Monday, July 13, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - மிதுனம்


பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 மிதுன லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 3,7,9,11 பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், சம வீடான 3ம் பாவகத்தில் அமரும்குரு பகவான் மிதுன இலக்கின அன்பர்களுக்கு, எடுக்கும் முயற்ச்சிகளில் ஸ்திரமான வெற்றிகளை வாரி வழங்குவார், விளையாட்டு மற்றும் போட்டி பந்தையங்களில் வெற்றியும், வீரியமிக்க செயல்கள் மூலம் பாராட்டுக்களும், பெயரும் புகழையும் வாரி வழங்குவார், கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்குவார், கமிஷன் மற்றும் தரகு சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு ஏற்றம் மிகுந்த யோக காலமாக இதை கருதலாம், மேலும் சகோதர அமைப்புகளில் இருந்து நன்மைகளும் ஆதரவும்உண்டாகும், மிதுன இலக்கின அன்பர்களின் லட்சியங்கள் கைகூடி வரும், நினைத்த எண்ணங்கள் பலிதமாகும், செயலில் ஒரு வேகமும், புத்திசாலித்தனமும் வெளிப்படும், குல தெய்வத்தின் ஆசியினால் மிதுன இலக்கின அன்பர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

 3ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, வெளிவட்டார பழக்க வழக்கங்களில் மிக கவனமுடனும், எச்சரிக்கையுடனும் கையாள்வது நல்லது, எதிர்பால் அமைப்பினரிடம் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவது சமூகத்தில் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தன்மை தரும், வாழ்க்கை துணையுடன் சிறு சிறு மனகஷ்டங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு என்பதால் அதிகமாக சகிப்பு தன்மையை வளர்த்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தங்களை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் அதிக அன்புடன் நடந்துகொள்வது நல்லது, அவர்களது ஆலோசனையை கேட்டு அதன் படி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்வது வெற்றிகளை தரும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்பு உணர்வுடன் பழகுவது சகல நிலைகளில் இருந்தும் யோகத்தை தரும்.

3ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, அறிவாற்றலில் சற்று பின்னடைவை தரக்கூடும், மிதுன இலக்கின அன்பர்களின் அறிவு திறனும் செயல்திறனும் முழுமையாக தனக்கு பயன்தராமல், மற்றவர்களுக்கு நன்மைகளை தரக்கூடும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் என்றபோதிலும் விட முயற்சியுடன் சில விஷயங்களை கையாண்டு வெற்றி காணும் வாய்ப்பை தரும்,  ஆன்மீக பயணங்கள் மூலம் சிறந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், முன் பின் அறிமுகம் இல்ல நபர்கள் அல்லது வெளிநாட்டினர், வேற்று மதத்தை சார்ந்த அன்பர்கள் மூலம் நல்ல லாபங்கள் கிடைக்கும், வெளிநாடு வெளியூர் பயணங்கள் மூலம் மிகுந்த லாபம் உண்டாகும், பெரிய மனிதர்களின் ஆதரவு ஜாதகருக்கு திடீர் முன்னேற்றங்களை வாரி வழங்க கூடும் என்பதால் ஜாதகர் தன்னுடன் பழகும் பெரிய மனிதர்களின் உதவியை தைரியமாக  நாடி நன்மை பெறலாம், எந்த ஒரு காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து அதன் பிறகு செய்வதே தங்களுக்கு 9ம் பாவக வழியில் இருந்து நன்மையையும், யோகத்தையும் வாரி வழங்கும்.

 3ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை வசீகரிப்பது மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மிதமிஞ்சிய லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும், முற்போக்கு சிந்தனையுடனும், மன உறுதியுடனும் செய்யும் காரியங்கள் யாவும் 100% விகித வெற்றிகளை வாரி குவிக்கும், உடல் மனம் இரண்டும் ஜாதகருக்கு பரிபூரண ஒத்துழைப்பை வாரி வழங்கும், தொழில்நுட்பம் சார்ந்த வழியில் ஜீவனம் கொண்டுள்ள அன்பர்களுக்கு இது ஒரு சிறப்பான யோககாலமாக கருதலாம், தனது செயல்திறன் மூலம் பணியாற்றும் இடத்தில் திடீர் பதவி உயர்வையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், ஆராய்ச்சி படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் பரிபூர்ண நல்லாசிகள் கிடைக்கும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் கிடைக்கும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு எதிர்பாராத லாபமும், தொழில் விருத்தியும் உண்டாகும், லாப ஸ்தான பலன்களை 100% விகிதம் அனுபவிக்கும் தன்மையை மிதுன இலக்கின அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.

குறிப்பு : 

மிதுன இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 3,7,9,11 ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 3,7,9,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மிதுன லக்கினமே முதல் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

No comments:

Post a Comment