாதகிக்கு வயது 31 முடிந்தும் திருமணம் செய்வதற்கு உண்டான சிறு அறிகுறிகள் கூட இதுவரை தென்படாத நிலைக்கு ஜாதகியின் பெரும்பாலனா பாவகங்கள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், இதற்க்கு முன் நடந்த புதன் திசையும், தற்பொழுது நடைபெறும் கேது திசையும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதுமே காரணமாக அமைகிறது, ஆக ஜாதகி தனது சுய ஜாதக நிலையை உணர்ந்து தனது வாழ்க்கையை அமைத்து கொள்வதே சால சிறந்தது.

அல்லது அனைத்து பாவகமும் வலிமை பெற்ற ஒரு ஜாதகரை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்வதே ஜாதகிக்கு அறிவு சார்ந்த விஷயமாக " ஜோதிடதீபம்  " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: