லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்சத்திரம் : அஸ்தம் 2ம் பாதம்
ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் சர நீர் ராசியான கடகத்தில் அமைகிறது, சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை காட்டுகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாக அமைவது ஜாதகரை வாகன தொழில் துறையில் ஈடுபாட்டை தந்தது கனரக வாகனங்களை இயக்குவதில் நல்ல தேர்ச்சியும், நல்ல அனுபவத்தையும் தந்தது, எனவே ஜாதகர் தனது உறவினர் ஒருவரின் கனரக வாகனத்தை இயக்கம் பொறுப்பை பெற்றார், இந்த தொழிலில் ஜாதகருக்கு நல்ல அனுபவமும் நிர்வாக திறமையும் குறுகிய காலத்தில் கிடைத்தபோதிலும், ஜாதகர் தனது சுய முன்னேற்றத்திற்கு உண்டான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், தனது உறவினரின் தொழில் முன்னேற்றம் பெறுவதற்காகவே தனது அனுபவத்தையும் உழைப்பையும் முழுவதையும் செயல்படுத்தினர், இதன் விளைவாக தொழில் நல்ல விருத்தியும் அதிக லாபத்தையும் பெற்றது, உறவினருக்கு கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து குவிந்தது, வண்டி வாகனங்கள் பெருகியது, ஆனால் ஜாதகருக்கு கிடைத்ததோ வெறும் மாத சம்பளம் மட்டுமே.
சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசையும் சரி இதற்க்கு முன் நடந்த திசையும் சரி ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நல்ல யோக பலன்களையே தந்த போதிலும், ஜாதகருக்கு இதனால் பயன் ஏதும் இல்லை கடந்த 12 வருடங்களாக வண்டி வாகன துறையில் நல்ல அனுபவமும் சிறந்த நிர்வாக திறனையும் பெற்ற போதிலும் ஜாதகரின் முன்னேற்றம் மட்டும் கிணறில் இட்ட கல் போல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இனி சிந்திப்போம் அன்பர்களே !
1) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும். தனது சுய வாழ்க்கைக்கு உண்டான முயற்ச்சிகளை எடுக்க வைக்கும், வீர்ய ஸ்தானமான 3ம் பாவகம் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பெற்றது, ஜாதகரின் சுய முன்னேற்ற தன்மையை வெகுவாக பாதித்தது, இது சார்ந்த சிந்தனைகளுக்கு ஜாதகர் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது கவனிக்கதக்கது, மேலும் 3ம் பாவகம் வலிமை குறைந்தது, ஜாதகரின் மன தைரியத்தை வெகுவாக குறைத்து மற்றவர்களின் நிழலில் அண்டி வாழும் சூழ்நிலையை தந்து, தனது எதிர்கால முன்னேற்றத்தை பற்றிய சிந்தனைக்களுக்கு ஜாதகரே எதிர்மறையான எண்ணத்தை மனதில் விதைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்தை பாதிக்கும் வண்ணமாக அமைந்தது.
2) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், வலிமையான பூர்வ புண்ணிய ஸ்தான பலன்களை அனுபவிக்கும் தன்மையில்லாமல், தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி 200 மையில் தொலைவு அப்பால் ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டது, ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை கேள்விக்குறியாக மாற்றியது, ஜாதகருக்கு பூர்வீகத்தில்தான் ஜீவன முன்னேற்றம் என்ற அமைப்பு உள்ள பொழுது ( சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருப்பது ) தனது தொழில் மற்றும் ஜீவனத்தை தனது பூர்வீகத்தில் அமைத்து கொள்ளாமல், பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று தனது ஜீவனத்தை அமைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்திற்கு ஜாதகரே வைத்துகொண்ட வினை என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல இயலும், ஜாதகருக்கு பூர்வீகம் வலிமை பெற்று பூர்விகத்தை விட்டு வெளியேறியது ஜாதகரின் திருமண தாமத்தை தந்தது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து கிடைக்கும் யோக பலன்களை வெகுவாக குறைத்தது, ஏனெனில் ஜாதகரின் புத்திசாலித்தனமும் அறிவும் பூர்விகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு பயன் தரும்.
3) ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மாறும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் அனைத்தும் ஜாதகரை சார்ந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவிக்கும் தன்மையை தந்தது, மேலும் ஜாதகரின் பிறப்பின் பலனை அனுபவிக்க வைக்கும் 11ம் பாவகம் ஜாதகருக்கு எதிராக அமைந்தது கவலைப்படவேண்டிய விஷயம், ஜாதகரின் மூடநம்பிக்கைகள், பிற்போக்கு தனமான சிந்தனைகள், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகருக்கு எதிராக அமைந்தது, மனதில் உறுதி, லட்சியத்தில் உறுதி, விடா முயற்ச்சி எனப்படும் விஷயங்களை வழங்கும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில் 200% விகித பாதிப்பை பெற்றது மேற்கண்ட விஷயங்களில் இருந்து சிறிய அளவில் கூட நன்மையை தர இயலவில்லை, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றது சிறப்பானது, நடந்த,நடைபெற்று கொண்டு இருக்கிற,நடைபெற போகிற திசைகள் யாவும் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிய போதிலும், ஜாதகர் 3,5,6,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் தடைகளையே சந்திப்பது வருந்ததக்கது.
4) ஜாதகர் முதலில் தனது பூர்வீகத்தில் குடியேறி ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, இது 5ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை 100% விகிதம் வாரி வழங்கும், தனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுய பரிசீலனை செய்துகொள்வது மிகுந்த நன்மையை தரும், வீண் கற்பனைகளையும், எதிர்மறை சிந்தனைகளையும் பிற்போக்கு எண்ணங்களையும் விட்டு விட்டு சரியான பாதையை வகுத்துகொல்வது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை அனுபவிக்க உதவும், சுய முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத வரை ஜாதகரின் ஜீவன பாவக வலிமை பலன் தறதாதகவோ, மற்றவர்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும் தன்மையிலோ செயல்படும் என்பது இந்த ஜாதகத்தில் கவனிக்க தக்க அம்சமாக ஜோதிடதீபம் கருதுகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக